சிறகடிக்க ஆசை: சிக்கலில் சிக்கிய முத்துவுக்காக மீனா எடுத்த முடிவு.. ரோகிணிக்கு நடந்த விபரீதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 29ஆம் தேதிக்கான எபிசோட் ரோகிணிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்த மனோஜ் ஒரு சாமியாரை வைத்து ரோகிணியை அடித்து துன்புறுத்துகிறார். அதே நேரத்தில் முத்துவின் காரை ட்ராபிக் போலீஸ் சீஸ் செய்கிறார்.

ரோகிணிக்கு எப்போதுதான் பிரச்சனை வரும்? அவர் பற்றிய உண்மைகள் எப்போதுதான் குடும்பத்திற்கு தெரியவரும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றம் தான் கிடைக்கிறது. ஏற்கனவே கனவில் மீனா தன்னை அடிப்பதாகவும் தொந்தரவு செய்வதாகவும் ரோகிணி அலறிக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இதனால் ரோகிணிக்கு பேய் பிடித்து விட்டது என்று நினைத்து மனோஜும் விஜயாவும் பார்வதி வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர். அங்கு ஒரு சாமியார் வருகிறார். அவர் ரோகிணியை உட்கார வைத்து, சமீபத்தில் இவருடைய உறவினர் யாரும் இறந்தாரா? என்று கேட்க விஜயா ஆமா ரோகிணியின் அப்பா இறந்துவிட்டார் என்று சொல்கிறார்.

உடனே சாமியார் அவருடைய ஆத்மா தான் இந்த பொண்ணுக்குள்ள இருக்குது என்று சொல்கிறார். அதை கேட்டதும் இவன் சரியான போலி சாமியார், இதை இப்போ வெளியே சொல்லவும் முடியாதே என்று ரோகிணி அமர்ந்து இருக்கும்போது பேய் விரட்டுவதாக கூறி அந்த சாமியார் ரோகிணியின் காலில் தடியால் அடிக்கிறார். அதனால் வலி தாங்க முடியாமல் ரோகிணி கதறுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் சாமியார் இப்படி அடித்தால் தான் ஆத்மா வெளியேறும் என்று சொன்னதோடு மனோஜுக்கு ஒரு தடியை கொடுத்து ரோகிணியை தினமும் அடிக்குமாறு சொல்கிறார். ரோகிணி வலிதாங்க முடியாமல் ரூமுக்கு சென்று அழுது கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் முத்துவின் காரில் சவாரிக்கு வந்த நபர் தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் ட்ரெயினை பிடிக்காவிட்டால் அவருடைய முகத்தை பார்க்க முடியாது என்றும் சொல்ல, எப்படியாவது ட்ரைனை பிடித்து விடலாம் என்று முத்து காரை வேகமாக ஓட்டி வருகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது ஏற்கனவே முத்துவோடு பிரச்சனை செய்த டிராபிக் அதிகாரி காரை நிறுத்துமாறு முத்துவின் காரை பின் தொடர்ந்து வந்து சொல்கிறார். ஆனால் முத்து வேகமாக செல்ல இறுதியில் முத்துவின் காரை பிடித்து காரின் சாவியை எடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த காரையும் ட்ராபிக் போலீஸ் எடுத்துக்கொண்டு போகிறார்.

இதனால் முத்து கோபமாக வீட்டிற்கு வருகிறார் அங்கு மீனாவிடம் நடந்த விஷயத்தை சொன்னதும் நீங்க நோ என்ட்ரியில் போனதும் தப்புதான் என்று பேசுகிறார். இதனால் முத்து கோபப்பட்டு மீனாவை திட்டி அனுப்புகிறார். அடுத்ததாக ஸ்ருதி தங்களுடைய திருமண நாளை கிராண்டாக கொண்டாட வேண்டும் என்று ரவியிடம் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இறுதியில் போன முறை முத்துவை காப்பாற்றிய போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவிக்கு கொடுத்துவிட்டு நடந்த விஷயத்தை மீனா சொல்லி மீண்டும் உதவி செய்யுமாறு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+