சிறகடிக்க ஆசை: 4 லட்சம் ஏமாந்த மனோஜ்.. ஸ்ருதி கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் விஜயா! அண்ணாமலையின் பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ் அதிகமான பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்து போயிருக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் நடவடிக்கையை பார்த்து விஜயா கோபப்படுகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து கொண்டு வந்த செங்கல்களை அடுக்கி வைத்து மீனாவும் முத்துவும் கற்பனையிலேயே வீட்டைக் கட்டி முடிக்கிறார்கள். அடுத்ததாக மனோஜ் கடையில் உட்கார்ந்து இருக்கும் போது அங்கு போனில் பேசிய இருவர் வந்து சொன்னபடி பல பொருள்களை ஐந்து ஐந்தாக வாங்க மனோஜ் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

கடைசியில் பில் போடலாமா என்று மனோஜ் கேட்கும் போது பில் போட வேண்டாம் இது எல்லாமே கணக்குல வராத பணம். அதனால பில்லு போடாம பொருளை கொடுக்கறதா இருந்தா கொடுங்க இல்லன்னா வேற கடையில பார்த்துக்கிறோம் என்று சொன்னதும் மனோஜ் மொத்தமா இவ்வளவு பொருள் வாங்குறீங்க உங்களுக்காக இதைக் கூட பண்ணி தர மாட்டேனா என்று பணத்தை வாங்கிக் கொண்டு பொருட்களை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த ஸ்ருதி டயர்டா இருக்கு என்று சொல்லி காலை பிடித்து விட சொல்கிறார். பிறகு காலில் நெயில்பாலிஷ் போட சொல்ல அந்த நேரத்தில் அங்கு வந்த விஜயா இதை பார்த்து அதிர்ச்சியாகி டேய் என்னடா பண்ற யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க என்று கோபப்படுகிறார். ஸ்ருதி யார் என்ன சொல்ல போறாங்க? புருஷன் பொண்டாட்டியோட கால் அமுக்கி விட்டு நைல் பாலிஷ் போட்டு விடுகிறான். இதுல என்ன தப்பு? புருஷன் பொண்டாட்டிக்கு நைல் பாலிஷ் போட்டு விட்டால் தனி சந்தோஷம் இருக்கு.

நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க என்று நைல் பாலிஷ் கொடுத்ததும் விஜயா இதை நான் போட்டு விடணுமா? உனக்கு என்று கேட்க, இல்ல இதை மாமா கிட்ட கொடுத்து அவங்கள போட சொல்லுங்க என்று பல்பு கொடுக்கிறார். பிறகு மறுபக்கத்தில் முத்துவிற்கு மீனா காலை அமுக்கி விட அதை பார்த்த விஜயா ரவியை கூட்டிக்கொண்டு வந்து இங்க பாருடா உன் அண்ணனை பார்த்து பொண்டாட்டியா எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்கோ என்று சொல்ல,

அந்த நேரத்தில் முத்து மீனாவின் கைகளை அமுக்கி கொண்டு இருக்க, அடப்பாவிங்களா நான் பெத்த பிள்ளைங்க எல்லாரும் இப்படி மாறிட்டீங்களே என்று புலம்பிக்கொண்டு இங்கு நடந்த விஷயத்தை விஜயா அண்ணாமலையிடம் வந்து புலம்பி, நீங்க வந்து கேளுங்க என்று கூப்பிட அண்ணாமலை நீ போய் வாங்கிகட்டிக்கிட்டு வந்தது போதாதுன்னு நானும் போய் அவமானப்படணுமா? என்று திட்டுகிறார்.
அதோடு நாமளும் காலத்துக்கு தகுந்த மாதிரி மாரி தான் ஆகணும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு விஜயா இந்த ஸ்ருதி பண்றது எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. அவ பண்றதை என்னால பார்க்கவும் முடியல, எதுவும் கேட்கவும் முடியவில்லை என்று சொன்னதும் அண்ணாமலை எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கு இதோ இப்ப வந்துடுறேன் என்று வெளியே கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications