அப்பா போட்டோ முன்பு சபதம் போட்ட அர்ஜுனுக்கு அதிர்ச்சி கொடுத்த ராகினி.. கேஸ் போட போகும் நடேசன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் நடு ரோட்டில் வைத்து அர்ஜுனிடம் கோதை குடும்பத்தினர் சவால் விட்டு உன் மீது நாங்கள் கேஸ் போட போகிறோம் என்று பயமுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில் அர்ஜுன் வீட்டிற்கு வந்த நிலையில் அங்கு தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசி ராகினியும் அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழ் குடும்பத்தினர் தாங்கள் புதியதாக குடிப்பெயர போகும் வீட்டை போய் பார்த்துவிட்டு குடும்பத்தோடு காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எதிரே அர்ஜுனும் அவருடைய மாமாவும் வருகின்றனர். அவர்களை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து அர்ஜுன் அவமானப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கே பல்பு கிடைக்கிறது.
அதாவது நீங்க நடுத்தெருவுக்கு வந்துட்டீங்களா? என்று அர்ஜுன் கேட்க அதற்கு நாங்கள் நடுத்தெருவுக்கு எல்லாம் வரவில்லை புது வீட்டுக்கு போக போறோம் என்று சரஸ்வதி சொல்ல, அதற்கு அர்ஜுன் நீங்க என்ன சொந்த வீட்டுக்கா போக போறீங்க? என்று நக்கல் செய்ய நாங்கள் கண்டிப்பா புது வீட்டுக்கு போக தான் போறோம். இன்னும் கொஞ்ச நாளில் சொந்தமாக வீடு கட்ட தான் போறோம். நீ என்கிட்ட ஏமாத்தி வாங்கிய சொத்தை வச்சுக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்காத. இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு கிடையாது.

நீ ஏமாத்தி எங்ககிட்ட இருந்து வாங்கிய சொத்தை நாங்க மீட்டுருவோம். அதற்கு கேஸ் போட போறோம் என்று நடேசன் அர்ஜுனை மிரட்டுகிறார். அதைத்தொடர்ந்து கோதை நீ இப்போ ஆடிக்கிட்டு இருக்கிற இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு கிடையாது.
நீ நேரடியா எங்ககிட்ட மோதி இருந்தா கூட நாங்க உன்னை மதித்து இருப்போம். ஆனா இப்படி என் பொண்ணு வெச்சி எங்களை ஏமாத்தி இருக்க, இது உனக்கு தான் கேவலம் என்று கோதை அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்கிறார்.
அதோடு நான் ஏன் மகன், பேர பிள்ளைகளோடு சந்தோஷமா தான் இருக்கிறேன். ஆனா நீங்க செஞ்ச பாவத்துக்கு எல்லாம் சேர்த்து கடவுள் உங்களுக்கு கண்டிப்பா தண்டனை கொடுப்பாரு. நீங்க செஞ்ச செயலுக்கு எல்லாம் நல்லா இருக்க முடியாது. உன் அழிவு ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு என்று அங்கிருந்து பேசிவிட்டு கிளம்புகின்றனர். அப்போது தமிழ் அர்ஜுன் பக்கத்தில் நெருங்கி வர அர்ஜுன் பயந்து போகிறார்.
அப்போது அர்ஜுன் பயப்படாத இப்ப நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். ஆனால் இன்னொரு தடவை நீ என் முன்னாடி வந்து வெறுப்பேத்துறேங்குற பேர்ல ஏதாவது செஞ்சுகிட்டு இருந்த.. இதே போல நான் பொறுமையா இருக்க மாட்டேன், என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த அர்ஜுன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த தன்னுடைய அப்பா போட்டோவை பார்த்து கொண்டிருக்க, அப்போது அவருடைய அக்கா என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க என்று விசாரிக்கின்றார். அப்போது அர்ஜுனும் அவருடைய மாமாவும் தமிழ் குடும்பத்தினரோடு ஏற்பட்ட பிரச்சனையை குறித்து பேசுகின்றனர்.

சிறகடிக்க ஆசை: வாயைக் கொடுத்து மீனாவிடம் மாட்டிய விஜயா.. ரவியால் வர போகும் அதிர்ச்சி.. முத்து பதிலடி
அதைத்தொடர்ந்து நான் இந்த கோதை குடும்பத்தை வீட்டை விட்டு அனுப்பிவிட்டால் அவங்க கஷ்டப்படுவாங்கனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ சந்தோஷமா இருக்காங்க. இவங்க சந்தோஷமா ரொம்ப நாள் இருக்க விட மாட்டேன். அவங்க கஷ்டப்படுறத நான் பார்ப்பேன் என்று சபதம் போட்டு கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தமிழ் உடைய வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ஜுன் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்
அந்த நேரத்தில் வசு எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டு பிறகு சாப்பிட்டுக் கொண்டே இந்த வீட்டிற்கு வந்த நேரம் தான் சரஸ்வதி கர்ப்பமானது தமிழுக்கு அடுத்தடுத்த வளர்ச்சி வந்து கொண்டே இருக்கிறது என்று நமச்சியும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோதை மொத்த குடும்பத்திற்க்கும் தன் கையால் சாப்பாடு பிசைந்து கொடுக்க, எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். அப்போது வசூவிற்க்கு தான் இந்த வீட்டில் தங்க கஷ்டமா இருக்கும் என்று சரஸ்வதி சொல்ல வசு அப்படியெல்லாம் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து வெளியே போயிட்டு வீட்டிற்கு வந்த ராகினி அம்மா அண்ணன் வீட்டில் இருந்து எல்லாரும் கிளம்பி புது வீட்டுக்கு போக போறாங்களாம். அவங்க இருந்த வீடு ரொம்ப சின்னதா இருந்ததால எல்லோருக்கும் தூங்க கூட இடமில்லாமல் சிரமப்பட்டாங்களாம் என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் ஆமா நானும் கேள்விப்பட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு அம்மா குடும்பத்தோடு வேற வீட்டுக்கு போகிறது எனக்கு வருத்தமாக இருக்கு ஆனாலும் அவங்க போற வீட்டிலையாவது நல்லா இருந்தா எனக்கு சந்தோசம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார்.
அதைக் கேட்டு அர்ஜுனுடைய அம்மா ராகினி பேசுனதை கேட்டியா அவங்க நல்லா இருந்தா எனக்கு சந்தோசம் என்று சொல்றா இவளெல்லாம் ரொம்ப நாளைக்கு நம்ம நம்ப முடியாது என்று பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நாள் பொறுங்கம்மா ராகினி பெயரில் இருக்கும் சொத்துக்களை மெல்ல மெல்ல பேசி நம்ம பெயருக்கு மாத்திடலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் தமிழ் குடும்பத்தினர் எல்லோரும் புது வீட்டிற்கு போவதற்கு கிளம்புகின்றனர். அப்போது வசு தாங்கள் இருந்த வீட்டை விட்டு போவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications