முதல் முறையாக கணவரோடு மகிழ்ச்சியை பகிர்ந்த சுந்தரி சீரியல் கதாநாயகி... குவிந்து வரும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலின் கதாநாயகி கேப்ரெல்லா தனது கணவரோடு வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
முதல் முறையாக தனது காதல் கணவரோடு இவர் கிறிஸ்மஸ் கொண்டாடி அந்த மகிழ்ச்சியை ரசிகர்களிடமும் பகிர்ந்து இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு கணவரோடு கொண்டாடிய புது மகிழ்ச்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி அடுத்த குட் நியூஸ் எப்போது என்று கலாய்த்து வருகிறார்கள்.

திறமைக்கு அழகு தேவை இல்லை
சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி, நடிகைகள் அழகாக இருக்க வேண்டும் கலராக இருக்க வேண்டும் என்று ஒரு மாயை ரசிகர்களிடமும், நடிகர்களிடமும் தொற்றி இருக்கிறது .ஆனால் அதையெல்லாம் உடைத்து எரிந்தவர்களில் கேப்ரெல்லாவும் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடைய கலர் என்னுடைய திறமையை எந்த விதத்திலும் குறைவு செய்யாது என்பதை கேப்ரெல்லா பலமுறை நிரூபித்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் மூலமாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு கவிதை மற்றும் தமிழ் உச்சரிப்பின் மூலமாக இவர் டிக்டாக்கில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

மனதை கவரும் கவிதை
தற்போது சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரெல்லா தனது கணவருடன் கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தையும் வீட்டில் குடில் வைத்திருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார். "எழுதியாச்சு படிச்சிடலாமா? என்று இவர் கவிதை எழுதி வெளியிடும் வீடியோக்கள் மிகவும் வைரலானது. அதுமட்டுமல்லாமல் அப்பா -மகன், அம்மா -மகன், அக்கா -தங்கை, அண்ணன்- தங்கை போன்ற உறவுகளை தனது கவிதை மூலமாக அழகாகவும் தெள்ளத் தெளிவாக தமிழிலும் எடுத்துக் கூறி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனாலேயே இவரை அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர்.

சன் டிவி சுந்தரி
கேப்ரெல்லாவிற்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர். முதல் முறையாக இவருக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகி ஆக நடித்த வாய்ப்பு கிடைத்ததும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டனர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவருடைய கேரக்டரும் தைரியமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நிஜத்தில் மிக மாடர்னாக இருக்கும் இவர் சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
டிக் டாக் செயலி தடை செய்த பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது கணவருடன் கிறிஸ்மஸ் கொண்டாடி எடுத்த புகைப்படங்களையும் வீட்டில் குடில் வைத்திருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்களில் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று வருகிறது. வீட்டை விட்டு வெளியேறி வந்த கேப்ரெல்லாவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் உறுதுணையாக இருந்த நண்பர்தான் அவருடைய காதல் கணவராக மாறி இருக்கிறார். அதே காதலும் நட்பும் தங்களுக்குள் மாறவில்லை என்று இவர்கள் இப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கேப்ரெல்லாவிற்கு திருமணம் முடிந்தது தெரியாமல் இருந்த ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் என்று வெள்ளந்தியாக கேள்விகளை கமெண்ட்களில் அனுப்பி இருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications