பட்டும் திருந்தாத தமிழுக்கு அர்ஜுன் கொடுத்த அதிர்ச்சி.. உடைந்து போன குடும்பம்.. கலங்கி நிற்கும் கார்த்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி மூன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கோதை குடும்பத்தை கூப்பிட்டு இருக்கிறார்.
அங்கு ஃபங்ஷனுக்கு வந்த இடத்தில் தமிழ் குடும்பத்தை அர்ஜுன் அவமானப்படுத்த கடைசியில் அதிர்ச்சி கிடைக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கார்த்தி வாக்கிங் போய் இருந்த இடத்தில் அங்கு வரும் அர்ஜுன் கார்த்தியை சீண்டி பார்க்க வேண்டும் என்று எங்களுடைய குழந்தையின் பங்க்ஷன்க்கு என் வீட்டுக்கு நீங்க வரிங்கலாமே வாங்க வாங்க உங்களுக்காக தான் நான் பிரியாணி சொல்லி இருக்கேன் வந்து நல்லா பிரியாணி சாப்பிட்டுட்டு போங்க என்று நக்கல் அடிக்கிறார்.
அதற்கு கார்த்திக் கோபப்பட்டு உன் வீட்டு பங்க்ஷனுக்கு நாங்க வரமாட்டோம். நீ இப்போ ஜாமின்ல தான் வெளியே வந்து இருக்க, நிரந்தரமா வந்து இருக்கேன்னு ஆட்டம் போடாத என்று சொல்ல, நீங்க வரலன்னு சொன்னாலும் அத்தை உங்களை என் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்காக வீட்டில பேச்சு வார்த்தை பண்ணிக்கிட்டு இருக்காங்கலாமே என்று கார்த்தியை மேலும் அர்ஜுன் ஏத்தி விடுகிறார்.

அதற்கு கோபமான கார்த்தி அம்மா உனக்காக இதெல்லாம் பண்ணல. நீ ராகினியை ஏமாத்தி உன் பக்கத்துல திருப்பி வைத்து இருக்கிறது போல அம்மாவையும் உன் பக்கமா மாத்திகிட்டு இருக்கிறியா? அம்மா வீட்டுல ஃபங்ஷனுக்கு வரதுக்காக பேசுறது கூட ராகினிக்காக தான் உனக்காக இல்லை என்று பேசிவிட்டு கோபமாக அங்கிருந்து கார்த்தி வீட்டுக்கு போக அந்த நேரத்தில் கோதை எல்லாரையும் ஃபங்ஷனுக்கு கிளம்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் நடேசன் நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் நீங்க வேணா போயிட்டு வாங்க என்று சொல்ல அங்கு வரும் கார்த்தி ஆமா நானும் வரமாட்டேன யாரும் அங்க போக வேண்டாம் வழியில் அர்ஜுன் என்னை பாத்து பிரியாணி சாப்பிடறதுக்காக என் வீட்டுக்கு வரீங்களா என்று என்ன அவமானப் படுத்துகிறான் என்று நடந்ததை சொல்ல அதற்கு தமிழ் நாம அவனுக்காக போகல, நம்ம போறது ராகினிக்காகவும் குழந்தைக்காகவும் தான் என்று சொல்ல வேறு வழியில்லாமல் கார்த்திக் முதலாக வீட்டில் இருக்கும் எல்லோரும் கிளம்புகின்றனர்.

அந்த நேரத்தில் ராகினி இன்னும் தன் குடும்பத்தினர் வரவில்லையே என்று சோகத்தில் இருக்க அப்போது அர்ஜுனின் அம்மா டேய் நடக்கிறதை பார்த்தா கோதை குடும்பம் வராது போலயே.... அவங்க வந்து அவமானம் பட்டா தானே சந்தோஷமாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கோதையின் குடும்பத்தினர் அங்கே வர அவர்களை அர்ஜுன் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.

பிறகு அர்ஜுனின் மாமா கோதையை இப்போதே கேவலப்படுத்தலாமா என்று கேட்க அதற்கு அர்ஜுன் வேண்டாம் நேரம் பார்த்து செய்யலாம் என்று சொல்லிக் கொண்டு குழந்தைக்கு பெயர் வைக்கின்றனர். பெயர் வைத்து பங்க்ஷன் முடிந்ததும் எல்லோரையும் சாப்பிட சொல்லி ராகினி சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு எல்லோரும் எங்களுக்கு வேண்டாம் இங்கு வந்தவங்கள பாருங்க என்று சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் அர்ஜுன் நான் கூட நீங்க எல்லாம் அங்க வர மாட்டீங்கனு நினைச்சேன். என்னை ஜெயிலுக்கு அனுப்புன தமிழ் சார் என் வீட்டுல சாப்பிடுறதுக்காக வந்திருக்கிறார் ரொம்ப நன்றி சார் என்று சொல்லி, தனக்கு ஜெயிலில் இருந்து வெளியே வருவதற்கு கோதை தான் உதவி செய்தார் என்பதை அனைவரும் முன்பும் போட்டு உடைக்க அதனால் கார்த்தி கோவப்படுகிறார்..
நான் நினைச்சது போலவே நடந்திருக்கு அம்மா தான் இதை பண்ணி இருப்பாங்கன்னு நான் சந்தேகப்பட்டேன். அதுபோலவே நடந்துடுச்சி.. ஏன் அம்மா இப்படி எல்லாம் பண்ணுனீங்க? இவனுக்கு போய் நீங்க உதவி செஞ்சுருக்கீங்க என்று கோபப்பட்டு கத்தி கொண்டு இருக்க, சரஸ்வதி வசு எல்லோரும் கோதை இடம் ஏன் இப்படி பண்ணுனீங்க என்று கேட்கிறார்கள். அதற்கு கோதை எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார்.

அந்த நேரத்தில் தமிழ் அம்மா செஞ்சது தப்பு இல்ல, அம்மா ராகினிக்காக தானே இப்படி செஞ்சாங்க.. இவனுக்காக பண்ணிருக்க மாட்டாங்க என்று சப்போர்ட் பண்ணுகிறார். தான் நினைச்சது நடக்காததால் கோபமான அர்ஜுன் அனைவரும் முன்பும் நான் தமிழை ஜெயிலுக்கு அனுப்புவேன், என் கம்பெனியை நீங்க இழுத்து மூட வச்சிங்கள அதுபோல உங்க கம்பெனியை இழுத்து மூட வைப்பேன் அதுக்கான வேலையை நான் பண்ணுவேன் என்று கோபமாக சவால் விடுகிறார்.
அதற்கு தமிழ் முடிஞ்சதை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வர ராகினி ஏன் அர்ஜுன் இப்படி எல்லாம் பண்ணுனீங்க என்று கோபப்பட்டு அங்கிருந்து போகிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications