சிறகடிக்க ஆசை: சபதம் போட்ட மீனா.. பழைய விஷயத்தை பேசி பல்பு வாங்கிய ரோகிணி.. கடைசியில் தான் ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மாடியில் முத்துவே சம்பாதித்து ரூம் கட்டுவார் என்று மீனா சபதம் போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் பிரச்சனையை செய்த ரோகிணிக்கு ஏமாற்றமும் கிடைத்திருக்கிறது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து ரூம் பிரச்சனையை பற்றி நீ கவலைப்படாதப்பா என்று அண்ணாமலையிடம் ஆறுதல் சொல்ல மனோஜ் ஏன் நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போறியா? என்று கேட்க, அதற்கு முத்து நான் இந்த வீட்டுக்கு ஆசைப்படுகிறேன் என்று சொல்லிட்டு என்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப பார்க்கிறான் என்று சொல்ல, ரோகிணி சும்மா இருங்க என்று மனோஜை தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு முத்து எங்களுக்கு ரூம் எல்லாம் வேண்டாம் நாங்க எங்கயாவது ஒரு மூலையில் இருந்துக்கிறேன் என்று சொல்ல விஜயா இப்பவாவது ஞானம் வந்துச்சே என்று சொல்ல, முத்து என்னால முடியும் போது நான் ரூம் கட்டுகிறேன் என்று சொன்னதும் ஏற்கனவே போட்ட சபதமே இன்னும் முடியல அதுக்குள்ள இன்னொரு சபதத்தை போட்டுடாதீங்க என்று ரோகிணி நக்கல் செய்ய,

மீனா அவரே அவர் சொந்த பணத்தில் ரூம் கட்டுவாரு என்று முத்து தடுத்தும் நிற்காமல் சபதம் போட்டு விடுகிறார். இதனால் முத்து கோபமாகி மீனாவிடம் எதுக்கு என்னை கேட்காமல் சபதம் போட்ட என்று திட்ட, நான் அப்படி சொல்லலனா மாமா சும்மா இருக்க மாட்டாரு என்று சொல்ல முத்து நீ சொல்றது சரிதான் ஆனால் முதல் சபதமே முடியல அதுக்குள்ள இது பார்ட்-2வா? எப்படி நம்மளால ரூம் கட்ட முடியும் என்று புலம்பி கொண்டு இருக்க, உங்களால கண்டிப்பா முடியும் என்று மீனா மோட்டிவேஷன் செய்கிறார்.

உடனே அப்படினா இனி மாச மாசம் பணம் தர வேண்டாமா? என்று மனோஜ் கேட்க பணம் தரவில்லை என்றால் வீட்டு செலவை எப்படி பார்த்துக்கொள்வது என்று முத்து கேட்க அதற்கு மனோஜ் அதுதான் அப்பாவோட பென்ஷன் பணம் வருதே என்று சொன்னதும் முத்து அப்போ கூட அதை கூட விட்டு வைக்க மாட்டியா? என்று திட்டுகிறார்.
அடுத்து ரோகிணி மனோஜை கூட்டிக்கொண்டு ஒரு கல்யாணம் பங்க்ஷனுக்காக ரெசார்ட் போக ஒரு பிளான் போட எதிர்பாராத விதமாக பெரிய ஆர்டர் கிடைத்ததும் மனோஜ் நீ மட்டும் அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வா என்று சொல்ல ரோகிணி ஏமாற்றம் அடைகிறார்.

பிறகு வீட்டுக்கு வரும் முத்து மீனாவிடம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்து ரூம் கட்ட அடிக்கல் நாட்ட போவதாக சொல்லி செங்கலை எடுத்து வர இதை பார்த்த விஜயா இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தா உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு தான் ரூம் கட்ட முடியும் என்று நக்கல் அடிக்க, மீனா அதுவரைக்கும் நான் இந்த வீட்டில் இருப்பேன்னு அத்தை ஆசீர்வாதம் பண்றதா நினைச்சுக்கிறேன் என்று பல்பு கொடுத்து போகிறார்.
பிறகு மாடியில் மீனாவும் முத்துவும் கொண்டு வந்த செங்கல்களை அடுக்கி வைத்து அழகு பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications