சிறகடிக்க ஆசை: நகையால் முத்துவிடம் சிக்கிய ரோகிணி.. வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. விஜயா கொடுத்த பனிஷ்மென்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க சீரியலில் 2025 ஜூன் 21 ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி திருட்டு நகை வாங்கிய விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. நகை விஷயத்தை வைத்து முத்து ரோகிணியிடம் கேள்வி கேட்க விஜயா அவமானத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிந்தாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயா டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார். அப்போது நகை கடை குடும்பத்தை சார்ந்த ஒரு பெண் வருகிறார். அவரிடம் சிந்தாமணி விஜயாவை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது விஜயா கழுத்தில் இருக்கும் நகையை பார்த்ததும் அந்த பெண இந்த நகை என்னுடையது நான் வாக்கிங் போகும்போது ஒருவன் இதை திருடிட்டு போயிட்டான் என்று சொல்ல விஜயா அப்படி இருக்காது இது என்னுடைய மருமகள் எனக்காக வாங்கி கொடுத்த நகை என்று சொல்கிறார்.

அசிங்கப்பட்ட விஜயா
அப்போது அந்த பெண் என்னுடைய கணவர் பெயரும் என்னுடைய பெயரும் அந்த நகைக்கு பின்னாடி இருக்கும், அந்த நகையில் ஒரு ஸ்டோன் கூட இல்லாமல் இருக்கும் என்று சொன்னதும் அதை பார்க்க சொல்லி சிந்தாமணி சொல்கிறார். அப்போது விஜயா என்ன சந்தேகப்படுறீங்களா என்று கேட்க, இல்ல மாஸ்டர் பிரச்சனை என்று வந்துட்டா அதை தீர்த்து வைக்கிறது தான் சரி என்று சொல்கிறார்.
பிறகு அதில் செக் பண்ணி பார்க்கும்போது அந்தப் பெண்ணின் இன்சியலும் அவருடைய கணவரை இன்சியலும் இருக்கிறது. இதனால் விஜயா அவமானத்தில் இருக்கிறார். அப்போது அந்த பெண் நீங்க திருட்டு குடும்பத்தை சார்ந்தவங்க, என்கிட்ட இருந்து திருடுனது திருடன் இல்ல திருடி. உங்க மருமக திருடி என்று போலீசுக்கு போன் செய்யப் போகிறார். அதற்கு சிந்தாமணி என்னுடைய பிறந்தநாளில் போலீஸ் வர வேண்டாம் மாஸ்டர் நீங்க அந்த நகையை கொடுத்திருங்க என்று சொல்ல, விஜயாவும் வேறு வழியில்லாமல் நகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து கோபமாக வீட்டிற்கு வருகிறார்.
ரோகிணிக்கு விழுந்த அடி
மறுபக்கத்தில் மனோஜும் ரோகிணியும் வீட்டிற்குள் வருகின்றனர். ரோகிணி தான் வாங்கிய புடவையை கொடுத்து உங்களுக்காக ஆன்லைனில் இதை வாங்கினேன் என்று சொல்ல, இந்த புடவை எந்த கடையில் திருடுன என்று விஜயா அந்த புடவையை வைத்து ரோகிணியை அடிக்கிறார். என்ன நடந்தது என்று தெரியாமல் மனோஜ் திணறிக் கொண்டிருக்கும்போது மொத்த குடும்பத்தினரும் வந்து விசாரிக்கின்றனர்.
அப்போது இவ அன்னைக்கு வாங்கிட்டு வந்த நகை திருட்டு நகை. பங்ஷனுக்கு போன இடத்தில் ஒரு பொம்பளை வந்து சொல்லி என்ன அவமானப்படுத்திட்டா என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அப்போ அந்த சிட்டி நம்மிடம் ஏமாற்றி விட்டானா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த நகையை யாரிடம் வாங்கினீங்க என்று முத்து கேட்கிறார்.
விஜயாவின் பனிஷ்மென்ட்
அதற்கு நான் நகை வாங்குனவரிடம் பணத்தை வாங்கிட்டு வரேன் என்று சொல்கிறார். அதற்கு கடைசியாக விஜயா இந்த நகை ஒரு லட்ச ரூபாய்க்கு நீ வாங்கி இருக்க இந்த ஒரு லட்சம் ரூபாய் எனக்கு வந்து சேரனும். உன்னால் நான் பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடு என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications