தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ட்விஸ்ட்.. அர்ஜுன் அப்பா பற்றிய உண்மை உடைந்தது.. ஆனால் இப்படியா ஆகணும்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஏப்ரல் 16ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைகிறது. இந்த நிலையில் அர்ஜுன் அப்பா பற்றிய உண்மைகள் அர்ஜுனின் அம்மாவுக்கு தெரிய வருகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் தமிழ் வீட்டிற்கு வந்த அர்ஜுன், சொத்து எல்லாம் என்னுடைய பெயருக்கு வந்து விட்டது என்பதால் நீங்க அழுதுட்டு இருப்பீங்கன்னு பார்த்தா இன்னும் நீங்க தைரியமா இருக்கீங்களா? என்று பேசிக் கொண்டிருக்கிறார்.. அதற்கு தமிழ் இன்னும் ஒரு சில நாட்களில் உனக்கு சொத்தை எழுதி தந்த ராகிணியே உன்னிடமிருந்து சொத்த மீண்டும் வாங்கிக்க போறா என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் நீங்க நினைக்கிறது கனவுல கூட நடக்காது.

உங்களுக்கு உங்க குழந்தை ராசி இல்ல. அதனால சொத்து எல்லாம் உங்களை விட்டு போயிடுச்சு. இன்னும் அந்த குழந்தை உங்க கூடவே இருந்தா உங்களுக்கு கெட்டது மட்டும் தான் நடக்கும் என்று பேச அதற்கு கோபமான சரஸ்வதி என் குழந்தையை பற்றி ராசி இல்லாத குழந்தைன்னு சொல்லுவியா என்று அர்ஜுன் கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்கிறார். அதோடு அத்தையை ஏமாத்தி நீ சொத்தை வாங்கி இரண்டு வருஷம் ஆயிடுச்சு. இப்ப அந்த சொத்து உன் பேருக்கு வந்துடுச்சு.

ஆனா ரெண்டு நாளைக்குள்ள உன் பேரில் இருக்கிற சொத்தை மீண்டும் நாங்க வாங்கிடுவோம் என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் என்ன நீங்க சபதம் போடுறீங்களா? என்று கேட்க அதற்கு சரஸ்வதி நான் சபதம் எல்லாம் போடல.. நான் செஞ்சு முடிப்பேன் என்று கோபமாக கத்துகிறார். அடுத்த கட்டத்தில் அர்ஜுன் உடைய அக்காவும் அம்மாவும் கோயிலுக்கு வந்திருக்கும்போது அங்கு கணவன் மனைவி ஆக இருவர் வருகிறார்கள்.

அவர்கள் அர்ஜுனுடைய அப்பா பெயரை சொல்லி, அவருடைய மனைவி தானே? என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? உங்க கணவர் கம்பெனியை விற்க போறேன் என்று சொன்னபோது நான் வாங்குறேன் என்று வந்தேன். முதலில் கோதையும் அவருடைய கணவரும் உங்களுடைய கணவரிடம் கம்பெனியை வாங்கிக்கிறோம் என்று சொன்னாங்க. ஆனா அவங்களால நெனச்ச நேரத்தில் பணம் புரட்ட முடியாமல் போயிடுச்சு. பேங்கில் அவர்களை ஏமாத்திட்டாங்க.

அதனாலதான் அவங்களால உங்க கம்பெனியை வாங்க முடியாம போயிடுச்சு. அந்த நேரத்தில் எனக்கும் பணம் லாக் ஆயிடுச்சு. அதனால்தான் நானும் வர முடியாமல் ஆகிட்டேன். ஆனால் கோதையும் அவருடைய கணவரும் உங்களை ஏமாத்தல. அவங்க பணம் வந்ததும் உங்களை தேடி அலைஞ்சாங்க. ஆனா நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம போயிடுச்சு என்று சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியான அர்ஜுன் உடைய அம்மா மீண்டும் மீண்டும் கோதை அப்போ என் கணவரை ஏமாற்றலையா? என்று கேட்க,
அதற்கு அவர் இல்லவே இல்ல என்று நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்ல அதைக் கேட்டு அர்ஜுனின் அக்காவும் அம்மாவும் பீல் பண்ணுகின்றனர். கோதை குடும்பம் எத்தனையோ முறை நம்மிடம் தப்பு பண்ணலன்னு சொன்ன போதும் நாம நம்பாம அவங்களுக்கு பிரச்சனை மேல பிரச்சனை கொடுத்துட்டோமே என்று பீல் பண்ணி இனி அவங்களோட சொத்து அவங்க கிட்டயே கொடுத்துருவோம் என்று வீட்டிற்கு வந்து அர்ஜுனிடம் கோயிலில் நடந்ததை சொல்கின்றனர்.

ஆனால் அர்ஜுன் இதை நம்ப மறுக்கிறார். அதோடு இது தமிழ் செட் பண்ண ஆட்களாக தான் இருக்கும். அவங்க தான் இப்படி வந்து பேசிட்டு இருக்காங்க நான் இனி சொத்தை திருப்பி கொடுக்க மாட்டேன். என் பெயருக்கு வந்த சொத்து இனி எனக்குத்தான். அவங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. அது அதுபோல அவங்கள நிம்மதியாக இருக்கவும் விடமாட்டேன் என்று பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications