Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உன் மறைவால் திரைப்பாடல் வெள்ளாடை சூடி நிற்கிறது”.. SP பாலசுப்பிரமணியம் நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: (SP Balasubrahmanyam death anniversary) 'இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...' என இன்றும் தன் குரலால் அவருடைய மனதில் இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல், இன்றுடன் மறைந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் வழக்கம் போல் அவரது ரசிகர்களும், அவருடன் பயணித்த திரைப் பிரபலங்களும் அவரைச் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தாலும், அங்கு வைக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து எஸ்பிபி குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.

SP Balasubrahmanyam SPB Vairamuthu

நம் வாழ்க்கையை பாடிய மனிதன்

எஸ்பிபி வெறும் பின்னணிப் பாடகரா என்றால் இல்லை. அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் தன் குரலால் பதிவு செய்தவர். ஒரு காதலனின் ஏக்கம், ஒரு தாயின் தாலாட்டு, ஒரு நண்பனின் உற்சாகம், ஒரு அப்பாவின் அரவணைப்பு என எல்லா உணர்வுகளுக்கும் அவர் குரல் கொடுத்தார். அவர் பாடிய பாடல் ஒரு ரசிகனின் மனதிற்குள் சென்று அங்கேயே தங்கிவிட்டது. நாற்பது ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியது ஒரு சாதனை மட்டுமல்ல, அது ஒரு மந்திரம்.

எஸ்பிபிக்கு மொழி ஒரு தடையே இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, ஒரியா, பெங்காலி, இந்தி என 16 மொழிகளில் அவரது குரல் ஒலித்தது. ஆனால் இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் மேலாக, அவரிடம் சிறிதும் தலைக்கனம் இல்லை. ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தும், அவர் எல்லோரிடமும் இயல்பாகப் பழகினார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்ட இந்த மனிதர், தன் எளிமையால் மக்களின் மனதை வென்றார்.

பாடல்களும் உணர்வுகளும்

எஸ்.பி.பி-யின் ஒவ்வொரு பாடலும் ஒரு தனி உணர்வை வெளிப்படுத்தும். பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில் அவரைப் பற்றிக் கூறியிருந்த வரிகள், நம் மனதைக் கலங்கடிக்கும் அளவுக்கு உருக்கமானவை.

"பாசமுள்ள பாட்டுக்காரா! நினைவு நாளில் அல்ல, உன்னை நினைக்காத நாளில்லை" என்று தொடங்கி, எஸ்பிபி-யுடன் இருந்த நாட்களை வாழ்வின் நிம்மதி நிமிடங்கள் என அவர் வர்ணித்தார். தொடர்ந்து அவர் குறிப்பிட்ட பாடல்கள், ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் அழியாத கோடுகளைப் பதித்தவை.

'பொன்மாலைப் பொழுது - இளங்காதலின் மெல்லிய வசீகரம்.சங்கீத ஜாதிமுல்லை - கண்ணீரின் திருவிழா. காதல் ரோஜாவே - காதலின் கதறல். பனிவிழும் மலர்வனம் - காதலின் சிற்பம். காதலே என் காதலே - தோல்வியின் கொண்டாட்டம்.

"ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்." ஒருமுறைக்கு ஒருமுறை மட்டும் கேட்க முடியாத அளவுக்கு, அந்தப் பாடல்கள் எல்லாமே நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. "உன் வரவால் திரைப்பாடல் பூச்சூடிநின்றது. உன் மறைவால் வெள்ளாடை சூடி நிற்கிறது" என வைரமுத்து குறிப்பிட்ட வரிகள், எஸ்பிபியின் குரல் தமிழ் சினிமாவுக்கு எத்தனை பெரிய பொக்கிஷம் என்பதை உணர்த்துகிறது.

இசையை தாண்டி பெருமைகள்

இசை மட்டுமின்றி, எஸ்.பி.பி. செய்த உதவிகளும் ஏராளம். 1983-ம் ஆண்டு, இளம் இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு ஸ்பான்சர் செய்து, அவரது திறமையைக் கண்டு உதவி செய்தார். இந்த உதவிதான் ஆனந்தின் வாழ்க்கையை மாற்றியது என்று ஆனந்தே கூறியிருக்கிறார். அதேபோல, நடிகர் அஜித்தை சினிமாவில் ஹீரோவாக நடித்த பிரேம புஷ்தகம் படத்திற்குச் சிபாரிசு செய்ததே எஸ்பிபி தான். இப்படியான எந்தப் பயனும் எதிர்பார்க்காத உதவிகள் ஏராளம்.

அதனால்தான் எஸ்பிபி வெறும் பாடகர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல மனிதர். ஒரு நாளில் 21 கன்னடப் பாடல்களையும், 19 தமிழ்ப் பாடல்களையும், 16 இந்திப் பாடல்களையும் பாடிச் சாதனை படைத்தது ஒரு கலை. ஆனால், நம் மனதை வென்றது அவரது அன்பும், எளிமையும்தான். பாடும் நிலவு மறைந்தாலும், அதன் நிலவொளி போல அவரது பாடல்கள் இன்றும் நம் வாழ்வை வெளிச்சமாக்குகின்றன. அதனால்தான், அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதிலிருந்து ஒருபோதும் மறையவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+