அன்னை இல்லத்தில் ஒரு கிராமம்.. சிவாஜி கணேசன் செய்த எதுவுமே வெளியே வரல? சூப்பர்ல.. பாலாஜியின் ரூ.100
சென்னை: எம்ஜிஆர் ஒரு வள்ளல் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்.. அதுபோல சிவாஜி கணேசனும் பலருக்கும் உதவினாரா? அல்லது பண விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருந்தாரா? என்ற கேள்வி ஒன்றுக்கு டாக்டர் காந்தராஜ் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. அத்துடன், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் பெருமைகளையும் விரிவாகவே சொல்லி உள்ளார்.
1 ரூபாய் தந்துட்டு, ஊர் பூரா விளம்பரம் செய்து கொண்டவர்கள் எல்லாம் வள்ளலாகிவிடுவார்கள். பல லட்சத்தை தந்துவிட்டு, அமைதியாக இருந்தவர்கள் பல பேர்.. அதுபோல, அந்த காலத்தில், மதிய உணவு திட்டத்துக்கு நாடகங்கள் நடித்து 5 லட்சம் ரூபாய் தந்தவர் சிவாஜி.. எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு வந்தபோது, சொந்த பணம் 5 லட்சம் ரூபாய் தந்தவர் சிவாஜி..

பாலாஜி - நாகேஷ்
இவைகளை தவிர எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார்.. ஆனால், அதையெல்லாம் சொல்லி கொள்ளவில்லை.. கூடவே ஒரு கேமராமேனை கூட்டிட்டு போய் தன்னை நிரூபித்து கொள்ளவில்லை.
ஒருமுறை, நாகேஷூம், நடிகர் பாலாஜியும் காரில் ஒரு ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள்.. பாலாஜி பார்ப்பதற்கு ரொம்ப சிகப்பாக இருப்பார். அப்போது நடுவழியில் அவர்களது கார் ரிப்பேர் ஆகிவிட்டது.. அதனால், டிரைவர் காரை சரிசெய்யும்வரை ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர்.
பெண்ணுக்கு 100 ரூபாய்
வெளியில் எட்டிப்பார்த்த அந்த வீட்டு பெண், இவர்கள் 2 பேரையும் பார்த்துவிட்டு, உள்ளே வந்து உட்காரும்படி சொன்னார். அவர்களுக்கு காபி தந்து உபசரித்துள்ளார்கள்.. அங்கிருந்து கிளம்பி செல்லும்போது, பாலாஜி 100 ரூபாய் அந்த பெண்ணுக்கு தந்துள்ளார். அதற்கு அந்த பெண், நீங்கள் எனக்கு பணம் தந்துட்டு போவீர்கள் என்று தெரியும்.. நீங்கள் எம்ஜிஆர் வள்ளல்தானே? அப்படித்தான் உதவுவீர்கள் என்று சொல்லி உள்ளார்..
எம்ஜிஆர் வள்ளல்
உடனே தான் எம்ஜிஆர் அல்ல, பாலாஜி என்று சொல்ல வந்தபோது, நாகேஷ் அவரை தடுத்து விட்டு, வெளியே அழைத்து வந்துவிட்டாராம். அதாவது யார் பணம் தந்தாலும், அது எம்ஜிஆர்தான் என்று அப்போது ஆகிவிட்டதாம். ஆனால், சிவாஜி உதவி செய்ததை விளம்பரப்படுத்தி கொள்ளவில்லை.. அப்படியொரு எண்ணமும் அவருக்கு வரவில்லை.
எம்ஜிஆருக்கு குடும்பம் இல்லை, சிவாஜிக்கு குடும்பம் இருந்தது.. ஆனால், கூட்டுக்குடும்பம் என்பதால், அன்னை இல்லம் அப்போதே நிரம்பி வழியும்.. ஒரு கிராமமே அன்னை இல்லத்தில் குடியிருந்தது.. இத்தனை பேரையும் சிவாஜி என்ற ஒருநபர்தான் காப்பாற்றினார்.. அப்படியிருந்தும், பல உதவிகளை பலருக்கும் செய்தார் என்று கூறியிருக்கிறார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications