சிறகடிக்க ஆசை: பிரச்சனையில் சிக்கும் வித்யா.. முத்துவுக்கு கிடைத்த பிளான்.. ரோகிணிக்கு அடுத்த ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 7ம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு புது பிரச்சனை வருகிறது. 30 லட்சம் பணத்திற்காக முத்து வீட்டிற்குள் அடுத்த பூகம்பம் வெடிக்க போகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணியும் மனோஜும் 37 லட்சத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது உங்க அப்பா கிட்ட காசு கேட்கலாம் என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ரோகிணி கோபமாகி உங்க அம்மாவும் இப்படித்தான் எப்பவும் காசு காசு என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாங்க..

நீயும் எங்க அப்பா கிட்ட காசு வாங்க சொல்லி கேட்டுகிட்டே இருக்கிற.. அவர் இப்ப ஜெயிலில் இருக்கிறார். அவரிடம் கேட்க முடியாது. இப்படி ஓயாம நாம பணம் பற்றி கேட்டுக்கிட்டே இருந்தா அவர் நம்ம குடும்பத்தை பற்றி என்ன நினைப்பாரு என்று திட்டுகிறார். அதோடு கண்டிப்பாக நம்மை ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கி ஆகணும் என்று சொல்லி முடிவெடுக்கிறார்கள்.
மறுபக்கத்தில் சிந்தாமணி கல்யாண ஆர்டர் எடுப்பதற்காக ஒருவரின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு தான் மண்டபத்திற்கு பூ, மாலை அலங்காரம் செய்வதாகவும் உங்களுடைய தங்கச்சியின் திருமணத்திற்கு எங்களுக்கு ஆர்டர் தருமாறு அவர் கேட்கிறார். அதற்கு கல்யாண வீட்டுக்காரர் சரி என்று பேசி சம்மதிக்கிறார்கள். பிறகு சிந்தாமணி வெளியே வரும்போது அங்கு மீனா உள்ளே செல்கிறார்.
அந்த கல்யாண வீட்டுக்காரரிடம் மீனா பூ கொடுப்பதாகவும் உங்க வீட்டுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வருகிறார். அப்போது வெளியே வந்த மீனாவிடம் சிந்தாமணி நான் கல்யாண ஆர்டர் எடுக்க வந்த விஷயம் தெரிஞ்சு நீயும் வந்திருக்கிறாயா? உன்னால எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார்.

உடனே மீனா உள்ளே சென்று தானும் திருமண ஆர்டர் எடுப்பதாக அந்த நபரிடம் சொல்லிவிட்டு வெளியே வருகிறார். பிறகு சிந்தாமணியிடம் நான் டெய்லி போகணுமா என்று தான் கேட்க வந்தேன். ஆனா இப்ப நீங்க சொன்ன பிறகு நானும் கல்யாணம் ஆர்டர் எடுக்கும் விஷயத்தை பற்றி பேசிட்டு வந்திருக்கிறேன். இப்படியே எனக்கு க்ளூ தாங்க உங்களுக்கு கமிஷன் தரேன் என்று சொல்லிவிட்டு வருகிறார்.
அடுத்ததாக வித்யா பைக்கில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது மீனாவை காதலிப்பதாக சுற்றிக் கொண்டிருந்த நபரும் பைக்கில் வருகிறார். அவர் வித்யாவின் பைக்கில் மோதி விடுகிறார். அதனால் வித்யா பைக் ஸ்டார்ட் ஆகாமல் போய்விடுகிறது. பிறகு அவர் நானே உங்களை கூட்டிட்டு கூட்டிட்டு போறேன் என்று
வித்யாவின் பைக்கில் காலை வைத்து தள்ளிக் கொண்டே போகிறார். அதை தெருவில் பார்க்கும் நபர்கள் ஒரு பொண்ணை ஒருத்தன் தள்ளிட்டு போறான்டா என்று கிண்டல் பண்ணுகிறார்கள். அதைக் கேட்டு வித்யா சிரிக்கிறார்.
மறுபக்கத்தில் செல்வம் சவாரி இல்லை என்றதும் முத்து விடம் டிரைவிங் ஸ்கூல் வைக்கலாமா என்று கேட்கிறார். அதற்கு முத்து நல்ல ஐடியா ஆனால் அதற்கு ஆபீஸ் வேணுமே என்று பேசிக்கொண்டு இருக்கும்போது மீனா அங்கு வருகிறார். அப்போது முத்து இதைப்பற்றி சொல்ல மீனா நல்ல ஐடியா என்று பாராட்டுகிறார்.
பிறகு முத்து சொன்ன மாதிரி மனோஜை ஏமாற்றியவரின் பிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்தியா என்று கேட்க, அதற்கு முத்து அவர் பார்ப்பதற்கு நல்லவர் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார். அடுத்ததாக விஜயா வீட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார். அப்போது மனோஜும் ரோகிணியும் வருகிறார்கள்.
அவர்கள் இருவரிடமும் விஜயா காசு ரெடி பண்ணியாச்சா? அது மட்டும் இல்லன்னா இந்த வீட்டில் மரியாதை இருக்காது. அவமானப்பட்டுட்டே இருக்கணும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி அப்பாவிடம் இப்போதைக்கு கேட்க முடியாது. நான் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்.
அப்போது வந்த முத்து நாங்களும் மனோஜை ஏமாற்றியவனை தான் தேடி அலைகிறோம். மீனாவும் பூ கொடுப்பது போல பல இடங்களில் விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் அந்த நபரை சீக்கிரமாக கண்டுபிடித்து எனக்கு பணத்தை வாங்கிக் கொடு என்று திமிராக சொல்கிறார். அதற்கு முத்து கோபப்பட்டு திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications