சிறகடிக்க ஆசை: மீனாவுக்காக உதவிய போலீஸ்காரர் அருண்.. முத்து செய்த செயல்.. வெடித்தது அடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 21 ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவிற்காக போலீஸ்காரர் அருண் பண உதவி செய்கிறார். ஆனால் முத்து மீனாவிடம் கோபப்பட்டு சண்டை போடுகிறார். அதுபோல ஸ்ருதியால் அடுத்த பிரச்சனை வருகிறது.

இன்றைய எபிசோடில் சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு அருணை வர சொல்லி இருக்கிறார். அவரிடம் அக்காவுக்கு ஆர்டர் எடுப்பதற்காக பணம் தேவைப்படுகிறது உங்களுக்கு தெரிந்தவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி தர முடியுமா என்று கேட்க, அதற்கு அருண் நான் போலீஸ் வேலை பார்த்துட்டு வட்டிக்கு பணம் வாங்குனா அது நாளைக்கு பிரச்சனையாகிடும் அதனால யாருகிட்டயும் வாங்க மாட்டேன். ஆனால் என்கிட்ட ஒரு லட்சம் பணம் இருக்கு. அதை நான் தரேன் என்று சொல்ல முதலில் சீதா வாங்க மறுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

உதவி செய்த அருண்

பிறகு அருண் சமாதானம் செய்ததும் சரி என்று வாங்கிக் கொள்கிறார். மறுபக்கத்தில் முத்து டைனிங் டேபிளில் இருக்கும்போது மீனா பிளாஸ்டிக்கில் டீ கொண்டு கொடுக்கிறார். அதை ஊற்றி கொடு என்று முத்து கேட்க அதற்கு மீனா உங்களுக்கு மத்ததெல்லாம் ஊத்தி குடிக்க தெரியுது அதே மாதிரி இதையும் ஊத்தி குடிங்க என்று கோபமாக சொல்கிறார். அந்த நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் வருகிறார்கள்.

ரவி கேட்ட கேள்வி

அவர்கள் நேற்று இரவு என்னடா ரொம்ப சத்தம் கேட்டுச்சு என்று கேட்க, அதற்கு முத்து பக்கத்து வீட்டுக்காரங்க வீட்டை காலி பண்றாங்கன்னு நினைக்கிறேன் அங்கிருந்து சத்தம் வந்திருக்கு போல என்று சமாளிக்கிறார். ஆனால் ரவி முத்துவிடம் இவ்வளவு நாளா நல்லாதானே இருந்த இப்போ ஏன் மறுபடியும் குடிக்க தொடங்கியிருக்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு முத்து அந்த கான்ஸ்டபிள் ரொம்ப பிரச்சனை பண்ணுனான் அதனாலதான் நான் குடிச்சிட்டேன் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

சண்டை போடும் முத்து

அதற்கு மீனா சொன்னது போலவே ரவியும் ஸ்ருதியும் செக் பண்றது அவங்களுடைய வேலை அவங்க அவங்களோட வேலையை தானே பார்த்தாரு அதுக்காக நீங்க ஏன் டென்ஷன் ஆக்குனீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு மீனா புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாம அந்த போலீஸ்காரனுக்கு சப்போர்ட் பண்றா, அவனா இவளுக்கு படி அளக்கிறான்? இவளுக்கு அவன் ஏதாவது நல்லது செய்றானா என்று முத்து கேட்டுக்கொண்டே இருக்க மீனா இதுக்கு மேல இவர்கிட்ட என்னால பேச முடியாது என்று பூ கொடுக்க கிளம்புகிறார்.

கோபத்தில் சீதா

அந்த நேரத்தில் சீதா போன் செய்து தன்னுடைய ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்கிறார் உடனே மீனா ரவி மற்றும் ஸ்ருதியிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனால் முத்து கோபப்படுகிறார். நான் ஒருத்தன் இங்கே இருக்கிறேன் ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம போறா பாரு என்று சொல்லிக் கொண்டிருக்க ரவி முத்துவிடம் உன்னால தான் அண்ணி கோபமா போறாங்க.

Siragadikka aasai serial vijay tv

மீனாவுக்கு பணம் கிடைத்தது

சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட தெரியல. அவங்க எப்படி உன் கிட்ட சொல்லிட்டு போவாங்க என்று கேள்வி கேட்கிறார். பிறகு சீதாவை மீனா பார்க்கும்போது மீனா ஒரு லட்சம் பணத்தை கொடுக்கிறார். என்னுடைய நண்பரிடம் தான் வாங்கினேன் உனக்கு பணம் கிடைத்ததும் கொடு என்று சொல்ல முதலில் மீனா தயங்குகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஸ்ருதி செய்த செயல்

அடுத்ததாக ரெஸ்டாரண்டில் ஸ்ருதி ஆர்டர் எடுத்துக் கொண்டிருக்கிறார் இரண்டு பேர் வந்து ஸ்ருதியிடம் டபுள் மீனிங்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் கேட்ட சூப்பில் மிளகாய் தூள் கலந்து கொடுத்து விடுகிறார். இதனால் அவர்கள் குடித்துவிட்டு சத்தம் போடுகிறார்கள். அப்போது அங்கு வரும் நீத்து மற்றும் ரவி என்ன பிரச்சனை என்று கேட்க, அவர்கள் என்கிட்ட டபுள் மீனிங்ல பேசினாங்க அவங்க சாப்பிட வரல அதனாலதான் இப்படி பண்ணினேன் என்று சொல்ல அதற்கு நீத்து உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும் அல்லது ரவி கிட்ட சொல்லி இருக்கணும் நீங்க இப்படி பண்ணி இருக்கீங்க? இதனால எனக்கு ஹோட்டலுக்கு வர மாட்டார்கள் என்று திட்டி கொண்டு இருக்கும் போது அந்த இரண்டு பேரும் நாங்க ரிவ்யூ மோசமா தான் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.

மன்னிப்பு கேட்ட ரவி

அதற்கு நேத்து கஸ்டமரிடம் மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி ரெஸ்பெக்ட் தான் முக்கியம் என் மேல எந்த தப்பும் இல்லை அதனால நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் நீங்க வேலையை விட்டு நிறுத்தினாலும் பிரச்சனை இல்ல என்று சொல்லி விடுகிறார். ஸ்ருதி அங்கிருந்து போனதும் ரவி நீத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

காய்ச்சலில் மனோஜ்

அதற்கு நீத்து இந்த ஒரு முறை மன்னிக்கிறேன் ஆனால் இன்னொரு முறை இப்படி நடந்துச்சுன்னா நான் வேலையை விட்டு நிறுத்திடுவேன் என்று சொல்கிறார். அடுத்ததாக இரவு மனோஜ்க்கு குளிர் காய்ச்சல் வருகிறது இதனால் ரோகிணி அவருக்கு டீ போட்டுக் கொடுத்து அவர் பக்கத்திலே இருந்து பார்த்துக்கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+