விஜய் டிவி பிரைம் டைம் சீரியலின் கிளைமாக்ஸ் சூட் முடிந்தது.. கதாநாயகன் உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் கடைசி நாள் சூட்டிங் முடிந்து விட்டதாக சீரியல் நடிகர் நடிகைகள் சில போஸ்ட் வெளியிட்டு இருக்கின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்போது சீரியல் முடிவால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் சீரியலில் நடிக்கும் நடிகர்களும் தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

tamilum saraswathiyum serial last day shoot finish

அந்த வகையில் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் குமரன் தான் இயக்கி வருகிறார். சீரியலில் கதாநாயகனாக நடிகர் தீபக் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நடிகை நட்சத்திரா நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் இயக்குனர் குமரன் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பு பெற்று இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல வந்த கதையை மீண்டும் மீண்டும் வருவதுபோன்று இருந்ததால் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட தொடங்கிவிட்டது. அதிலும் சமீப காலமாக அர்ஜுன் மற்றும் தமிழ் குடும்பத்திற்கு இடையே வரும் சண்டை சச்சரவுகள் மட்டுமே கதையை மையப்படுத்தி கொண்டிருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர்.

இப்படியான நிலையில் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே இயக்குனர் குமரன் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலை இயக்கியிருக்கும் நிலையில் அந்த சீரியல் இனி தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக்கு வீடு வாசல்படி சீரியலுக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் கதாநாயகன் நடிக்கும் தீபக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோயில் சில ஃபேன்ஸ் பேஜில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் கிளைமாக்ஸ் என்று இருந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கும் நட்சத்திரா சீரியலின் பைனல் டே சூட் முடிந்து விட்டது என்று சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலில் வசுவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியலில் லாஸ்ட் டே சூட் முடிவடைந்தது என்றும் தான் ரசிகர்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுவதாகவும் அதில் பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே சரஸ்வதிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது என்று சொல்லி இருந்த நிலையில் கடைசியில் சரஸ்வதிக்கு குழந்தையே பிறக்காது என்று சாபம் விட்ட ராகினி தான் சரஸ்வதிக்கு டெலிவரி பார்த்திருக்கிறார்.

இனி கோமாவில் இருக்கும் அர்ஜுன் கண்விழித்து உண்மைகளை சொன்னால் தமிழ் குடும்பத்தின் மீது கோபத்தில் இருக்கும் ராகிணி மனம் மாறுவார். அதே நேரத்தில் ராகிணி தன்னுடைய சொத்துக்களை அர்ஜுன் பெயருக்கு மாற்ற போகிறேன் என்று இன்றைய எபிசோடில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இந்த சீரியல் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+