குழந்தை பிறந்ததை அறிவித்த வானத்தைப்போல சீரியல் நடிகர்.. நெகிழ்ச்சியாக போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வின் கார்த்திக்கிற்கு இன்று குழந்தை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சில நாட்களாகவே சினிமா மற்றும் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து குழந்தை பிறக்கும் மகிழ்ச்சி செய்திகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் நடிகர்களும் கவிஞருமான சினேகன் தனக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிவித்திருந்தார். தன்னுடைய அம்மாவே தனக்கு குழந்தையாக பிறக்கும் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். அது இரண்டு குழந்தையாக எனக்கு கிடைத்திருக்கிறது என்று சந்தோஷமாக பகிர்ந்து இருந்தார்.

Sun TV Ashwin Karthik Annam Serial

அதுபோல சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அஸ்வின் கார்த்திக் சென்னையை சேர்ந்தவர்தான். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் திரைப்பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

அப்போது அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த இவருக்கு சின்ன திரையில் கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகத்தான் அஸ்வின் கார்த்திக் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அந்த சீரியலில் அவருடைய கேரக்டர் பெரியதாக பிரபலமாகவில்லை. அதற்குப் பிறகு அரண்மனைக்கிளி, குலதெய்வம் போன்ற சீரியல்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த நேரத்தில் தான் அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலமாக கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

Sun TV Ashwin Karthik Annam Serial

வானத்தைப்போல சீரியல் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஆரம்பத்தில் இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தது. பிறகு பாசிட்டிவாக மாறி ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார். அதை தொடர்ந்து இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியலிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் இவர் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரியல் தம்பதியாக போகும் விஜய் டிவி பிரபலங்கள்.. திருமண தேதியை அறிவித்த சங்கீதா.. குவியும் வாழ்த்து
இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.

கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி ரியல் ஜோடி.. அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி.. குவியும் வாழ்த்து
அதற்குப் பிறகு சமீபத்தில் அவருக்கு தனியார் youtube சேனல் ஒன்றின் மூலமாக வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு கார்த்திக் மற்றும் காயத்ரி இருவர் பற்றியும் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கார்த்திகிற்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அது குறித்து அவர் "என்னுடைய இளவரசி உலகத்திற்கு வந்துவிட்டாள்" என்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய குழந்தையின் கைவிரல்களை கணவன் மற்றும் மனைவி இருவரும் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை கார்த்திக் வெளியிட்டு இருக்கிறார்.

Sun TV Ashwin Karthik Annam Serial

சமீபத்தில் தான் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது இந்திரஜா தன்னுடைய குழந்தையின் கைவிரல்களை பிடித்த படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் கார்த்திக் மற்றும் காயத்ரி தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+