சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் சிக்கிய ரோகிணி.. திருட்டுத்தனம் அம்பலம்! விஜயா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் ஏழாம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி செய்த செயலை பார்த்து அண்ணாமலை திட்டுகிறார். அதோடு முத்துவின் வாழ்க்கையிலும் பெரிய ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அருண் நல்லவன் கிடையாது என்று முத்து சொல்கிறார். உடனே மீனா அந்த ஒரு லட்சம் பணத்தை அருண் தான் கொடுத்தார் என்று சொன்னதும் அவன் கிட்ட இருந்து பணம் வாங்கி தான் நீ ஆர்டருக்கு கொடுத்தியா? அதற்காகவா நான் கஷ்டப்பட்டு சிந்தாமணி வீட்டில் இருந்து அந்த பணத்தை எடுத்துட்டு வந்தேன் என்று கோபப்படுகிறார். அதோடு அவன் கிட்ட பணம் இருக்குன்னு காட்டுறானா என்று கோபப்பட்டு திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார்.

கோபத்தில் முத்து
அண்ணாமலை மீனாவிடம் இன்னொருவாட்டி அருணை பற்றி விசாரிமா.. நல்ல பையனா இருந்தா எல்லாருமே சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் ரவி ரெஸ்டாரண்டில் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி தங்களுடைய தொடங்க போகும் ரெஸ்டாரண்ட் எப்படி இருக்க வேண்டும் என்று டிசைன் செய்யும் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து ரவியை பார்க்க கூப்பிடுகிறார்.
மாட்டிய ரோகிணி
ஆனால் ரவி தான் பிஸியாக இருப்பதாக சொல்லிவிடுகிறார். பிறகு ஸ்ருதி கோவப்பட்டதும் வந்து அந்த ரெஸ்டாரன்ட் எப்படி வேணாலும் இருக்கட்டும், இவங்களுக்கு பிடிச்ச மாதிரியே செஞ்சுடுங்க என்று அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு போய்விடுகிறார். அந்த நேரத்தில் நீத்து வந்து முதலில் நீங்க ரெஸ்டாரண்டை விட்டு போயிட்டீங்க இப்போ ரவியையும் கூட்டிக்கொண்டு போகணுமா? அதோட நீங்க பேசுறதை ரவி கேட்க மாட்டேங்கிறாரு, நான் வேணும்னா பேசவா என்று கேட்க அவன் என்னோட புருஷன், அவன் கிட்ட எப்படி பேசி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து போய் விடுகிறார்.
அண்ணாமலை அட்வைஸ்
மறுபக்கத்தில் மனோஜ்க்கு விஜயா ஜூஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்போது வரும் ரோகிணி தனக்கு இன்று 85 ஆயிரம் ப்ராப்பிட் கிடைத்ததாக விஜயா கையில் கொடுக்க, மனோஜ் இது எப்படி வந்தது என்று கேட்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலையும் அங்கு வந்து நிற்கிறார். அப்போது ரோகிணி பழைய பொருளெல்லாம் வாங்கிக்கிறேன்னு சொல்லி விளம்பரம் கொடுத்து இரண்டு மணி நேரத்தில் எல்லாரும் எடுத்துட்டு வந்தாங்க. 2000 ரூபாய் பொருளுக்கு 5000 ரூபாய்க்கு வாங்கிட்டு நம்ம கிட்ட இருந்து புது பொருளில் விலையை ஏத்தி விற்றுட்டேன் என்று சொல்ல அண்ணாமலை இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ரோகிணி, நேர்மையான வழியில் தான் நாம பிசினஸ் பண்ணனும். அப்பதான் நமக்கு கை கொடுக்கும் இதெல்லாம் நிலைக்காது என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு போகிறார்.
முத்து செய்த உதவி
அதற்கு விஜயா அவர் அப்படித்தான் சொல்லிட்டு இருப்பார் என்று சொல்கிறார். அதோடு ரோகிணி நீங்க மனோஜை என்கூட கடைக்கு அனுப்புங்க என்று சொல்ல, அதற்கு விஜயா யோசிக்கிறார். மறுநாள் காலையில் முத்து ரோட்டில் காரில் போய் கொண்டு இருக்கும்போது ஒரு பெண்மணி முத்து கார் முன்னாடி வந்து நின்று நிறுத்துகிறார். என்னுடைய பொண்ணு விஷம் குடிச்சுட்டா என்று சொல்லி முத்துவை கூப்பிட, முத்து அந்த பெண்ணை ஹாஸ்பிடல் கொண்டு போகிறார்.

அதிர்ச்சியில் முத்து
அங்கு அவருக்கு சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். அப்போது அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கிறார். அவருடைய பையன் அங்கு வந்ததும் பொண்ணு காதலிச்சதுக்கு என் பையன் சம்மதம் தெரிவிக்காததால் தான் என் பொண்ணு விஷத்தை குடிச்சிட்டா என்று அழுது கொண்டிருக்கிறார். இதை கேட்டு முத்து அதிர்ச்சியில் நிற்கிறார். இதற்கிடையில் மீனா சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் வந்திருக்கிறார். அங்கு சீதாவும் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது சீதா மற்றும் மீனா முன்புதான் அந்த பெண் அழுது கொண்டிருக்கிறார். இதை பார்த்து முத்து பேச முடியாமல் நின்று கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications