Siragadikka Aasai: ரோகிணி பற்றிய உண்மையை கண்டுபிடிக்கும் மனோஜ்! விஜயாவின் கோபம்; முத்துவின் ஆக்சன்
சென்னை, ஆகஸ்ட் 22, 2025: விஜய் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இன்றைய எபிசோட் குடும்பப் போராட்டங்கள், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிறது. இன்றைய எபிசோடில் ரோகிணிக்கு உதவ போய் மனோஜ் புது பிரச்சனையில் சிக்குகிறார் அதே நேரத்தில் ரவியின் மாமியார் செய்த சூழ்ச்சிகளை முத்து கண்டுபிடிக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

விஜயா - ரோகிணி மோதல்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி தலையில் கைவைத்து அமர்ந்திருக்க மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்கிறார். "கொஞ்சம் தலை வலிக்குது" கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தால் சரியா போயிடும் என்று ரோகிணி சொன்ன பிறகும் கேட்காமல் மனோஜ் தைலம் எடுத்து வருவதற்காக வெளியில் செல்கிறார்.
விஜயாவின் கோபம்
மனோஜ் தைலம் தேடுவதைப் பார்த்த விஜயா ரோகிணியை திட்டி, "அவளே வந்து எடுத்துக்க வேண்டியதுதானே?" என்று கோபப்படுகிறார். "அவளே பொய் சொல்றவ, அவ கூட சேர்ந்து நீயும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?" என்று மனோஜையும் திட்டுகிறார். மனோஜ் சமாதானப்படுத்தப் போக ரோகிணி கோபமாக அவரைத் திட்டி விடுகிறார்.
நீத்துவின் பிரச்சனை
அடுத்ததாக நீத்து ரெஸ்டாரண்டில் இருக்கும்போது மூன்று நபர்கள் சாப்பிட வந்து சரக்கு பாட்டில்களை எடுத்து வைக்கின்றனர். நீத்து, "இங்கு ட்ரீங் பண்ணக் கூடாது" என்று சொன்னாலும் அவர்கள் வம்பாக பேசிவிட்டு ஆம்லெட் கொடுக்கும்படி கேட்கின்றனர். ரவி நீத்துவை அழைத்து வர, ரவி சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அவர்கள் கேட்காததால் முத்துவுக்கு போன் செய்து ரெஸ்டாரண்டுக்கு வரச் சொல்லுகிறார்.
முத்துவின் ஆக்ஷன்
முத்துவும் ரெஸ்டாரண்டுக்கு வர, முதலில் உங்க அண்ணன் பெரிய இவனா என்று அந்த ரவுடிங்க பெருசா திமிரு பண்ணுறாங்க பிறகு வருவது முத்து என்று தெரிந்ததும், ரவுடிகள் இரண்டு பேரும் "இங்கிருந்து போயிடலாம் அண்ணா" என்று சொல்ல முத்து கோபமாக ஒரு அறை விடுகிறார். இருவரும் ஓட ஒருவனை மட்டும் பிடித்து முத்து விசாரிக்கிறார். அவன் "கேரளாக்காரம்மா பணம் கொடுத்து பண்ண சொன்னாங்க" என்று சொல்கிறான். யார் என்று முத்து கேட்க, அவன் ரவியின் மாமியாரைக் கைகாட்டி விடுகிறான்.
ரவி - ஸ்ருதி மோதல்
வீட்டுக்கு வந்த ரவி ஸ்ருதியிடம், "உங்க அம்மா ஏன் இப்படிப் பண்ணிட்டு இருக்காங்க?" என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி சிரிக்க ரவி கோபப்படுகிறார். ரவி ஸ்ருதியிடம், "நீயே உங்க அம்மா கிட்ட சொல்லு" என்று சொல்ல மீனா குறுக்கிட்டு, "ரவி எப்படி ஸ்ருதி சொல்ல முடியும், நீங்கதான் சொல்லணும்" என்று சொல்கிறார்.
முத்துவின் அறிவுரை
ஸ்ருதி கோபமாக ரவியை தள்ளிவிட்டுச் செல்ல, முத்து, "பொண்டாட்டிகளை தாஜா பண்ணக் கத்துக்கணும், தாஜா பண்ணி வேலையை முடிக்கணும்" என்று சொல்கிறார். அதைக் கேட்ட மீனா கோபமாக முத்துவை அடிக்கப் போக விஜயா குறுக்கே வந்துவிட தண்ணீர் விஜயா மேல் ஊற்றி விடுகிறது. விஜயா மீனாவை திட்ட, முத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
மனோஜ் - ரோகிணி புதிய திட்டம்
மனோஜ் ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவரது நண்பர் ஒருவர் வருகிறார். அவரிடம் மனோஜ் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அதிகமான டிகிரி வாங்கி விட்டு இந்த பிசினஸ் செய்வதாக சொல்கிறார் உடனே அவர் தன்னுடைய போர்டிங் ஸ்கூலுக்கு சீப் டெஸ்ட் ஆக வரும்படி கேட்கிறார். அங்குதான் ரோகிணியும் கிரிஷை சேர்த்திருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications