குழந்தை பிறந்ததை அறிவித்த சுந்தரி சீரியல் கதாநாயகி.. புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை கேப்ரில்லா செல்லஸ்க்கு இன்று (மே 6ஆம் தேதி) குழந்தை பிறந்திருக்கிறது. தன்னுடைய பிஞ்சு குழந்தையின் கைகளை புகைப்படமாக வெளியிட்டு உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை கேப்ரில்லா செல்லஸ்க்கு சோஷியல் மீடியா மூலமாக தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் டிக் டாக் ஆக்டிவாக இருந்த நிலையில் அதில் கதை சொல்வோமா என்று பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். டிக் டாக் செயல் இழந்த பிறகு youtube இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலமாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

சீரியலில் ஆரம்பம்
இந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே இவர் வெளியேறி இருந்தாலும் சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக கலக்கி கொண்டு இருந்தார். அந்த சீரியல் 5 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்தது. சீரியல் மூலமாக பல ரசிகர்களை கவர்ந்து விட்டார். பலருக்கும் முன் உதாரணமாக அந்த சீரியலில் நடித்து வந்த கேப்ரில்லாவிற்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.
சொந்த ஊரில் ஃபோட்டோ சூட்
சொந்த ஊரை விட்டு நடிக்க வேண்டும் என்று குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சென்னைக்கு வந்திருந்த கேப்ரில்லாவிற்கு சுருளி என்பவர் தான் பல உதவிகளை செய்திருந்தார். ஆரம்பத்தில் ஆடிசனுக்கு போவதற்காக சுருளிதான் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பிறகு காதலாக உருவாகி திருமணமும் செய்து கொண்டார்கள்.
வதந்திக்கு பதிலடி
திருமணத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமா மற்றும் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து சீரியல், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த கேப்ரில்லா பற்றி சில வதந்திகளும் பரவி வந்தது. கேப்ரில்லா கணவரை பிரிந்து விட்டார் என்று செய்திகள் பரவி வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை கேப்ரில்லா அடிக்கடி பகிர்ந்து வந்தார்.
வளைகாப்பு
அந்த நேரத்தில்தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் போதும் சுந்தரி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் சென்னையை விட்டு கிளம்பி தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து விட்டார். சொந்த ஊரில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வந்த கேப்ரில்லாவிற்கு சுந்தரி குழுவினர்கள் மற்றும் கேப்ரில்லாவின் உறவினர்கள் வளைகாப்பு பங்க்ஷன் நடத்தி இருந்தனர்.

மகள் பற்றி பதிவு
அப்போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் கேப்ரில்லாவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை குறித்து நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில், "மகளே உனது அழுகை எனது வலிக்கும், நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே.. இவ்வுலகம் உனக்கானது மகளே.. என்னுடைய அடி மனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சித்ரா அம்மா, மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியமில்லை.
இறைவனிடம் வேண்டுதல்
எனது அன்பு கொட்டிக் கொடுக்கும் எனது மக்களின் பிரார்த்தனைக்கு உயிர் கலந்த நன்றிகள்.. இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதே எனது முதல் பிரார்த்தனையாக இறைவனிடமும், விதியிடமும் வேண்டிக் கொள்கிறேன். என்று அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய குழந்தை பிறந்த மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்திருக்கும் அதே நேரத்தில் குழந்தை இல்லாமல் அதற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் குழந்தை கிடைக்க வேண்டும் என்று கேப்ரில்லா வேண்டி கொண்டிருப்பது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications