Siragadikka Aasai: விஜயாவுக்கு வந்த வினை; அசிங்கப்பட்ட மனோஜ்! முத்துவுக்கு கிடைத்த அடுத்த அசைன்மென்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் 'சிறகடிக்க ஆசை'. இன்றைய எபிசோடு வழக்கம் போலவே குடும்பத்தினரின் நகைச்சுவை கலந்த மோதல்கள், சவால்கள் மற்றும் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிறது. மனோஜ் தான் புது ஒரு ஸ்கூலுக்கு சிறப்பு விருந்தினராக போக போறேன் என்று வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார் இதனால் சில வாக்குவாதம் நடைபெறுகிறது.

Siragadikka aasai serial vijay tv

ஸ்ருதி தாய்க்கு அறிவுரை

இன்று எபிசோடு ஆரம்பத்தில், ஸ்ருதி தனது அம்மா வீட்டிற்குச் சென்று, "ஏன் நீத்துவுடன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்கள்?" என்று கோபமாகக் கேட்கிறார். "உன் நல்லதுக்காகத்தான் அப்படி செய்கிறேன்" என்று ஸ்ருதியின் அம்மா பதிலளித்ததும், "இது என் நல்லது கிடையாது, இதுதான் பிரச்சனையை பெரிதாக்கும்" என்று ஸ்ருதி கடுமையாகப் பேசுகிறார். அதற்கு ஸ்ருதியின் அப்பா "ஸ்ருதி சொல்வது சரிதான், நீ இப்படிச் செய்வது மாப்பிள்ளை ரவிக்கு அந்தப் பெண் மீது இரக்கத்தைத்தான் ஏற்படுத்தும். எதுக்கு இது மாதிரி செய்கிறாய்?" என்று கோபமாகப் பேசுகிறார்.

மனோஜ் - முத்துவின் மோதல்

குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருக்க, மனோஜ் அங்கும் இங்கும் நடந்து கொண்டு, "என்னை ஒரு ஸ்கூலுக்கு தலைமை விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்" என்று பெருமையாகச் சொல்கிறார். அதைக் கேட்ட முத்து, "இவன் பேசுவதை கேட்கிற பசங்கதான் பாவம்" என்று கிண்டல் செய்கிறார். அதனால் விஜயாவும் ரோகினியும் முத்துவை குறை பேசிக்கொண்டிருக்கும்போது, முத்து மேடையில் பேசுவது போல, "வாழ்க்கையில் என்ன கண்டுபிடித்தாலும், மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மிகவும் முக்கியம். அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கிட்டு, படிப்பு சொல்லித் தருகிற ஆசிரியரையும் மதித்தாலே தெய்வம் நம்மகூட இருக்கும்" என்று எளிமையாகவும் சிறப்பாகவும் பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெறுகிறார்.

மனோஜின் ஆங்கிலப் பேச்சு

இதைக் கேட்ட அண்ணாமலை, மனோஜிடம், "நீ பேசு" என்று சொல்கிறார். மனோஜ் ஆங்கிலத்தில் ஏதேதோ பேச, யாருக்கும் எதுவும் புரியவில்லை. அப்போது நாய் ஒன்று குரைக்க ஆரம்பிக்கிறது. மனோஜ் பேசுவதெல்லாம் புரியாமல் இருந்த அனைவரும் நாய் குரைத்தவுடன் சிரிக்கிறார்கள். கோபமடைந்த மனோஜ் கல்லை எடுத்து நாயை விரட்டிவிட்டு வருகிறார். "இப்படிப் பேசினால் பசங்க எப்படி கேட்பாங்க?" என அண்ணாமலை கேட்கிறார். அப்போது, நாய் உரிமையாளர் வந்து, "என் நாய்க்கு அடிபட்டுவிட்டது. மருத்துவச் செலவுக்கு பணம் கொடுங்கள்" என்று கேட்கிறார். மனோஜ் ₹500 கொடுக்கிறார்.

மீனா - முத்துவுக்கு வந்த அடுத்த அசைன்மென்ட்

இரவில் முத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, மீனா, "நீங்க நல்லா பேசுறீங்க" என்று பாராட்டுகிறார். அதற்கு முத்து, "நான் நல்லா பேசுவேன்" என்று பெருமையாகச் சொல்கிறார். அப்போது மீனா, "நாளைக்கு ஒரு ஸ்கூலில் டெக்கரேஷன் ஆர்டர் வந்திருக்கிறது. இப்பதான் பேசப் போகணும்" என்று சொல்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஸ்ருதி, "நான் திறக்கிற ஹோட்டலுக்கு நீங்கதான் விமர்சனம் பண்ண வேண்டும்" என்று சொல்கிறார். மேலும், "இப்போது போனில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்களும் பேச்சு, மோட்டிவேஷன், ரீல்ஸ் எனப் போட்டு சம்பாதிக்கலாம்" என்றும் அட்வைஸ் செய்கிறார்.

முத்து அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார்? மீனாவின் பதில் என்ன? ஸ்ருதியின் ஆலோசனையை முத்து ஏற்றாரா? அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+