பிரான்ஸில் பராசக்தி பிரீமியர் ரத்து இல்லை.. இதுகூட ஃபேக் நியூஸ்! சிவகார்த்திகேயனுக்கு நிம்மதி
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், "சினிமாவை அரசியலாக்க தெரிந்தவர்" என ரசிகர்கள் புகழும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்திற்கு, வெளியீட்டுக்கு முன்பே பல சர்ச்சைகள் பரவி வருகிறது. அந்த வகையில் பிரான்ஸில் இந்த படம் வெளியாக போவதில்லை என்று கூறப்பட்ட நிலையில், அது ஃபேக் நியூஸ் என்று தெரிய வந்திருக்கிறது
பிரான்ஸில் திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சி, முன்பதிவு டிக்கெட் விற்பனை எதிர்பார்ப்பை அடையாத காரணத்தால் அமைதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. அரசியல் தீவிரம், வரலாற்றுப் பின்னணி, பெரிய இயக்குநர் - எல்லாம் இருந்தும், அந்த அரங்கில் ரசிகர்கள் மட்டும் வரவில்லை என்பதை வைத்து பலரும் கலாய்த்து வந்தனர்.

'பராசக்தி' திரைப்படத்தின் பிரான்ஸில் திட்டமிடப்பட்ட சிறப்புக் காட்சி (பிரீமியர்) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம், முன்பதிவு டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக இருந்ததே என்று கூறப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிக்கைப்படி, பிரான்ஸில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் 905 இருக்கைகள் கொண்ட காட்சிக்கு வெறும் 16 டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால் இது தவறான தகவல் என்று கூறப்படுகிறது.
பராசக்தி படம் 1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று அரசியல் நாடகமாகும். சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் 50 மில்லியனுக்கும் அதிகமான வியூக்களைப் பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரீமியர் ரத்து செய்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதே திரையரங்கில் தளபதி விஜயின் 'ஜன நாயகன்' படத்தின் காட்சிகள் முன்பதிவு விற்பனையில் முழு அளவில் விற்றுத் தீர்ந்துள்ளன. இது இரு படங்களுக்கு இடையேயான போட்டியை மேலும் சூடாக்கியுள்ளது. 'ஜன நாயகன்' ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தேதி சொல்லாமல் இந்த படம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொங்கல் ரிலீஸ் போட்டி திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை பற்றிய வதந்தி செய்தியை கொண்டாடி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதை "போலி செய்தி" எனக் கூறி மறுத்து வருகின்றனர். பொங்கல் வெளியீடுகளில் எந்தப் படம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று இன்னும் கிடைக்கவில்லை. அதனால் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பராசக்தி படத்திற்கும் இன்னும் தணிக்கை சான்று கிடைக்கவில்லை என்பதால் இந்த படமும் தள்ளி வைக்கப்படுமா? அல்லது சொன்ன தேதியில் சரியாக ரிலீஸ் ஆகுமா? என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இப்போது பாரிஸில் பிரிமியர் காட்சி தடை செய்யப்பட்டதாக பரவி வந்த வதந்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications