Super singer junior 10: சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இவர்தான்! பரிசு இத்தனை லட்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் டைட்டில் வின்னராக காயத்ரி ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே செலக்ட் ஆகி இருக்கிறார். அவருக்கு பரிசுத்தொகை எவ்வளவு கிடைத்தது என்ற விவரத்தை எதிர்பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆகி விட்டாலே அதில் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. நேற்றுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

Super Singer Vijay TV

சூப்பர் சிங்கர் பரிசு தொகை

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருடைய வாழ்க்கையே மாறி இருக்கிறது‌. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்தவர்கள் மட்டுமல்லாமல் தன்னுடைய திறமையை சிறப்பாக காட்டியவர்களும் திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் காயத்ரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். காயத்ரியின் குரல் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

Super Singer Vijay TV

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வின்னர்

ஆரம்பத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் நஸ்ரின், காயத்ரி போன்றவருடைய பெயரும் இருந்தது. அதேபோல கடைசியில் காயத்ரி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை நஸ்ரின் பிடித்திருக்கிறார். ஆனால் அவர் கதறி அழுது கண்ணீர் விட்டது எல்லோரையும் எமோஷனல் ஆக்கியது. நஸ்ரினுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

Super Singer Vijay TV

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ரன்னர்

அதேபோல மூன்றாவது இடத்தை சாரா சுருதி மற்றும் ஆத்யா இரண்டு பேர் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கமல்ஹாசனும் ஏ.ஆர் ரகுமானும் இணைந்து பரிசுகளை வழங்கி இருந்தனர். கமல்ஹாசன் நடித்த தக் லைப் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் டைம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் மற்றும் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு போட்டியாளர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசி பாராட்டி இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+