பிறந்தநாளுக்கு மொட்டை மாடியில் நின்று கையசைத்த சூர்யா.. வந்து விழுந்த பொருள்! சட்டென அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: நடிகர் சூர்யா இன்று தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவருடைய வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து சொல்வதற்காக பல ரசிகர்கள் போய் இருக்கின்றனர். அப்போது வீட்டு மொட்டை மாடியில் நின்றபடியே ரசிகர்களுக்கு சூர்யா கை அசைத்து நன்றி கூறி இருக்கிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யாவை பார்த்ததும் ரசிகர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருந்தாலும் சூர்யாவுக்கு அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவகராக பலருக்கு உதவிகள் செய்து வரும் சூர்யாவை பலரும் பாராட்டியும் வருகிறார்கள். படிக்க ஆர்வத்தோடு இருக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்காக படிப்பின் செலவை சூர்யா ஏற்றுக்கொண்டு வருகிறார்.

சூர்யா செய்யும் உதவி
அதோடு சமீபத்தில். வேட்டுவம் திரைப்பட சூட்டிங் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜா உயிரிழந்திருந்தார். இது பலரையும் வருத்தம் அடைய செய்து இருந்தது. சினிமாவில் ஹீரோவுக்கு டூப்பு போடும் பல ஸ்டண்ட் மாஸ்டர்கள் தங்களுடைய இன்னுயிரை துறந்தால் அவருடைய குடும்பத்தினர் அதிகமாக கஷ்டப்படுவார்கள் என்று ஸ்டாண்ட் மாஸ்டர்கள் அதிகமானோருக்கு சூர்யா தன்னுடைய சொந்த பணத்தில் இன்சூரன்ஸ் கட்டிக் கொண்டிருக்கிறார்.
சூர்யாவின் பிறந்தநாள்
இப்படி பலருக்கு பல உதவிகளை செய்து வரும் சூர்யாவிற்கு இன்று 50ஆவது பிறந்தநாள். அதற்காக அவர் நடிக்கும் திரைப்படங்களில் இருந்து அவருக்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். சூர்யா சமீபத்தில் நடித்து வரும் கருப்பு திரைப்படத்தின் போஸ்டர் நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில் சூர்யா சரவணன் என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். அதோடு தனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் இவர் இந்த திரைப்படத்தில் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற கேள்விகளும் எழுகிறது.
கருப்பு டிரெய்லர்
அது போல சூர்யா கஜினி திரைப்படத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்டுக் கொண்டு தன்னுடைய பாடி கார்டை கண்ணாலே போக சொல்லி சொல்லுவார். அதே போல இப்போது கருப்பு திரைப்படத்தின் டீசரிலும் செய்திருக்கிறார். அதுபோல இந்த டீசரில் திரிஷாவை எங்கேயும் காட்டவில்லை. இதனால் த்ரிஷாவின் கேரக்டர் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி கூறிய சூர்யா
இது ஒரு பக்கம் இருக்க இன்று சோசியல் மீடியாவிலும் சூர்யாவிற்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சூர்யாவின் கருப்பு திரைப்பட டீசரை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சூர்யாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக பலர் அவருடைய வீட்டை சூழ்ந்து இருக்கிறார்கள். அப்போது சூர்யா மாடியில் நின்றபடி அனைவருக்கும் கை அசைத்து இருக்கிறார். பிறகு மாடியில் நின்றபடியே ரசிகர்கள் தெரிகிற மாதிரி செல்பி புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார்.
தன்னுடைய ரசிகர்களுக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பி இருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் தெருவில் இருந்தபடியே பூங்கொத்து ஒன்றை தூக்கி வீச, அதை சூர்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும் சட்டென கேட்ச் பிடித்து இருக்கிறார். இந்த சம்பவத்தை நொடிப்பொழுதில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications