சிறகடிக்க ஆசை: சீதா ரெஜிஸ்டர் மேரேஜ், முத்துவிடம் சிக்கிய மீனா.. மொத்த குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோடில் மீனா சீதாவின் ரெஜிஸ்டர் மேரேஜுக்கு போகும்போது முத்துவிடம் சிக்குகிறார். அதே நேரத்தில் அண்ணாமலை குடும்பத்திற்கு விஜயா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து, அண்ணாமலை, ரவி, ஸ்ருதி என எல்லோரும் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது விஜயாவும் பார்வதியும் பாவாடை தாவணியில் வர அதைப்பார்த்து முத்து அதிர்ச்சியில் உட்கார்ந்து இருக்க, என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டே எல்லோரும் திரும்பி பார்க்க அனைவரும் விஜயாவை பார்த்து அதிர்ச்சியாக நிற்கின்றனர். அதற்கு விஜயா என்ன இப்ப எல்லாரும் இப்படி பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு அண்ணாமலை என்ன கோலம் இது என்று விஜயாவிடம் கேட்டதும் நாங்க பிறந்தநாள் பார்ட்டிக்கு போடுற டிரஸ் கோடு என்று சொன்னதும் முத்து அப்பா அம்மாவிடம் தெருவில் அதிகமாக நாய் இருக்குன்னு சொல்லுப்பா என் கிண்டல் செய்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயா செய்த செயல்

ஆனால் விஜயா அதை கண்டு கொள்ளாமல் ரூமுக்கு சென்று ரோகிணி வாங்கி கொடுத்த நகையை போட்டுக்கொண்டு வந்து, இந்த டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க, சூப்பரா இருக்கு ஆன்ட்டி என்று ரோகிணி சொல்கிறார். முத்து என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று வெளியே கிளம்பி கிளம்புகிறார். அப்போது மீனாவிடம் நாளைக்கு கல்யாண விருந்து மாதிரி சாப்பாடு போடணும் என்று சொல்ல, மீனா என்ன என்று விசாரிக்க சத்யா பாஸ் ஆனதுக்கு தான் என்று சொல்கிறார்.

சிக்கும் மீனா

அதற்கு மீனா நாளைக்கு எனக்கு கொஞ்சம் காலையில் வேலை இருக்கு என்று சொல்கிறார். என்ன விஷயம் என்று முத்து விசாரிக்க தெரிஞ்சவங்களுக்கு கல்யாணம் மாலை கொடுக்கணும் என்று மீனா சொன்னதும், வேற யாருகிட்டயாவாது கொடு என்று சொல்ல, இல்லை அந்த பொண்ணு என்னுடைய தங்கச்சி மாதிரி என்று மீனா சொன்னதும் சரி என்று முத்துவும் சொல்லி விடுகிறார். மறுபக்கத்தில் ஷோரூமில் ரோகிணி மனோஜிடம் கொடைக்கானலில் தங்குவதற்கு ரூம் ரெடி பண்ணி இருக்கிறேன் நாம டிராவல் மட்டும் பார்த்துக்கிட்டா போதும் மற்றதையெல்லாம் தெரிந்த கிளைண்டும் மூலம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார்.

ரோகிணிக்கு வந்த பார்சல்

அதற்கு மனோஜ் அம்மாகிட்ட கேட்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரோகிணிக்கு பார்சல் ஒன்று வருகிறது. அதில் ஒரு புடவை இருக்கிறது. அதை நான் ஆன்டிக்காக தான் வாங்கினேன் என்று ரோகிணி சொன்னதும் சரி இந்த புடவை கொடுத்து பேசி பார்க்கலாம் என்று மனோஜ் சொல்கிறார். அடுத்ததாக கொஞ்ச நேரத்தில் ரோகிணியின் அம்மா போன் செய்ததும் ரோகிணி வெளியே வந்து தனியாக பேசுகிறார்.

அம்மாவிடம் பேசிய ரோகிணி

அப்போது கல்யாணி கிரிஷ் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து பாஸ் பண்ணி இருக்கிறான் என்று சொன்னதும், ரோகிணி சந்தோஷப்படுகிறார். அப்போது கிரிஷ் ரோகிணியை இன்னைக்கு பார்க்கணும் என்று வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட சரி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். அப்போது வந்த மனோஜ் இன்னைக்கு ஃபுல்லா நீ என் கூட தான் இருக்கணும் ரொம்ப நாள் கழிச்சு ஷோரும் வந்திருக்க என்று சொல்ல ரோகிணி வேறு வழியில்லாமல் இன்னைக்கு வர முடியாது என்று அம்மாவுக்கு போன் பண்ணி சொல்கிறார்.

மறுபக்கத்தில் விஜயாவும் பார்வதியும் சிந்தாமணியின் பிறந்தநாள் பங்ஷனுக்கு போகின்றனர். அங்கு சிந்தாமணியும் பாவாடை தாவணி கெட்டப்பில் இருக்க அவர் விஜயாவை பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+