18 வயதில் திருமணம்.. அதனால் பட்ட வேதனை.. பலருக்கும் முன்மாதிரியான நடிகை சுலக்ஷனா
சென்னை: வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடிகை சுலக்ஷனா நடித்து வருகிறார்.
சினிமா வாழ்க்கையில் தான் பல வருடங்களாக தொடர்ந்து இருந்தாலும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை சில வருடங்களிலே முடிந்து போய்விட்டது என்று வருத்தத்துடன் அதைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
பதினெட்டு வயதில் கல்யாணம் செய்ததால் பல வேதனைகளை அனுபவித்த சுலக்ஷனா பல ரகசியங்களையும் கூறி இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை சுலக்ஷனா தற்போது சின்னத்திரையிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் பல வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சுலக்ஷனா தமிழில் அறிமுகமானது "தூரல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் அவர் 14 வயதிலேயே கதாநாயகியாக நடித்திருந்தார். மங்கலம் என்கிற பெயரில் நடித்திருப்பார். அது வெகுவாக பேசப்பட்டது. முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவில் பிரபலமாக தொடங்கி விட்டார்.
அதைத் தொடர்ந்து "ஆயிரம் நிலவே வா" போன்ற பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென் இந்தியா முழுவதும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சுலக்ஷனாவிற்கு சினிமா வாழ்க்கை குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதுபோல கல்யாண வாழ்க்கையும் சிறு வயதிலேயே தொடங்கி விட்டதாம்.

சுலக்ஷனா திரைப்படங்களில் நடிக்கும் போது கூட அவருடைய அம்மா ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக இருப்பாராம். அங்கு இருக்கும் யாரோடும் அதிகமாக பேசக்கூடாது. கதாநாயகன் இருக்கும் பக்கத்தை பார்க்க கூட கூடாது என்றெல்லாம் பேசுவாராம். ஆனாலும் அவருக்கு 18 வயதிலேயே காதல் வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இருவருடைய காதல் விஷயமும் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வில்லையாம்.
ஆனால் பல வீட்டில் ஆண்கள் பெண்கள் வேலைக்கு போயிட்டு வந்தாலும் வீட்டில் வந்து மீண்டும் வேலையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவர்கள் என்ன மெஷினா? நடிகைகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் உழைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்காங்க போல, நாம சூட்டிங் முடிந்து வீட்டுக்கு 10 மணி 11 மணிக்கு போனாலும் அதற்கு பிறகு தான் சமைக்க வேண்டும். அப்படி எல்லாம் கூட சில வீட்டில் நடக்கிறது என்று ஜாடை மாடையாக கூறியிருக்கிறார்.
ஆனால் பல வீட்டில் ஆண்கள் பெண்கள் வேலைக்கு போயிட்டு வந்தாலும் வீட்டில் வந்து மீண்டும் வேலையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவர்கள் என்ன மெஷினா? நடிகைகளுக்கு மட்டும் 24 மணி நேரமும் உழைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்காங்க போல, நாம சூட்டிங் முடிந்துட்டு வீட்டுக்கு 10:00 மணி 11 மணிக்கு போனாலும் அதற்கு பிறகு தான் சமைக்க வேண்டும். அப்படி எல்லாம் கூட சில வீட்டில் நடக்கிறது என்று ஜாடை மாடையாக கூறியிருக்கிறார்.
ஆனாலும் தான் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய குழந்தைகளை தான் கவனித்து வளர்த்து படிக்க வைத்து விட்டேன். நான் படிக்காததை என்னுடைய குழந்தைகளை அதிகமாக படிக்க வைத்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டது என்றும் இப்போதும் அவர் என்னிடம் ஒரு நல்ல பிரண்டாக பேசுவார். நீ அப்படியே தனியாகவே இருந்து சாதிச்சிட்டியே என்று கேட்பார் என்றும் கூறியிருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications