சிறகடிக்க ஆசை: ரவியை வைத்து விஜயா போட்ட ப்ளான்..அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..புது பிரச்சனையில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 28-ம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் அண்ணாமலை வீட்டு பத்திரத்தை மீனாவிடம் கொடுத்ததை வைத்து விஜயா புது பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.

அதே நேரத்தில் ரவியின் திருமணத்தை வைத்து வீட்டில் அடுத்து தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க விஜயா ப்ளான் போடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை வீட்டு பத்திரத்தை மீனாவிடம் கொடுத்து இதை உன்னுடைய பீரோவில் நீ பத்திரமாக வைத்துக்கொள் என்று சொல்ல, ரோகிணி, மனோஜ், விஜயா என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது முத்து மட்டும் சந்தோஷப்படுகிறார்.

அதற்கு மீனா ஐயோ மாமா எதுக்கு என்கிட்ட கொடுக்குறீங்க. இது அத்தை கிட்டயே இருக்கட்டும் என்று சொல்ல, அதற்கு விஜயா கோபத்தில் என் வீட்டு பத்திரத்தை எனக்கே பிச்ச போடுரியா? என்று திட்டுகிறார். அதோடு என் வீட்டு பத்திரத்தை எதுக்கு அவகிட்ட கொடுக்குறீங்க? ரோகிணி தான பணத்தை கொடுத்து வீட்டை மீட்டா? அவகிட்ட கொடுங்க என்று விஜயா சொல்ல, அண்ணாமலை இனிமே உன்னை இந்த விஷயத்தையும் நம்பறதா இல்ல என்று மீனாவிடம் கொடுக்க, முத்து வாங்கிக்கோ பத்திரத்தை பீரோவில் பத்திரமா பூட்டி வை. இங்க அக்யூஸ்ட் அதிகமாயிட்டே போறாங்க என்று நக்கல் அடிக்கிறார்.
அதைத்தொடர்ந்து முத்துவும் அண்ணாமலையும் வெளியே கிளம்பி போக மீனா வீட்டு பத்திரத்தை பீரோவில் வைக்கப் போகிறார். அப்போது விஜயா வீட்டு பத்திரம் உன் கைக்கு வந்துட்டேன்னு ரொம்ப ஆட்டம் போடாத, இன்னைக்கு உனக்கு சப்போர்ட் பண்ற அதே முத்துவை வச்சு நீ கஷ்டப்பட்டு கண்கலங்கி நிற்ப, இந்த வீட்டு பத்திரம் எப்படி என் கைக்கு வருதுன்னு மட்டும் பாரு என்று சவால் விடுகிறார்.

அதைத்தொடர்ந்து மனோஜிடம் விஜயா, மனோஜ் நீ சீக்கிரமா ஒரு வேலையை தேடு. உனக்கு வேலை இல்லை என்று தெரிந்தால் முத்து சும்மா விட மாட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் ஐஸ்கிரீம் பார்லரில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் இருவரும் சந்தோஷமாக மாறி மாறி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
சுதிக்கு சீக்கிரமா வேற கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஸ்ருதியின் அப்பா கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் விஜயா பார்வதி வீட்டிற்கு வந்து மீனா மீது தனக்கு இருக்கும் கோபத்தை பற்றி கொட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ரவிக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தை பண்ணு என்று பார்வதி சொல்ல, அதற்கு விஜயா எனக்கு தெரிஞ்ச பிரண்ட் ஒருத்தி பெரிய பணக்கார வீட்டுக்கு வாழ போய் இருக்கா. அவளோட பொண்ணு படிப்பு முடிச்சி இருக்கா. அவளை ரவிக்கு பேச போறேன்.

ஏற்கனவே ரோகிணி மாதிரி அந்த பொண்ணும் பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் இந்த வீட்டிலே என்னுடைய கை ஓங்கி இருக்கும் என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications