27 லட்சத்தில் ரோகினியை மாட்டிவிட்ட விஜயா.. அடுத்தடுத்து வெளிவரும் உண்மை.. அதிர்ச்சியில் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் விஜயா பைனான்ஸ்காரரிடம் தன்னுடைய வளையலை கொடுத்தது மொத்த குடும்பத்திற்கும் தெரிந்திருக்கிறது.

siragadikka aasai serial September 27th promo and Episode Highlights

அதைத்தொடர்ந்து மனோஜ் திருடிய 27 லட்சம் ரூபாய்க்கும் ரோகினியை விஜயா மாட்டி விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பத்திரத்தை பணத்தை கொடுத்து வாங்கிவிட்டு வரலாம் என்று மொத்த குடும்பத்தினரும் பைனான்ஸ் காரரை பார்க்க போயிருக்கின்றனர். அப்போது முத்து நான் அவசரமா கிளம்பனும் எதுக்காக எங்களையும் வர வச்சீங்க, பத்திரத்தை கொடுத்து அனுப்ப வேண்டியது தானே என்று கேட்க, அதற்கு பைனான்ஸ்காரர் உங்க அம்மா பத்திரத்தை வாங்கிட்டு நான் வாங்கவே இல்லைன்னு சொல்லிட்டா என்ன பண்றது. அதனால தான் உங்களையும் வரச் சொல்லி இருக்கேன் என்று சொல்லி அனைவரையும் கையெழுத்து போட்டு பத்திரத்தை கொடுத்து அனுப்புகிறார்.

அப்போது எல்லோரும் வெளியே கிளம்பும் நேரத்தில் பைனான்சியர் இந்தாங்கம்மா, இதையும் வாங்கிட்டு போங்க என்று கிப்ட் பேப்பரில் மடக்கியதை கொடுக்க, அதை பார்த்த முத்து அப்போ உங்ககிட்ட மொத்தமா பணத்தை அடைச்சுட்டா நீங்க இப்படி கிப்ட் கொடுப்பீங்களா? என்று கேட்கிறார். அதற்கு இல்லை இது உங்க அம்மாவுடைய தான் என்று சொல்ல, அதை வாங்கிக் கொண்டு விஜயா வெளியே கிளம்ப முயற்சி செய்கிறார். ஆனால் முத்து அது என்னவென்று பார்ப்போம் என்று அங்கேயே பிரித்துப் பார்க்க அங்கே வளையல் இருக்கிறது. அந்த வளையலை பார்த்ததும் இது உங்க அம்மாவுடையதுதான் என்று அண்ணாமலை சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு விஜயா வட்டி கட்டாமல் போன மாதம் வளையலை கழட்டி கொடுத்தது பைனான்சியர் மூலமாக மொத்த குடும்பத்திற்கும் தெரிய வருகிறது. அதற்கு அண்ணாமலை நீ எந்த விஷயத்திலும் எனக்கு உண்மையா இல்லையா? என்று திட்ட, அதற்கு முத்து இவர்களை வீட்டுக்கு கூட்டிட்டு போவதற்கு முன்னாடி நகை கடைக்கு கூட்டிட்டு போகணும் இன்னும் எத்தனை கோல்மால் வேலை செஞ்சு இருக்காங்கன்னு தெரியல என்று கோபப்பட்டு திட்டி கொணடு வீட்டுக்கு வாங்க... என்று சொல்லிவிட்டு எல்லோரும் கிளம்ப விஜயா மீனாவை முறைத்தபடி நிற்கிறார்.

siragadikka aasai serial September 27th promo and Episode Highlights

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் எல்லோரும் விஜயாவை திட்ட, அதற்கு பிரச்சனைக்கு காரணம் மீனா தான். நீங்க பார்த்துட்டு கூட்டிட்டு வந்த மருமகளால் தான் வீட்டில் இப்படி அடுத்தடுத்து பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. இவதான் முத்து கிட்ட ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்து இப்படி அவன் தொட்டதுக்கெல்லாம் குறை சொல்றாங்க என்று திட்ட, அதற்கு மீனா நான் என்ன சொல்லிக் கொடுத்தேன்? உங்க புள்ள உங்களை திட்ட ஒன்னும் செய்யல, நீங்க மாமாவுக்கு தெரியாம செய்றத தப்பைதான் சொல்லிக் காட்டுகிறார் என்று பேசிக் கொண்டிருக்கிறார.

அதற்கு முத்து மீனா மட்டும் அன்னைக்கு உங்கள காப்பாத்தலனா உங்களை அந்த பைனான்ஸியர் ஏதோ வீட்டுக்கு வீட்டு வேலை செய்ய அனுப்பி இருப்பாரு. உங்கள காப்பாத்துனது மீனா தான் என்று சொல்ல, இல்ல என்ன காப்பாத்துனது என் மருமக தான். அவா பணத்தை கொடுத்ததால் தான் நான் இன்னைக்கு தலை நிமிர்ந்து இருக்கிறேன் என்று கெத்தாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு விஜயா ரோகினியிடம் நீ உங்க அப்பா கிட்ட இப்ப தானே பேச ஆரம்பிச்சிருக்க உங்க அப்பா சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வருவார் என்று நினைக்கிறேன்.

நீ உங்க அப்பா கிட்ட சொல்லி மனோஜ்க்கு ஒரு பிசினஸ் தொடங்கி கொடுக்க சொல்லு அவனும் வேலை இல்லாம தானே இருக்கான் என்று சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு மனோஜ் வேலைக்கு போய்கிட்டு தானே இருக்கான் என்று அண்ணாமலை கேட்க, இல்ல அவன் படிச்ச வேலைக்கு போகலல்லா அதை சொன்னேன் என்று விஜயா சமாளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து மனோஜை முத்து கிண்டல் செய்ய அதற்கு ரோகிணி அதான் உங்க பணத்தை கொடுத்தாச்சு இல்ல அப்புறம் எதுக்கு இப்படி பண்றீங்க என்று முத்துவிடம் கேட்க அதற்கு முத்து இந்த பணத்தை கொடுத்துட்டா சரி ஆனா உன் புருஷன் தூக்கிட்டு ஓடுன அந்த 27 லட்சத்தை நீ கொடுத்துவிடு. நான் உனக்கு நம்ம ஏரியால பெரிய பேனர் வைக்கிறேன் என்று சொல்ல, அதை கேட்டு மனோஜும் விஜயாவும் ரோகிணியை சந்தோஷமாக பார்க்கின்றனர்.

siragadikka aasai serial September 27th promo and Episode Highlights

ஆனால் இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைய பிறகு அண்ணாமலை விஜயாவை பார்த்து என்ன இது என்று கேள்வி கேட்டதும் அதற்கு விஜயா மனோஜ் வேலைக்கு போய் உனக்கு பணத்தை தந்துருவான் என்று சொன்னதும், ரோகிணி நிம்மதி அடைகிறார். அத்தோடு அண்ணாமலை வீட்டு பத்திரத்தை பற்றி பேசுகிறார். உங்க அப்பா நீ இப்படி எல்லாம் பண்ணுவானு தெரிஞ்சி தான் என் பேரையும் சேர்த்து வீட்டு பத்திரத்தில் எழுதி இருக்கிறார்.

ஆனால் என் பெயர் இருக்கிறது என்று தெரிந்த பிறகும் நீ இப்படி இதை கொண்டு அடமானம் வச்சிருக்க அது உன் பேரில் மட்டும் இருந்திருந்தால் நீ மொத்தமா வித்து இருப்ப என்று திட்டிக்கொண்டு வீட்டு பத்திரத்தை மீனாவிடம் கொடுத்து இதை உன் பீரோவில் பத்திரமா வச்சுக்கோமா என்று சொல்ல, விஜயா ரோகினி என எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது முத்து மனோஜை சொல்லி இந்த வீட்டில தப்பு இல்லப்பா. அவங்க அம்மாவே இப்படி இருக்கறதுனால தான் புள்ளையும் இப்படி இருக்கான் என்று சொல்ல, அதற்கு ரோகிணி முத்து நீங்க உங்க அண்ணனுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க என்று சொல்ல, அதற்கு மீனா உங்க புருஷன் மட்டும் என் புருஷனுக்கு மரியாதை கொடுக்கிறாரா? மரியாதை கொடுத்தா மட்டும் தான் திருப்பி கிடைக்கும் என்று சொல்லி சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+