சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. ஸ்ருதி கண்ணில் சிக்கும் ரோகிணி! சிந்தாமணி பிளான் உடைந்தது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 4, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயாவின் மூன்று மகள்களும் மனைவியை பிரிந்து தனியாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரோகிணி பற்றிய ஒரு முக்கியமான உண்மை மீனா மற்றும் ஸ்ருதிக்கு தெரிய வருகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில் (Siragadikka Aasai serial today episode), முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது அண்ணாமலை உடனே, "மீனாவை கூட்டிட்டு வரலையா?" என்று கேட்கிறார். அதற்கு முத்து, "நான் எவ்வளவு சொல்லியும் அவ கேக்கல. அம்மாவும் மீனாவும் உங்க மேல ரொம்ப பாசமா இருக்காங்க. அதனாலதான் இப்படி நடக்குது. கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும் பா," என்று சமாதானப்படுத்துகிறார்.
மீனாவை பற்றி பயப்படும் அண்ணாமலை
பின்னர் அண்ணாமலை, முத்துவை தனியாக அழைத்து பேசுகிறார். "விஜயா இப்படி போனால் மீனாவை வீட்டுக்குள்ளே வரவிடாம தடுக்கலாம் போல இருக்கு," என்று கவலைப்படுகிறார். அதற்கு முத்து, "அப்படி எதுவும் நடக்க விட மாட்டேன். முதல்ல அம்மாவுக்கு இருக்கும் பயம் போக என்ன செய்யலாம் என்று பார்ப்பேன்," என்று உறுதியளிக்கிறார்.
மூன்று தம்பதிகளின் பிரிவு
இதற்கிடையில், முத்து மீனா வீட்டிற்கு வந்தது போல கனவு காண்கிறார். அதேபோல ரவி நீத்து மற்றும் ஸ்ருதி இருவரும் தன்னை தொந்தரவு செய்வது போல கனவு கண்டு கொண்டிருக்கிறார். இவர்களை தொடர்ந்து மனோஜ் ரோகிணி மீண்டும் வீட்டிற்கு வந்தது போல கனவு காண்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் கிரிஞ்ச்யாக தான் இருந்தது.
மனோஜ் முத்து, ரவி மூன்று பேருமே பொண்டாட்டி வீட்டில் இல்லாததால் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ரோகிணி நினைத்தபடியே இந்த பிரிவு நடந்துவிட்டது போல தெரிகிறது. இதனால் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
மீனாவை சந்திக்கும் ஸ்ருதி
இந்த சூழலில் ஸ்ருதி, மீனாவை நேரில் சந்திக்கிறார். அப்போது, "ஆண்டி சொல்றதெல்லாம் நீங்க ஏன் இவ்வளவு நம்புறீங்க?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "வேற எதாவது இருந்தா நான் கவலைப்பட மாட்டேன். ஆனா இது மாமா உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்றாங்க. அதனாலதான் பயமா இருக்கு," என்று பதிலளிக்கிறார்.
ரோகிணி மீது ஸ்ருதியின் சந்தேகம்
இதற்கு பதிலாக ஸ்ருதி ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார். "இரண்டு வருடமா நீங்க இந்த வீட்டிலேயே இருக்கீங்க. அப்போ அங்கிளுக்கு எதுவும் ஆகல. இப்போ திடீர்னு வீட்டை விட்டு போக சொல்லுறாங்க. இதெல்லாம் யாரோ திட்டமிட்டு உங்களை வெளியேற்ற முயற்சி மாதிரி தெரியுது. அது ரோகிணி வேலைகூட இருக்கலாம். அவளோட வாழ்க்கையை காப்பாத்திக்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவள்தான்," என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.

ரோகிணி வருகை
ஸ்ருதி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ரோகிணி இறங்குவதை பார்த்ததும் மீனாவும் ஸ்ருதியும் அதிர்ச்சியடைகிறார்கள்.
இவ்வளவு குழப்பங்களுக்கும் பின்னால் சிந்தாமணி இருப்பதாக கதையில் காட்டப்படுகிறது. அதே சமயம் விஜயா வீட்டை அடமானம் வைத்திருக்கும் ரகசியமும் இன்னும் வெளியில் வரவில்லை.
இந்த எல்லா உண்மைகளையும் முத்து கண்டுபிடிப்பாரா? அல்லது விஜயா சிந்தாமணியின் சதியில் சிக்கிக்கொள்வாரா? ரோகிணியின் திட்டம் வெற்றியடையுமா? என்ற பல கேள்விகளுடன் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த எபிசோடிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications