ஒரே வார்த்தையில் விஜயாவை ஏமாற்றிய ரோகிணி! பலியாடாகும் மீனா.. முத்துவுக்கு வந்த சந்தேகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயாவின் வீட்டிற்கு வந்த கிருஷிடம் பேச வேண்டும் என்பதற்காக ரோகிணி பிளான் போட்டு வீட்டில் இருக்கும் எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்பி வைக்கிறார். கடைசியில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று க்ரிஷ் எழுந்து வந்து பக்கத்தில் அமர்ந்து அத்தை ஏன் என்கிட்ட பேசவே இல்லை என்று கேட்டதும் ரோகிணி கிரிஷ் கிரிஷ் என்று கத்த, மனோஜ் ரோகிணி என்ன இது? என்று கேட்டு கோபப்பட்டது போல கனவு கண்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ரோகிணி க்ரிஷிடம் பேசவே இல்லையே என்று எழுந்து ரூமிற்கு செல்ல, தூக்கத்தில் பயப்படும் க்ரிஷிற்கு மீனா ஆறுதல் சொல்லி தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு வீட்டில் நடக்கும் விசயத்தை சொல்லி அம்மாவையும் க்ரிஷையும் எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கணும் இல்லன்னா நான் மாட்டிக்குவேன் என்று பேசிக் கொண்டிருக்க, வித்யா அப்படியே செய் என்று சொல்கிறார்.
பிறகு மீனா கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும்போது அங்கு வந்த ரோகிணி, என்ன மீனா நீங்க பூ கொடுக்க போகலையா? என்று பேச்சுக் கொடுக்க, அதற்கு மீனா இல்லங்க க்ரிஷை பார்த்துக்கனும் அதனால போகல என்று சொல்கிறார். பிறகு ரோகிணி வேறு பிளான் போட்டு வித்யாவை மீனாவுக்கு போன் போட வைக்கிறார். மீனாவிடம் வித்யா எங்க அப்பார்ட்மெண்டில் ஒரு போட்டி நடக்குது அதுல பூ கட்டுற போட்டிக்கு நான் பெயர் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு பூ கட்டவே தெரியாது. நீங்க சொல்லி தருவீங்க என்ற நம்பிக்கையில் தான் நான் பெயர் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னதும் மீனா வீட்டுக்கு வாங்க என்று சொல்கிறார். ஆனால் வித்யா உங்க மாமியார் ஏதாவது சொல்லுவாங்க, நீங்க எங்க வீட்டுக்கு வாங்க என்று கெஞ்சி மீனாவை சம்மதிக்க வைக்கிறார். பிறகு மீனா வித்யா வீட்டிற்கு கிளம்பி செல்ல அந்த நேரத்தில் வரும் முத்து எங்க போற என்று கேட்க, மீனா வித்யா வீட்டுக்கு போறதாக நடந்த விஷயத்தை சொல்கிறார்.
அதற்கு முத்து பார்லர் அம்மா பிரண்டு வீட்டுக்கு நீ போறது எனக்கு சரின்னு படலையே என்று சந்தேகப்படுகிறார். அதோடு அங்கெல்லாம் போக வேண்டாம் என்று தடுத்தும் மீனா நம்மள நம்பி பெயர் கொடுத்திட்டாங்க அவங்கள ஏமாத்த கூடாது என்று சொல்லி கிளம்பி போகிறார். அடுத்ததாக ரவியும், ஸ்ருதியும் வேலைக்கு கிளம்ப ரோகிணி வீட்டுக்கு வந்தவங்கள வீட்டை விட்டு துரத்த ஒரு ஐடியா இருக்கு என்று விஜயாவிடம் சொல்ல விஜயா என்னவென்று கேட்டதும் எல்லோரும் அவங்கவங்க வேலையை பார்த்துட்டு வெளியே கிளம்பிட்டா வந்த விருந்தாளி தானாக கிளம்பி போயிடுவாங்க.
நீங்க மாமாவை கூட்டிட்டு எங்கேயாச்சும் போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வாங்க, அதற்குள் விருந்தாளி கிளம்பி போயிடுவாங்க என்று ஐடியா கொடுக்க விஜயா மனோஜ்க்காக வேண்டிக் கொண்டிருப்பதாக சொல்லி கோயிலுக்கு கிளம்ப முத்து ஏன் உள்ளூர் சாமி எல்லாம் அவனை காப்பாற்ற முடியாதுன்னு வெளியூர் சாமிகிட்ட வேண்டிக்கிட்டீங்களா என்று கலாய்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications