புது கெட்டபில், புது ஜோடியோடு கலக்கும் சிவாங்கி... இந்த வாரம் இப்படி மாறி விட்டாரே
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் சிவாங்கி களமிறங்கியிருக்கிறார்.
தற்போது புது ஜோடியோடு வலம் வரும் சிவாங்கியை பார்த்ததும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

தொடர்ந்து கலக்கி வரும் சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் புது திருப்பங்கள் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் இதில் பல போட்டியாளர்கள் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கின்றனர். ஆனால் ஒரு சில போட்டியாளர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அந்த வகையில் சிவாங்கி தொடர்ந்து இரண்டு சீசன்களில் கலந்துகொண்டு இருந்தாலும் இந்த சீசனில் இவருடைய பர்பாமன்ஸ் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி
சிவாங்கி கடந்த சீசனில் அஸ்வினுடன் செமையாக என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருந்தார். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல் இவருக்கும் பெயரும் புகழும் கூடிக்கொண்டே இருந்தது. வளர்ந்த குழந்தையாக சிவாங்கி செய்யும் சேட்டைகளை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமானோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீசனில் அஸ்வின் கலந்து கொள்ளவில்லை. இது இவருடைய ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக இருந்தாலும் அஸ்வின் தற்போது நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

மீண்டும் வந்தாச்சு
தற்போதைய மூன்றாவது சீசனில் முதல் வாரத்தில் கலந்துகொண்ட சிவங்கி இரண்டாவது வாரத்தில் கலந்து கொள்ளவில்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது என்றும், சிவாங்கி ஏன் வரவில்லை என்றுதான் பலரும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது வாரத்தில் சிவங்கி கலந்துகொள்வதாக இருக்கிறார். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்ததும் மீண்டும் தலைவி வந்தாச்சா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

கொஞ்சும் ரசிகர்கள்
இந்த வாரத்தில் சிவங்கி வித்யூ ராமன் உடன் ஜோடியாக களமிறங்கியிருக்கிறார். அதுவும் லேட்டஸ்ட் கெட்டப்பில் இவர் இருக்கும் போட்டோவை வித்யூராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் இந்த வாரம் எபிசோட் போட்டோஸ் என்று அவர் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இதை பார்த்ததும் சிவாங்கி தன்னுடைய ஹார்டின்களை பறக்கவிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணி வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரசிகர்கள் பலர் க்யூட் செல்லம்மா, சிவாங்கி செல்லப்பிள்ளை, சிவாங்கி செல்லம் என்றெல்லாம் கண்டமேனிக்கு கொஞ்சி கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications