சிறகடிக்க ஆசை: போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ்.. ரோகிணி எடுத்த முடிவு.. முத்துக்கு கிடைத்த செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் தவறாக பேசுவதால் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அதே நேரத்தில் ரோகிணி தன்னுடைய வாழ்க்கைக்காக முக்கிய முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பார்வதி மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா உன்னை எவ்வளவு மட்டம் தட்டி பேசினா அதுக்காகத்தான் இப்ப அவளுக்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல, அப்படி எல்லாம் நான் நினைக்கல என்று மீனா சமாதான புறாவாக பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனா வைத்த வேண்டுகோள்
அதோடு அத்தையை வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்கிறார். நானும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் ஆனா அவா கேட்கிற மாதிரி இல்ல. சரி இன்னொரு முறை பேசி பார்க்கிறேன் என்று போனை வைக்கிறார். பிறகு முத்து வந்து யார்கிட்ட பேசினா என்று கேட்க, பார்வதி ஆன்ட்டி தான் போன் பண்ணாங்க. உங்க அம்மா அங்க தான் இருக்காங்களாம். நீங்க மாமா கிட்ட பேசி பார்த்தீர்களா என்று கேட்க, அவளே தானா போனா அவளே வரட்டும் அப்பா சொல்லிட்டாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
முத்து கொடுத்த யோசனை
அப்போது உங்க அண்ணனையும் காணவில்லை அவர் ரோகிணியை பார்த்து பேசி இருப்பாரா? என்று கேட்க, அவனே பீஸ் போன பல்பு மாதிரி இருக்கான் எது சொன்னாலும் அமைதியாக இருக்கான் அம்மா சொல்லாம வேற எதையும் செய்ய மாட்டான். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவுக்கு கட்டணும் என்றால் பாட்டியை கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்ல, சரி நீங்க இது பற்றி மாமா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்க.
பாட்டி வராங்க
அப்புறம் பாட்டியோட மனசு கஷ்டப்படும்னு மாமா நினைக்க கூடாது இல்ல என்று மீனா அட்வைஸ் கொடுக்க, அதுவும் சரிதான் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் தன்னுடைய நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது டிராபிக் போலீஸிடம் மாட்டுகின்றனர். அங்கே டிராபிக் போலீஸ் அருண் இருக்கிறார்.
மனோஜ் செய்த ஆர்ப்பாட்டம்
வேறொரு போலீஸ் வந்து மனோஜின் நம்பர் வாயில் மிஷின் வைத்து செக் பண்ண அவர் குடிக்கவில்லை என்று தெரிந்ததும் போக சொல்கிறார். ஆனால் மனோஜ் குடித்துவிட்டு என் பிரண்டு வாயில எப்படி நீங்க செக் பண்ணலாம் மன்னிப்பு கேளுங்க, என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா, அதனால நான் குடிச்சேன். என் பிரண்டு கிட்ட நீங்க மன்னிப்பு கேளுங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க அவருடைய நண்பர் அமைதியாக இருக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லி பார்க்கிறார். ஆனால் கேட்காமல் மனோஜ் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருக்கிறார்.
ரோகிணி எடுத்த முடிவு
ஒரு கட்டத்தில் கோபமான அருண் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி படுத்துக் கொண்டிருக்க வித்யா சாப்பாடு கொடுக்கிறார். அப்போது இப்படியே சாப்பிடாம இருந்து உடம்பை கெடுத்துக்க போறியா என்று கேட்க, நான் கண்டிப்பா போராடி என் வாழ்க்கையை வாழ்வேன் என்று சொல்ல, அப்போ நீ சாப்பிட்டா தான தெம்பா ஓட முடியும் என்று வித்தியாவும் அட்வைஸ் கொடுக்கிறார்.
வித்யா அட்வைஸ்
ஆனால் என்னுடைய வாழ்க்கைக்காக நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என்று யோசித்தபடியே உட்கார்ந்து இருக்க வித்யா மனோஜ் போன் பண்ணுனாரா என்று கேட்க, அவன் பண்ணல நான் பண்ண மாட்டேன் என்று சொல்கிறார். அப்போது நீ பண்ணுன வேலைக்கு வேற யாராவது இருந்தா உன்னை தூக்கி போட்டு மிதிச்சிருப்பாங்க. மனோஜ் என்கிறதால நீ தப்பிச்ச என்று வித்யா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பீல் பண்ணும் அண்ணாமலை
மறுபக்கத்தில் மனோஜ் ஸ்டேஷனில் போலீஸ் சாரி கேட்கணும் என அடாவடி பண்ணிக் கொண்டே இருக்க அதனால் கோபமான போலீஸ்காரர்கள் மனோஜ் சட்டையை கழட்டி உட்கார வைக்கிறார்கள். உடனே மனோஜ் நண்பர் வீட்டுக்கு வந்து முத்துவிடம் நடந்ததை சொல்ல அண்ணாமலை ஃபீல் பண்ணுகிறார்.
முத்துவை சிக்க வைத்த மனோஜ்
அண்ணாமலைக்காக முத்துவும் மீனாவும் ஸ்டேஷனுக்கு போகின்றனர். அங்கு என் தம்பி வந்தா இங்க நடக்கிறதே வேற என்று மனோஜ் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, அண்ணாமலை மனோஜியின் சட்டையை போட்டு விட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications