சிறகடிக்க ஆசை: திருந்தாத ரோகிணி! பிரச்சனையில் சிக்கும் முத்து! ஆனால் விஜயா நறுக்குன்னு கேட்ட கேள்வி! இது தேவையா?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலான 'சிறகடிக்க ஆசை' தொடரின் இன்றைய எபிசோடு, குடும்பத்தில் வெடிக்கும் பிரச்சனைகள், விஜயாவின் கடுஞ்சொற்கள், ரோகிணியின் தந்திரம், மற்றும் முத்துவுக்கு வந்த புதிய சிக்கல் எனப் பல பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது.
விஜயா vs கிரிஷ் - ரோகிணியின் நிலை
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ரோகிணி, ஸ்ருதி, மீனா மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு வரும் விஜயா கிரிஷ் குறித்து மோசமாகப் பேசுகிறார். "இவன் ஒரு அனாதை குழந்தை" எனக் விஜயா கூற, ரோகிணி நொந்துவிடுகிறார். விஜயா மீண்டும் கிரிஷ் குறித்துக் குறைகூற, மீனா கடுப்பாகி பதிலளிக்கிறார். விஜயா கோபமாக அங்கிருந்து சென்றுவிட, ஸ்ருதி ரோகிணியிடம், "உங்களுக்கு தெரிஞ்சவங்களை வெச்சுப் பேசி இதைச் சரி பண்ணுங்க," எனக் கூறிச் செல்கிறார்.

ரோகிணியின் தந்திரம்
உடனே ரோகிணி, சிட்டிக்குக் கால் செய்து, தனது மாமியார் டான்ஸ் கிளாஸில் நடந்த விஷயத்தையும், "அவங்க இப்போ காசு கேட்டு மிரட்டுறாங்க. அவங்க எங்க அத்தை பக்கமே வரக் கூடாது," என்றும் கூறுகிறார். சிட்டி எவ்வளவு காசு கேட்டார்கள் எனக் கேட்க, "நிறைய கேட்டு இருக்காங்க," என்கிறார் ரோகிணி. அப்போது சிட்டி, "அப்போ 10 லட்சம் மேல பணத்தைக் கேட்டிருப்பாங்க," எனச் சரியாகச் சொல்லிவிடுகிறார். பின்னர், "அப்போ எனக்கு என்ன செய்வீங்க?" என்கிறார் சிட்டி. ரோகிணி, "நான் உனக்கு உதவி செஞ்சிருக்கேன். என்கிட்ட இப்போ காசெல்லாம் இல்லை," என்கிறார். ஆனால் சிட்டி விடாமல், "அப்போ டிவி, ஏசி கொடுத்துடுங்க," என்கிறார். ரோகிணி அதிர்ச்சி அடைந்து, "என்ன இப்படி கேட்கிற?" எனக் கேட்க, "அதெல்லாம் அப்படித்தான்," என்கிறார் சிட்டி. ஒரு கட்டத்தில் ரோகிணியும் சரியென கூறிவிடுகிறார்.
அடுத்த நாள், ரோகிணி மனோஜிடம், "நான் ஒருவரிடம் உதவி கேட்டு இருக்கேன். அவங்க ஏசி, டிவி மட்டும் கேட்டு இருப்பதாகச் சொல்கிறார். இதில் மனோஜ் கடுப்பாகி கத்த, ஏற்கனவே பிசினஸ் நஷ்டத்தில் செல்வதாகச் சொல்கிறார். அப்போது அங்கு வேலைக்குச் சேர்ந்த ராஜா, "எங்க ஊரில் இப்படி ஒரு கடையில் நடந்தப்போ அவங்க இன்ஸ்டால்மெண்ட் கட்டி பொருள் கொடுத்தாங்க," எனக் கூற, மனோஜும் அந்த ஐடியாவை ஏற்றுக்கொள்கிறார். அதைச் செய்யலாம் என ரோகிணியும் முடிவெடுக்கிறார்.
முத்துக்கு வந்த சிக்கல்
இப்படியாகக் காட்சிகள் நகரும்போது, சிட்டியின் ஆட்கள் தீபன் குடும்பத்தினரை அடிக்கப் போக, அந்த நேரத்தில் முத்து அங்கு வருகிறார். சிட்டி ஆட்கள் அவரைக் கண்டதும் மறைந்து கொள்கின்றனர். முத்து வீட்டிற்குள் சென்று, "காசு கேட்டிருக்கீங்க?" எனக் கேட்க, தீபன் குடும்பத்தினர், "எங்கள் மன உளைச்சலுக்கு வேண்டாமா?" என்கின்றனர். முத்து கோபமாக, "உங்க பையன் செஞ்சதுக்கு நாங்க ஏன் கொடுக்கணும்? ஹோட்டலில் ரூம் எடுத்து செஞ்சிருந்தால் அங்க போய் கேட்டு இருப்பீங்களோ?" எனக் கடுப்பாகிறார். "உங்களை நம்பித்தானே டான்ஸ் கிளாஸ் அனுப்பினோம். நீங்க கவனிக்காமல் விட்டது தப்பு," என்கின்றனர் தீபன் குடும்பத்தினர்.
"10 லட்சம் கொடுக்கலைனா என்ன செய்வீங்க?" எனக் கேட்க, ஒருவன் நக்கலாக, "இப்போ சொல்லவா?" எனப் பேச, முத்து கடுப்பில் அவனை அடித்துவிட்டுச் செல்கிறார். அப்போது அங்கு வரும் சிட்டி ஆட்கள், "இப்போ இவங்களை அடிச்சா அந்தப் பழி முத்து மேல விழும்," என உள்ளே செல்கின்றனர்.
அதிர்ச்சியில் குடும்பத்தினர்
வீட்டில் முத்து இருக்க, அங்கு திடீரென வரும் போலீஸார், "முத்து தீபன் வீட்டினரை அடித்த காரணத்துக்காக அரெஸ்ட் செய்ய வேண்டும்," எனக் கூற, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால், சிட்டியின் ஆட்கள் தீபன் குடும்பத்தினரை அடித்துவிட்டு வாசலில் போகும்போது, சிட்டிக்கு போன் செய்து, "நீங்க சொன்ன மாதிரி அந்த குடும்பத்தை அடிச்சாச்சு," என்று பேசிவிட்டுப் போகிறார்கள். இதை தீபன் கவனித்து இருக்கிறார்! ஆனாலும் குடும்பத்தினருக்கு அடுத்த காமெடி செய்வதற்கு போலீஸ் வந்திருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு, முத்துவுக்கு வந்த புதிய சிக்கலுடன் முடிவடைகிறது. ரோகிணியின் சூழ்ச்சி, கிரிஷ்ஷால் வந்த பிரச்சனை, மற்றும் முத்து மீது பழி சுமத்தப்படும் சூழல் என, 'சிறகடிக்க ஆசை' அடுத்த வாரமும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்து இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வார்? தீபன் உண்மையை வெளிப்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications