சிறகடிக்க ஆசை: வார்த்தையை விட்ட முத்துவுக்கு வந்த வினை! உடைந்த அண்ணாமலை குடும்பம்! ரவி மனசு மாறிட்டாரே!
சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 31ம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது தன்னுடைய தம்பி வாழ்க்கைக்காக பேசிய முத்துவுக்கு அவர் வார்த்தையாலே வினை வந்து சேர்ந்திருக்கிறது. எந்த இடத்திலும் நாம ஓவராக பில்டப் கொடுக்கக் கூடாது என்பது இன்றைய எபிசோடில் தெரிகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில்,(Siragadikka Aasai serial episode) மனோஜ் - ரோகிணி பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ரவி - ஸ்ருதி வாழ்க்கையையும் நீத்து ஒரே நாள்ல கலங்கடிச்சு விட்டார். "ரவியை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்"ன்னு குண்டை தூக்கிப் போட்டதால, மனசு உடைந்த ஸ்ருதி கோபத்தோட அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டார். "நீத்து மன்னிப்பு கேட்டா தான் திரும்பி வருவேன்"ன்னு ஸ்ருதி ஒற்றைக்காலில் நிற்கிறார்.

இதனால் தன்னுடைய தம்பி வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று அண்ணன் முத்துவோ, "இந்த நீத்து தான் எல்லாத்துக்கும் காரணம்"ன்னு முடிவு பண்ணி, நேரா நீத்துவோட ரெஸ்டாரண்டுக்கே போயி எச்சரிக்கை கொடுத்துட்டு வந்திருந்தார்.
இனிமே ரவி வாழ்க்கையில நீ தலையிட்டா, உன் ரெஸ்டாரண்டை அடிச்சு ஒடச்சிடுவேன்னு முத்து கடுமையா சொல்லிட்டு போனதால, நீத்து பயந்தாலும் வெளியே காட்டிக்கல. ஆனா அதே இரவு... நீத்து கனவிலும் நினைக்காத அளவுக்கு பெரிய விபரீதம் நடந்திருச்சு.
இரண்டு மர்ம நபர்கள் நீத்து ரெஸ்டாரண்டுக்குள் நுழைஞ்சு, கேஸ் சிலிண்டர்களை திறந்து விட்டு, தீவைத்து கொளுத்திட்டாங்க. ரெஸ்டாரண்ட் கொளுத்தப்பட்டதோட மட்டும் இல்லாம, வீட்டுக்கே போய் நீத்துவை ஆள் வைத்து தாக்கி, அவளரோட காலை உடைத்துட்டாங்க.
தீ விபத்து, அடிதடி எல்லாத்தாலையும் சிதறிப் போன நீத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்படுறா. அங்க படுத்துக்கிட்டே, ரவிக்கு போன் போடுகிறார். "நேத்து உங்க அண்ணன் வந்து என்னை மிரட்டிட்டு போனாரு. அதே இரவு ஹோட்டலை தீ வச்சு கொளுத்திட்டாங்க. என்னையும் அடிச்சிட்டாங்க"ன்னு சொல்கிறார்.
போலீஸ் வந்து விசாரிக்கும்போது கூட, முத்து தான் பண்ணினார்ன்னு நேரடியாக சொல்லாம, "விபத்து தான்"ன்னு நீத்து சொல்கிறார். இந்த எல்லாத்தையும் கேட்டு ரவி, "எனக்காக தன் அண்ணனை போலீஸ்ல மாட்ட விடாம காப்பாத்துற அளவுக்கு நல்லவளா இருக்கா நீத்து"ன்னு அவரை தேவையில்லாம பாசத்தோட நினைச்சுக்கிறார்.
சிறகடிக்க ஆசை வெற்றி - வைஷ்ணவி ஜோடி சொன்ன அந்த 'குட் நியூஸ்’! ரசிகர்கள் வாழ்த்து மழையில் புது ஆரம்பம்
அதே சமயம், முத்த தான் இந்த எல்லாத்துக்கும் காரணம்ன்னு முழுசா நம்ப ஆரம்பிச்சுடுறார். உடனே கோபம் தலைக்கேற, நேரா வீட்டுக்கு போய் முத்துவோட சட்டையை பிடிச்சு, ஏண்டா இப்படி பண்ணுன? நீத்துவோட ஹோட்டலை நீ தான் தீ வச்சு கொளுத்துனியா?"ன்னு ரவி சத்தம் போட்டு சண்டை போடுறார்.
மீனா இடையில் நுழைந்து, "அண்ணன் அப்படி செய்ய மாட்டார்"ன்னு சொல்லியும், ரவியோ காதில வாங்கிக்கவே இல்ல. முத்து, நான் அவளை மிரட்டினது உண்மை தான். ஆனா அவளோட ரெஸ்டாரண்டை சத்தியமா நான் கொளுத்தலன்னு சொன்னாலும், ரவிக்கு அப்போ உண்மை புரியுற நிலைமையே இல்ல.
அந்த நேரத்திலேயே நீத்துவிடமிருந்து மீண்டும் போன் வருது. அவள் ஆஸ்பத்திரியில் இருக்குறதைக் கேட்டதும், எதையும் கேக்காம, ரவியோ கோபத்தோட, குழப்பத்தோட நேரா ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications