சிறகடிக்க ஆசை: குழந்தை பற்றி பேசி மாட்டிய ரோகிணி.. விஜயா எடுத்த முடிவு.. கண்கலங்கி அழுத ஸ்ருதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் குழந்தை பிறப்பு பற்றி பேசி ரோகிணி ஸ்ருதி மற்றும் மீனாவிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி விஷயத்தில் விஜயா முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து கார் வாங்க வந்திருக்கும் நிலையில் இரண்டு காரை பார்த்து இரண்டுமே பிடித்திருக்கும் நிலையில் எதை வாங்குவது என்று குழப்பத்தில் மீனாவுக்கு போன் போட்டு ஷோரூம் வர சொல்கிறார். மறுபக்கத்தில் விஜயா கோபமாக பார்வதி வீட்டிற்கு வந்து அவா என்னை எதிர்த்து பேசுறாரா என்று கோவப்பட பார்வதி யாரு மீனாவா என்று கேட்க, இல்ல கடைசியா வந்தாலே அந்த பணக்கார பைத்தியம் என்று திட்டுகிறார்.

Siragadikka aasai serial

அதற்குப் பார்வதி அவ என்ன பண்ணுனா? நீ பணக்கார வீட்டு பொண்ணு என்று தலையில் தூக்கி வைத்துதானே ஆடுவா என்று கேட்க, அதான் நான் பண்ணுன தப்பு... இந்த மீனாவோட சேர்ந்துக்கிட்டே என்னையே எதிர்த்து பேசுறா.. மனோஜ்க்கு உங்க நகை எடுத்து கொடுக்க வேண்டியதுதானே என்று சொல்றா... மீனா கிட்ட என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறா என்று புலம்பி வீட்ல இருக்குற பிரச்சனை எல்லாம் முடியட்டும் அந்த ஸ்ருதியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறேன் என்று வில்லத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

பிறகு ஷோரூமுக்கு வந்த மீனா காரை பார்த்துவிட்டு இப்போ வீட்டில் இருக்கிற சூழ்நிலையில் நாம கார் வாங்கணுமா? அத்தையும் மாமாவும் பேசாம இருக்காங்க இந்த நேரத்துல நாம காரை வாங்கிட்டு போய் நிறுத்தினால் யாருக்கும் சந்தோஷம் இருக்காது. முதல்ல அவங்கள பேச வைப்போம் என்று சொல்ல, முத்து நாம என்ன பண்ண முடியும் என்று கேட்க, அதற்கு ஏதாவது பண்ணுங்க என்று மீனா வீட்டுக்கு கிளம்புகிறார்.

Siragadikka aasai serial

மறுபக்கத்தில் ஸ்ருதி டப்பிங் ரூமில் இருக்கிறார். அப்போது ஒரு சீரியலில் பிரசவ வலியில் துடிப்பது போல ஒரு ஒரு காட்சி இருக்கிறது. அதற்கு டப்பிங் பேச இறுதியில் அதைப் பேசி முடித்ததும் அந்த காட்சிகளை பார்த்து பீல் பண்ணி எமோஷனலாகி அழுது கொண்டே தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு என்னை பெத்தெடுக்கும் போது நீங்க இப்படி தானமா கஷ்டப்பட்டு இருப்பீங்க ரொம்ப சாரி என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial

அதே பீலிங்கில் வீட்டிற்கு வர அங்கு மீனா மற்றும் ரோகிணி டீ குடித்துக்கொண்டிருக்கும் போது ஸ்ருதியை கூப்பிட்டு டீ கொடுக்க ஸ்ருதி டல்லாக இருப்பதை பார்த்து மீனா என்னாச்சு என்று கேட்க, பிரசவ வலியில் துடிப்பது போல டப்பிங் பேசிய விஷயத்தை சொல்கிறார். அதோடு நான் இனி ரவியை என் பக்கத்தில் வந்தாலே விடமாட்டேன் விரட்டி விட்டு விடுவேன் என்னால குழந்தை பெத்துக்க முடியாது...

Siragadikka aasai serial

நான் குழந்தை பெற்றுக்கொள்வது ஈஸியான விஷயம் என்று நினைத்தேன். ஆனால் அது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கல என்று பயந்தபடி சொல்ல அதற்கு ரோகிணி ஆமா குழந்தை பெத்துக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான வலி இருக்கும் என்று முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை நடப்பதை எல்லாம் தன்னையே மறந்து தன்னுடைய அனுபவத்தை எடுத்து சொல்ல மீனாவும் ஸ்ருதியும் சந்தேக பார்வோடு ரோகிணியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+