சரிகமப திவினேஷுக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்.. இந்த எளிமை தான் சூப்பர்! குவியும் பாராட்டு
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவர் டைட்டில் வின்னரான திவினேஷின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் சரிகமப நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடத்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தனர். டைட்டில் வின்னராக யார் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.

சிவகார்த்திகேயன் பாடிய பாடல்
அதில் பலருடைய எதிர்பார்ப்பு திவினேஷ், யோகஸ்ரீ, ஹேமித்ரா இவர்களில் யாரேனும் வெற்றி பெற வேண்டும் என்றே கூறி வந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே திவினேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பழைய பாடல்களை பாடி பலருடைய மனதை கவர்ந்த திவினேஷ் இறுதிபோட்டியிலும் பழைய பாடல் பாடி இருந்தார். அதிலும் திவினேஷ் டைட்டில் வின்னர் என்று அறிவிப்பதற்கு முன்பு எம்ஜிஆர் பட பாடலான 'நான் ஆணையிட்டால்' என்ற பாடலை பாடியிருந்தார். அவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியிருந்தார்.
திவினேஷ் கேட்ட ஆசை
அதற்குப் பிறகு எனக்கு ஒரு ஆசைதான் என்று திவினேஷ் வழக்கம்போல தயக்கத்துடன் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் என்னப்பா என்று முட்டி போட்டு கேட்டிருந்தார். அதற்கு அர்ச்சனா சார் நீங்க அவனுக்காக முட்டி போட்டீங்க எல்லாம் ஓகே அந்த குழந்தை உங்களோட போட்டோ எடுக்கணும்னு கேக்குறான் என்று சொல்லி இருந்தார். உடனே சிவகார்த்திகேயன் டேய் தம்பி நான் உன்னோட செல்பி எடுத்துக்கிறேன் டா... உன்னோட நான் செல்பி எடுத்து பேமஸ் ஆகிக்கிறேன் என்று சொல்ல திவினேஷ் வெட்கப்பட்டு சிரித்து இருந்தார்.

சிவகார்த்திகேயன் செய்த செயல்
பிறகு திவினேஷுடன் சிவகார்த்திகேயன் போட்டோ எடுத்துக்கொண்டு, முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறிக் கொண்டார். திவினேஷுக்கு மட்டுமில்லாமல் பைனலில் பாடிய எல்லா போட்டியாளர்களிடமும் அவர்கள் பாடி பிரபலமான பாடலை மீண்டும் பாட சொல்லி சிவகார்த்திகேயன் கேட்டிருந்தார். அதுபோல திவினேஷ் டைட்டில் வின்னர் என்று அறிவித்துவிட்டு மற்ற போட்டியாளர்களையும் முத்தம் கொடுத்து அவர்களிடமும் அன்பை வெளிப்படுத்தி இருந்தார். தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறியிருந்தார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications