சிறகடிக்க ஆசை: மனோஜ் 4 லட்சம் ரகசியத்தை உடைத்த முத்து.. அதிர்ச்சியில் ரோகிணி.. விஜயா நிலைமை பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரைக்குமான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் மனோஜ் 4 லட்சம் ஏமாந்த விஷயத்தை முத்து கண்டுபிடித்து இருக்கிறார். அதை வீட்டில் சொல்லி ரோகிணியை அவமானப்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் முழுக்கவே ரசிகர்கள் அடுத்து என்னதான் நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். எல்லோரும் எதிர்பார்த்திருந்த முடிவு இப்போது வந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ரோகிணி தப்பித்து விடுவது போல இந்த முறை மனோஜும் தப்பித்து விடுவாரோ என்று கேள்விகள் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அதுவெல்லாம் இல்லை வழக்கம் போல மனோஜ் வீட்டில் மாட்டிக்கொள்வார் என்று இன்றைய ப்ரோமோவில் காட்டி இருக்கின்றனர்.

மனோஜ் பணத்திற்கு ஆசைப்பட்டு மூன்று லட்சம் பொருளை விற்றுவிட்டு ரோகிணி இடம் 3 லட்சம் பொருள் விற்றதால் எனக்கு ஒரு லட்சம் லாபம் கிடைத்தது என்று சீன் போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் தான் விற்ற பொருளுக்கான பணத்திற்கு என்ன செய்யலாம் என்று அம்மா (விஜயா)வின் காலை பிடித்து கெஞ்சியதால் விஜயா மீனாவின் நகைகளை எடுத்துக் கொடுத்து அதை அடகு வைக்க சொல்ல, அந்த நகையை மனோஜ் கொண்டு போன கடையில் அங்கு அடகு வைக்க முடியாது என்று சொன்னதால் அதை விற்று விட சொல்லிவிடுகிறார்.
ஆனால் அடுத்த நாளே மீனாவும் முத்துவும் தங்களுடைய பழைய நகை வேண்டும் என்று வருவார்கள் என்று விஜயாவும் மனோஜும் நினைக்கவில்லை. முத்துவும் மீனாவும் பாட்டிக்கு நகை வாங்க வேண்டும் என்று தங்களுடைய பழைய நகையை கேட்க, ஏற்கனவே நகையை விற்று விட்டதால் மனோஜ் கவரிங் நகையை வாங்கி கொடுத்து சமாளித்து விடுகிறார். ஆனால் கவரிங் நகையை கொண்டு போய் முத்துவும் மீனாவும் நகைக்கடையில் அவமானப்பட்டு வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

ஆனாலும் பாட்டியின் பிறந்தநாள் முடிகிற வரைக்கும் இந்த பிரச்சனையை பற்றி பேசக்கூடாது என்று இருந்து அதற்கு பிறகு இதைப் பற்றி பேச விஜயா இந்த நகை இந்த வீட்டில் மாறி இருக்காது மீனாவின் வீட்டில் தான் மாறி இருக்கும் என்று மீனாவின் குடும்பத்தின் மீது பழியை தூக்கி போட்டு விடுகிறார். ஆனாலும் முத்து நான் உண்மையை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என்று எடுத்த முயற்சியில் இரண்டு முறை தோல்வி கிடைத்தாலும் மூன்றாவது முறை இப்போ வெற்றி கிடைத்திருக்கிறது.
அதாவது ஸ்ருதி வைத்து மனோஜிடம் பேசும்போது மனோஜ் சுதாகரித்துக்கொண்டார். அதுபோல பார்வதியிடம் சென்று நகை பற்றி முத்து பேசும்போதும் அங்கு விஜயா வந்து சொதப்பிவிட்டார். இந்த நிலையில் செல்வம் ஒரு திருமண மண்டபத்தில் பொருள்கள் விலை குறைவாக விற்பனை செய்வதாக சொல்லி பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்று முத்துவை கூட்டிக்கொண்டு போகிறார்.
அங்கு போன இடத்தில் அவர்கள் திருட்டு பொருளை விற்பதை தெரிந்து போலீஸ் வர, போலீஸ் முத்துவையும் செல்வத்தையும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகின்றனர். அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் அந்த மண்டபத்துக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பொருளில் தன்னுடைய பொருள் இல்லை என்று லிஸ்ட் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதோடு அவர்களிடம் நான் மூன்று லட்சம் ஏமாந்தேன் என் பொண்டாட்டி அதிகமா கணக்கு கேப்பா அதனால ஒரு லட்சம் லாபம் என்று சொல்வதற்காக நான் நான்கு லட்சம் செலவு செஞ்சேன் என்று உண்மைகளை சொல்வதை எல்லாம் ஜெயிலுக்குள் இருக்கும் முத்து வீடியோ எடுத்து விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்து அதை டிவியில் போட்டு காட்டி ரோகிணியிடம் உன் புருஷனை மாதிரி தொழில் கத்துக்கணும்னு சொன்னியே அது இப்படித்தானா என்று கேட்க ரோகினி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த 4 லட்சம் பிரச்சனையில் நகை எடுத்து கொடுத்ததற்காக விஜயாவும் மாட்டப் போகிறாரா? இல்லை மனோஜை மாட்டிவிட்டு விஜயா தப்பித்து விடப் போகிறாரா? இதற்கு அண்ணாமலை முடிவு என்ன என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications