எதிர்நீச்சல், அப்பத்தாவின் அதிரடியால் அழுது வடியும் குணசேகரன் குடும்பம்..இனி இதுதான் கதையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இதுவரைக்கும் மருமகள்களை ஆட்டி படைத்த குணசேகரனின் அம்மாவாகிய விசாலாட்சியை ஆட்டி படைக்க அவருடைய மாமியார் ஆகிய அப்பத்தா வந்துவிட்டார்.

அப்பத்தாவின் புது அவதாரத்தை பார்த்து குணசேகரின் குடும்பமே ஆடிப் போயிருக்கின்றனர்.

ஜனனியோடு சேர்ந்து இனி அப்பத்தா செய்யும் செயல்களால் தான் குணசேகரன் உடைய ஆட்டமும் திமிரும் அடங்க போகிறது.

விடை கிடைத்து விட்டது

விடை கிடைத்து விட்டது

படித்த பெண்கள் ஆக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு வீட்டில் அடங்கி தான் இருக்க வேண்டும். ஆண்களின் கைப்பாவையாக பல வீட்டில் பெண்கள் நடத்தப்படுவதை குறித்து இந்த எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்ட எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இப்போது நடந்து வருகிறது. ரசிகர்கள் பலர் ஆரம்பம் முதலில் இந்த சீரியலில் அப்பத்தா எப்போது பேசுவார்? இவருக்கு பேச தெரியுமா? இல்லையா? இவருக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்விகளை கேட்டு வந்தனர் தற்போது அதுக்கெல்லாம் விடை கிடைத்திருக்கிறது.

ஆட்டத்தை தொடங்கிய அப்பத்தா

ஆட்டத்தை தொடங்கிய அப்பத்தா

படிக்காத குணசேகரனின் வீட்டில் அவருடைய அப்பத்தா எம் ஏ வரைக்கும் அப்போதே படித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் குணசேகரின் சொத்து 40% ஷேர் வைத்திருக்கும் அப்பத்தான் முதல்முறையாக ஜனனிக்காக குடும்பத்தினர் அனைவரிடமும் பேசி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் தனக்கு காபி போட்டு தர சொல்லி, இதுவரைக்கும் தன்னுடைய மருமகளிடம் விசாலாட்சி உட்கார்ந்து கொண்டு காபி கேட்டு அதிகாரம் செய்து கொண்டிருந்தது போல தற்போது முதல் முறையாக அப்பத்தா உட்கார்ந்துகொண்டு குணசேகரனின் அம்மாவை அதிகாரம் செய்கிறார்.

விசாலாட்சியின் அழுகை நாடகம்

விசாலாட்சியின் அழுகை நாடகம்

நான் இதுவரைக்கும் மிரட்டி உருட்டி வைத்திருந்த மருமகள் முன்பு தன்னுடைய மாமியார் திட்டி விட்டதால் அழுதபடியே தன்னுடைய மகன்களிடம் கதறுகிறார். இதனால் கோபமான குணசேகரன் நான் என்ன செய்கிறேன் பார் என்று வீராப்போடு அப்பத்தாவை நோக்கி செல்ல இருக்கிறார். அப்போது ஞானம் ,குணசேகரனை தடுத்து இந்த வீட்டில் ஜனனியை வெளியேற்றுவதற்கு சக்திக்கு தான் உரிமை இருக்கிறது என்று அப்பத்தா சொல்லி இருக்கிறதல்லவா நீயே போய் அதை செய் என்று சக்தியிடம் ஏத்தி விடுகிறார்.

இனி குணசேகரன் குடும்பத்துக்கு ஆப்பு தான்

இனி குணசேகரன் குடும்பத்துக்கு ஆப்பு தான்

அம்மாவின் அழுகையையும், அண்ணன்களின் வார்த்தையும் கேட்ட சக்தி ஜனனி மற்றும் அப்பத்தாவின் மீது கோபத்தில் செல்கிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. வழக்கம்போல ஜனனியிடம் வந்து இனி சக்தி திமிராக பேசப் போகிறார் .ஜனனிக்கு சாதகமாக பேச இனி யாருமில்லை என்று எதிர்பார்த்து இருந்த குடும்பத்திற்கு அப்பத்தா இன்று சரியான டோஸ்ட் கொடுக்கப் போகிறார். தன்னுடைய 40% ஷேர்க்கும் சொந்தக்காரி இனி ஜனனிதான் என்று சொல்லப் போகிறார். அது மட்டும் அல்லாமல் இந்த வீட்டில் இருப்பதற்கும கம்பெனிகளில் அனைத்திற்கும் ஜனனிக்கு இருக்கும் உரிமையால் அவர் அங்கேயும் வருவார் என்று இன்று குணசேகரன் குடும்பத்திற்கு ஷாக் கொடுக்க இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+