சிறகடிக்க ஆசை: அடுத்து விவாகரத்து தான்! விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து.. ரோகிணிக்கு ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜயாவை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று பார்வதி வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு முத்து சொன்ன வார்த்தையை கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் பணத்திற்கு ஆசைப்பட்டு விஜயா சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிவிட்டார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி ஆகி இருக்கிறார். மறுபக்கத்தில் சிட்டியும் ரோகிணியின் பழைய பிஏ தினேஷும் சேர்ந்து ரோகிணியிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

இது போதாது என்று தினேஷ் ரோகிணி ஒரு பெரிய கேடி ஈஸியா பணத்தை தந்துவிட மாட்டா அவளை மேலும் மேலும் மிரட்டணும் அப்படி என்றால் தான் அவள் பணத்தை தருவா என்று சொல்லி இருக்கிறார். இதனால் சிட்டி என்னை பற்றி தெரியாமல் அந்த ரோகிணி விளையாடிட்டு இருக்கிறா. அவளுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸை விட்டு வெளியே வந்த சுனிதா வெளியிட்ட முதல் போஸ்ட்.. நச்சுன்னு சொன்ன வார்த்தை!
இதனால் நாளை எபிசோடில் சிட்டி போன் செய்து ரோகிணியை மேலும் மிரட்டுவார். முதலில் தினேஷை வைத்து மிரட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிறகு தன்னிடம் பணம் வாங்கியது, சத்யாவின் வீடியோவை எடுக்க முத்து செல்போனை எடுத்து தந்தது என எல்லா விஷயத்தையும் சொல்லுவேன் என்று மிரட்டுவார் என தான் தெரிகிறது.

siragadikka aasai serial vijay tv

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் வழக்கம் போல மீனா அத்தை வீட்டுக்கு வரணும், மாமா பாவம் அத்த பாவம் என்று செண்டிமெண்ட்டை பிழிகிறார். இதனால் முத்து பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவை வீட்டிற்கு கூப்பிடுகிறார். நீங்க கேஸை வாபஸ் வாங்கிட்டீங்களே இப்பவாவது வீட்டுக்கு வாங்க என்று சொல்ல அதற்கு விஜயா நான் வரமாட்டேன் வரமாட்டேன் என்று மீண்டும் பிகு செய்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அப்போது முத்து இப்படித்தான் அப்பாவுடைய நண்பர் ஒருவருடைய மனைவி எப்போதும் சண்டை போட்டுட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு போயிட்டாங்க அவரும் போய் கூப்பிட்டு இருக்காரு, அதற்குப் பிறகும் வரல. அதனால அவர் அந்த அம்மாவை விவாகரத்து செஞ்சிட்டு வேற கல்யாணம் பண்ணிட்டாங்க என்று சொல்ல இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் பார்வதி வீட்டில் இருந்து போனதும் பார்வதியிடம் ஒருவேளை என் புருஷன் என்னை விவாகரத்து செஞ்சிட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவாரோ என்று பயந்தபடி கேட்கிறார். இதனால் நாளைக்கு விஜயா மீண்டும் வீட்டிற்கே போவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நாளையிலிருந்து ரோகிணிக்கு புது பிரச்சனை வெடிக்க போகிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+