சிறகடிக்க ஆசை: முத்து, மீனாவிடம் நிஜமாகவே மாட்டிய மணி.. மொத்த உண்மை உடைந்தது! அண்ணாமலை கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 24ஆம் தேதிக்கான எபிசோடில் மணி முத்து மற்றும் மீனாவிடம் வசமாக சிக்குகிறார். பிரவுன் மணியை முத்துவும் மீனாவும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அப்போது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

ரோகிணி மாட்டும் விஷயம் நடக்குமா? நடக்காதா என்ற எதிர்பார்ப்போடு இரண்டு நாட்களாக தவித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடில் செம சர்ப்ரைஸ் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் கறிக்கடைக்காரர் மணியும் பரசுவும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

எதிர்பாராத சம்பவம்

அப்போதும் மணி கல்யாணம் நல்லபடியா முடிச்சிட்டு ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உங்களுடைய பிரெண்டின் குடும்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கல என்று சொல்ல அதற்கு கவலைப்பட வேண்டாம் என் பிரண்டோட மகனும் மருமகளும் எங்கே தான் இருக்காங்க அவங்க கிட்ட உங்களை கூட்டிட்டு போறேன், ஒரு திருட்டு ஜோடி மண்டபத்தில் வந்து நகை எல்லாம் திருடிட்டு போனாங்க அவங்க கிட்ட இருந்து நகை எல்லாம் காப்பாத்தி இருக்காங்க என்று சொன்னது மணி அவர்களுக்கு மாலை மரியாதை செய்ய வேண்டும் என்று கையில் இரண்டு மாலையையும் மேள தாளத்துடன் வருகிறார்.

அதிர்ச்சியில் முத்து

அப்போது முத்துவும் மீனாவும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மீனா கையில் அடிபட்டது குறித்து முத்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது மேள சத்தம் கேட்பதை பார்த்து திருப்பி பார்க்க அங்கு மணியைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பரசு கறிக்கடைக்காரர் மணியை பற்றி பெருமையாக சொல்ல முத்துவும் மீனாவும் எதுவும் பேசாமல் அமைதியாக அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.

மாட்டிக்கொண்ட கறி கடைக்காரர்

பிறகு இவரு நிறைய வேலை பண்ணி இருக்காரு. இவரு பண்ணின வேலைக்கு இவருக்கு தான் மாலை மரியாதை போடணும் என்று மணி கொண்டு வந்த மாலையை அவர் கழுத்தில் போட்டு விடுகிறார். இதனால் மணி அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, இவர் பண்ணுன வேலைக்கு இங்க வச்சு மரியாதை கொடுக்குறதை விட தனியா கவனிக்கனும் என்று மணியின் தோளில் கை போட்டு தனியாக கூட்டிக்கொண்டு வருகிறார்.

அசிங்கப்படுத்தும் விஜயா

மறுபக்கத்தில் விஜயாவும் அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜயா ஸ்ருதி மற்றும் ரோகிணி பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கூட்டிட்டு வந்தா மருமக தான் பூகட்டுறவ என்று நக்கல் அடித்துக் கொண்டிருக்கும் போது முத்துவும் மீனாவும் வருகிறார்கள். அவர்களிடம் வேலை எல்லாம் முடிஞ்சுதா என்று அண்ணாமலை கேட்க, பரசு மாமா வீட்டிற்கு சடங்கு பண்ண அனுப்பி இருக்காங்க எங்களையும் கூப்பிட்டாங்க என்று சொல்ல அப்போ நீங்க போக வேண்டியது தானே என்று அண்ணாமலை கேட்கிறார்.

கோபப்பட்ட ரோகிணி

இல்லப்பா நம்ம வீட்டில் ஒரு சடங்கு இருக்கு அதனாலதான் நாங்க இங்க வந்துட்டோம் என்று சொன்னதும், நம்ம வீட்ல சடங்கா? என்ன என்று கேட்க, முத்து ரவி மற்றும் ஸ்ருதி எங்கே என்று கேட்க அவர்கள் ஹனிமூன் போயிருக்காங்க என்று சொல்கிறார். பிறகு மனோஜ் இருக்கானா என்று கூப்பிடுகிறார். அவர்கள் வந்ததும் அண்ணாமலையிடம் பாட்டி ஒரு நரி கதை சொல்லுவாங்கல.. அந்த கதையில் நரி பலவேசம் போடும் ஒரு நாள் எல்லாமே கலைந்து போயிடும். அது எனக்கு இப்பதான் புரியுது என்று சொல்ல, ரோகிணி இப்போ எதுக்கு இவர் தேவையில்லாம பேசிட்டு இருக்கிறாரு என்று கோபப்படுகிறார்.

வீட்டுக்கு வந்த மணி

அதற்கு கொஞ்சம் இருங்க பார்லர் அம்மா, இன்னைக்கு எல்லாருடைய வேஷமும் களையபோகுது என்று சொல்லி மாமா மாமா என கூப்பிட பிரவுன் பண்ணி வந்து நிற்கிறார். அவரைப் பார்த்தது ரோகிணி அதிர்ச்சியில் இருக்க விஜயா மற்றும் ஒரு மனோஜ் இருவரும் ஓடி சென்று சம்மந்தி வாங்க என்று கூப்பிடுகிறார்கள்.

விஜயாவின் கேள்வி

விஜயா அவரிடம் ரோகிணி அப்பா இறந்துட்டாரு, அவரு சொத்து என்ன ஆச்சு? கேஸ் முடிஞ்சிடுச்சா? ரோகிணிக்கு சொத்து வந்துரும்ல என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அப்போது மனோஜ் நான் பணம் தேவைப்பட்டது என்று சொன்னேனே எடுத்துட்டு வந்திருக்கீங்களா என்று கேட்க பிரவுன் மணி எதுவும் பேசாமல் அதிர்ச்சியாக இருக்கிறார்.

ஏமாறும் அண்ணாமலை

அப்போது முத்து குடும்பத்தினரிடம் ரோகிணி அங்கிள் அங்கிள்னு சொல்றாங்களே அதோட அர்த்தம் என்ன தெரியுமா அப்பா? மாமா தானே அர்த்தம் ஆனா இவரு யாருக்கு மாமா தெரியுமா? பரசு மாமாவோட மாப்பிள்ளையோட தாய் மாமா என்று சொல்ல எல்லோரும் ஒன்றும் புரியாமல் இருக்கிறார்கள். அப்போ இவங்க சொந்தக்காரங்களா ரோகிணிக்கும் பரசு குடும்பமும் சொந்தக்காரர் ஃபேமிலியா என்று அண்ணாமலை கேட்கிறார்.

மனோஜ் கேட்ட கேள்வி

அதற்கு முத்து நீ அநியாயத்துக்கு நல்லவிதமா யோசிக்காதப்பா. இப்படி எல்லாம் இருக்கிறதால தான் நம்ம ஈஸியா ஏமாத்திட்டாங்க என்று சொன்னதும் அண்ணாமலையும் விஜயாவும் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பரசு மாமா நம்மகிட்ட தாய் மாமாவை அறிமுகப்படுத்தனும்னு சொன்னாங்களே அது இவர்தான். அதனாலதான் இவரை பார்த்த உடனே நான் கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

வசமாக மாட்டிய ரோகிணி

மனோஜ் இவங்க பெரிய பணக்காரங்க ஆனா பரசு மாமா குடும்பம் எப்படி சொந்தமாக முடியும் என்று கேட்கிறார். அப்போது ரோகிணி மணியை அங்கிருந்து அனுப்புவதற்காக முயற்சி செய்கிறார். நீங்கள் ஹோட்டல்ல தங்கி இருக்கீங்களா வாங்க நம்ம தனியா போய் பேசலாம் என்று கூப்பிட முத்து அவரை அனுப்பாமல் இன்றைக்கு நிறைய விஷயங்கள் பேசணும் என்று உட்கார வைக்கிறார். அதோடு இவரு நிறைய விஷயங்களை நம்ம குடும்பத்துக்கிட்ட சொல்லணும், அதுவும் எல்லாரும் இருக்கும்போது சொல்லணும்னு நாங்க ஆசைப்பட்டோம். அதனால தான் அவரை கூட்டிட்டு வந்திருக்கிறோம், இன்றைக்கு சிலருடைய சாயம் வெளுக்க போகிறது என்று முத்து சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இத்தனை நாட்களாக ரோகிணி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்த தருணம் இப்போது வந்திருக்கிறது. ஆனாலும் நாளைக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை வீட்டை விட்டு துரத்துவது போன்று காட்சிகள் காட்டப்படுகிறது. இன்று நடந்தது வரைக்கும் இது உண்மை காட்சிகள் போல தான் தெரிகிறது. ஆனாலும் நாளை என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+