சிறகடிக்க ஆசை: அருணின் சதி.. அண்ணாமலை வீட்டை விட்டுப் போன மீனா.. நல்ல புருஷன்னு நிரூபித்த முத்து.. பாவம் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலை வீட்டில் தனக்கு மன்னிப்பு கிடைக்காததால் மீனா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதே நேரத்தில் விஜயா மீனாவை அசிங்கப்படுத்த அதற்கு முத்து மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் எல்லோரும் எதிர்பார்த்த கதைக்களம் தான் இப்போது வந்திருக்கிறது. அதாவது சீதா மற்றும் அருண் கல்யாணத்தை மீனாதான் முன் நின்று நடத்தி வைத்திருந்தார். இவர்கள் இருவருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தது மீனாதான், ஆனால் அந்த உண்மைகள் குடும்பத்திற்கு தெரியாமல் வந்து இருந்தது. ஆரம்பத்தில் அருணை பிடிக்கவில்லை என்று இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று பிகு செய்து கொண்டிருந்த முத்து ஒரு கட்டத்தில் சீதாவின் சந்தோஷத்திற்காக மனது மாறி அருணை கல்யாணம் செய்வதற்கு சம்மதித்து இருந்தார்.

Siragadikka aasai serial vijay tv

அருணுடன் கை கொடுத்து அவரோடு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கூட மீனா மற்றும் சீதா இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி சொல்லவில்லை. இதனால் இந்த விஷயம் பெரிய அளவில் பூகம்பமாக வெடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்‌. ஆனால் சீதா கல்யாணத்தன்று இந்த விஷயம் வெளியே தெரிந்து பரபரப்பை ஏற்படுத்தும் என்பது யாரும் எதிர்பார்க்காதது. ஒரு வழியாக இப்போது இந்த உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால் முத்து குடித்து விட்டு வந்து பிரச்சனை செய்திருக்கிறார். ஆனாலும் சீதா அழ கடாது என்பதற்காக திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்திருக்கிறார். பிறகு வேதனையோடு வீட்டிற்கு வந்து எல்லாரிடமும் என்னை திட்டுங்க என்று கெஞ்சி கொண்டிருந்தார். அதே நேரத்தில் மீனா வீட்டிற்கு வந்து நிற்க முத்து நீ எதற்காக இந்த வீட்டுக்கு வந்த என்று கோபப்படுகிறார். அதற்கு மீனா நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க வந்தேன் என்று அண்ணாமலை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அதற்கு அண்ணாமலை உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன், ஆனா நீ இப்படி பண்ணுவானு நினைக்கலாமா என்று சொல்லிவிடுகிறார்.

அதற்கு முத்து நீங்க மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன் இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று முத்து சொன்னது மீனாவும் நான் செஞ்ச தப்புக்கு இவர் கொடுக்கிற தண்டனையை ஏத்துகிறேன், ஆனால் இவரே வந்து என்னை கூப்பிடுவாரு என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி போகிறார்கள்.ஆனால் சீதா குடும்பத்தில் முத்துவைதான் மூத்த மகன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருப்பதால் முத்துவை இந்த குடும்பத்தை விட்டு பிரிக்க வேண்டும் என்று அருண் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோவில் விஜயாவிற்கு ரோகிணி காபி போட்டு கொடுககிறார். அதைக் குடித்து பார்த்த விஜயா அதை துப்பி விட்டு இது என்ன இவ்வளவு கேவலமா இருக்கு என்று திட்டுகிறார். அதற்கு ரோகினி எனக்கு தெரிந்த மாதிரி தான் நான் போட்டேன் என்று சொல்ல நேத்து வரைக்கும் இந்த வீட்டில ஒரு வேலைக்காரி இருந்தாலே அவகிட்ட கத்துக்க வேண்டியதுதானே என்று திட்ட, அதற்கு முத்து மீனா ஒன்னும் வேலைக்காரி இல்லை என் பொண்டாட்டி என்று கோபப்படுகிறார். இதை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+