மொத்த உண்மையை உளறிய குணசேகரன்..ஆட்டத்தை தொடங்கும் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இதுவரைக்கும் குணசேகரன் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போய் அமைதியாக இருந்த அப்பத்தா இப்போது ஜனனியின் மூலமாக தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

ஜனனி எப்படி கோயிலுக்கு வந்து சக்தியின் திருமணத்தை நிறுத்தினார் என்று சந்தேகத்தை வைத்துக்கொண்டு குணசேகரன் பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்.

இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த அக்ரீமெண்ட் விஷயத்தை பற்றி முதல் முறையாக தம்பிகள் குணசேகரனிடம் கேள்வி கேட்க தொடங்கி இருக்கின்றனர்

ஜனனியால் குழப்பமான சக்தி

ஜனனியால் குழப்பமான சக்தி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்று எபிசோடின் ஆரம்பத்தில், சக்தி ஜனனி பேசியதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். விவாகரத்து செய்வதற்கு எனக்கு முழு சம்மதம் ஆனால் இன்னும் ஆறு மாதத்திற்கு இந்த வீட்டில் தான் இருப்பேன். அது விவாகரத்துக்கு எனக்கு தரும் நஷ்ட ஈடாக எடுத்துக் கொண்டால் சரி என்று ஜனனி பேசியதை மீண்டும் மீண்டும் சக்தி நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஞானம் மற்றும் கதிர் உள்ளே வருகின்றனர். இருவரும் நீ ஜனனியிடம் பேசப் போனாயே என்ன ஆச்சு என கேட்க சக்தி அமைதியாகவே இருக்கிறார்.

கதிருக்கு சக்தி கொடுத்த பதில்

கதிருக்கு சக்தி கொடுத்த பதில்

சக்தி அமைதியாக இருப்பதை பார்த்த கதிர் வழக்கம் போல கத்த தொடங்கி விட்டார். சக்தி மாறிவிட்டான் பொண்டாட்டி பேச்சை கேட்க தொடங்கிவிட்டான். அவன் பொண்டாட்டி அவங்க அண்ணன் நல்லவன் இல்லை என்று சொல்லி இருப்பாள் அதை அப்படியே நம்ப தொடங்கி விட்டானா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்க ,சக்தி எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் எனக்கு தெரியும் எதை செய்ய வேண்டும் என்று கூற ஞானம் மற்றும் கதிர் இருவரும் கோபத்தில் வெளியே வருகின்றனர்.

விசாரணையை தொடங்கிய குணசேகரன்

விசாரணையை தொடங்கிய குணசேகரன்

அடுத்ததாக குணசேகரனுக்கு காபி கொடுக்க ஈஸ்வரி வருகிறார். அப்போது நான் உன்னிடம் கேட்பேன். அதற்கு மறைக்காமல் உண்மையை சொல்ல வேண்டும் என்று குணசேகரன் கேள்வி கேட்கிறார். ஜனனிக்கு எப்படி சக்திக்கு கல்யாணம் நடப்பதை தெரிந்து கரெக்ட் டைமுக்கு அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்தாள் என்று கேள்வி கேட்கிறார். இது எங்களுக்கும் தெரியவில்லை. நாங்களும் தெரியாமல் தான் யோசித்து கொண்டிருக்கிறோம் என்று ஈஸ்வரி சொல்ல நீ உனக்கு அவள் செய்த உதவிக்கு நன்றி கடனாக இதை சொன்னியா என முக்கியமா கேட்க எங்கள் யாரிடமும் தான் போன் இல்லாமல் எல்லாத்தையும் நீங்க வாங்கி வைத்துக் கொண்டீர்களா? நாங்க எப்படி பேச முடியும் என்று ஈஸ்வரி பதில் கேள்வியை கேட்கிறார் இதைக் குறித்து யோசனையோடு குணசேகரன் இருக்கிறார்.

உளறிய நந்தினி

உளறிய நந்தினி

அடுத்ததாக குணசேகரன் பேசியதை ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினியிடம் பேச ரேணுகாவும் நாம சொல்லவில்லை அப்பத்தாப்பாவுக்கும் தெரியாது ஆனால் எப்படித்தான் ஜனனிக்கு தெரிஞ்சதுனு தெரியலையே .வழக்கம்போல நந்தினி ஏதாவது சொல்லுவியே இதை பத்தி ஏதாவது சொல்லு என்று சொல்ல எனக்கு தான் ஏற்கனவே தெரியுமே அதை பத்தி நான் என்ன சொல்ல என நந்தினி சொல்கிறார். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நான் தான் கோவிலில் இருந்த ஒரு பெண்ணிடம் போனை வாங்கி வசுவிடம் கல்யாண விஷயத்தை சொன்னேன் என்று கூறுகிறார். என் புருஷன் என்ன பண்ணுவானோ தெரியவில்லை தயவு செய்து நீங்க ரெண்டு பேரும் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க என்று கெஞ்சுகிறார். இவர்கள் இருவரும் இதை எப்படி நாங்க சொல்லுவோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர்.

கதிருக்கு டோஸ் கொடுத்து அப்பத்தா

கதிருக்கு டோஸ் கொடுத்து அப்பத்தா

அடுத்ததாக மாடியில் ஜனனி படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மூவரும் வருகின்றனர். பேசலாம் என இவர்கள் நினைக்கும் போது அங்கே கதிர் வந்து நந்தினியை என்ன இங்க எதற்கு வந்தாய் என கேட்க இங்கு காத்து நல்லா வருது என்று சொன்னாங்க அதான் வந்தேன் என்று நந்தினி மலுப்ப அவரை அடிக்க கதிர் பாய ரேணுகா கதிர் என்று கத்துகிறார். அங்கே வந்த ஞானம் உனக்கு தனியா சொல்லனுமா நீ உள்ள போ என அவர்களுடைய மனைவிகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அப்பத்தா இப்படி செய்தால் நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்று சொல்லும்போது உன்னை ஏதாவது செய்து விடுவேன் என்று கதிர் மிரட்டுகிறார் உன் பொண்டாட்டியை நீ மிரட்டுவதற்கே நான் உன்னை மிரட்டுகிறேன் என்றால் என்னை நீ மிரட்டுவதற்கு நான் சும்மா இருப்பேனா அப்படியே உனக்கு உங்க தாத்தா, அப்பா புத்தி வந்து இருக்கு. நான் எனக்கு ஏதாவது ஆச்சின்னா அதற்கு காரணம் இந்த வீட்டில் இருப்பவர்களும் குறிப்பாக முக்கியமான முதல் காரணம் நீதான் என்று எழுதி வைத்திருக்கிறேன் என்று சொல்லி சொல்கிறார். நக்கலாக அந்த இடத்தில் இருந்து கதிர் கிளம்பி விடுகிறார் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

ரகசியத்தை சொல்லத் தொடங்கிய குணசேகரன்

ரகசியத்தை சொல்லத் தொடங்கிய குணசேகரன்

அடுத்ததாக ப்ரோமோவில் பட்டமாளிடம் ஜனனி எனக்காக நீங்க அவங்க கூட சண்டை போடுறது எனக்கு சரின்னு படல என சொல்ல, உனக்காகனு யாரு சொன்னா? இது எனக்காக.... இந்த ஆட்டத்தை உன்ன வச்சி நான் ஆட போகிறேன் என்று கூறுகிறார். அடுத்ததாக ஹாலில் அனைவரும் இருக்கும்போது குணசேகரனிடம் அவருடைய அம்மா அடுத்ததாக நீ என்ன செய்ற போறப்ப என கேள்வி கேட்க ஞானம் முதல்ல உங்களுக்கு அந்த அக்ரீமெண்ட் என்ன இருக்குன்னு தெரியுமா? என்று கேட்கிறார். என்ன இப்போ உங்களுக்கு அதில் என்ன இருக்கு என்று தெரிந்தாக வேண்டும் அப்படித்தானே என சொல்ல தொடங்குகிறார். அப்போது ஜனனி மாடியில் இருந்து கீழே வருகிறார். இத்துடன் இன்றைய பிரமோ முடிவு அடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+