ராகிணி டாக்டர் சேரில் அமர்ந்ததும் அர்ஜுன் குடும்பம் சொன்ன வார்த்தை.. ஆனால் தமிழ் இப்படி பேசிட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராகிணியை கடத்திட்டு வந்து தமிழ் ராகினிக்கு மருத்துவமனை வச்சு கொடுத்திருக்கும் விஷயத்தை சொல்ல ராகினி கண்கலங்குகிறார்.
அதே நேரத்தில் ராகிணி தேடி அங்கே வரும் அர்ஜுன் குடும்பத்தினர் ராகிணி மீண்டும் தமிழ் குடும்பத்தோடு சேர்ந்து விட்டதை பார்த்து அதிர்ச்சியாகி ராகிணியை இவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று அடுத்த பிளான் போடுகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராகிணியை நமச்சியும் தமிழும் முகமூடி அணிந்தபடி கடத்திக் கண்டு வர அதை பார்த்து பதறி போன அர்ஜுன் குடும்பத்தினர் காரில் ராகிணிபின்னாடியே வந்து கொண்டிருக்கின்றனர். பிறகு ராகிணியை தமிழ் தான் புதியதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட அப்போது ராகினி கண் முழித்ததும் அங்கே இருக்கும் தன்னுடைய குடும்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
எல்லோரும் இங்கே என்ன பண்ணுறீங்க என்று கேட்க அதற்கு எல்லாரும் சர்ப்ரைஸ் என்று கத்துகின்றனர். அப்போது அர்ஜுன் மொத்த குடும்பமும் அந்த வீட்டிற்கு வந்து விடுகின்றனர். பிறகு ராகிணியை பார்த்ததும் மாமியார் உனக்கு ஒன்னு இல்லையம்மா என்று பதறி கேட்டுக் கொண்டிருக்க அப்போது ராகிணி கையை உதறியபடி, ஏன் இப்படி எல்லாம் பண்ணுனீங்க என்று சரஸ்வதி கோதை இடம் கேட்கிறார்.

அதற்கு வசு உனக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகத்தான் தமிழ் மாமா இங்க கூட்டிட்டு வந்தாரு என்று சொல்லி அங்கே பார் என்று சொல்ல அங்கு கோதை மருத்துவமனை என்று போர்டு மாற்றப்பட்டிருக்கிறது. அதை பார்த்து ராகிணி கண்கலக அதற்கு கோதை நீ படிச்ச படிப்பு வீணாகிட கூடாது இல்ல அதுக்காகத்தான் உனக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று சொல்கிறார்.
அப்போது நடேசன் நமக்குள்ள ஆயிரம் மன கசப்புகள் இருக்கலாம். ஆனால் உன்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா அதைவிட எங்களுக்கு வேற எனன சந்தோஷம் இருக்கு என்று சந்தோஷப்படுகிறார். அதற்கு ராகிணி நீங்க சொந்தமா வீடு வாங்க தானே போறீங்கன்னு சொன்னீங்க என்று சொல்ல அதற்கு தமிழ் நாங்க இப்போ வீடு வாங்கினா அது எங்க குடும்பத்துக்கு மட்டும்தான் நல்லா இருக்கும்.
ஆனா இந்த ஹாஸ்பிடல் உனக்கு வச்சு தந்தா உன்னால பல பேர் நன்மை அடைவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராகிணி, அண்ணா உனக்கு என் மேல கோபம் இல்லையா என்று கேட்க அதற்கு தமிழ் என் தங்கச்சி மேல நான் எதுக்கு கோபப்பட போறேன் என்று சொல்ல ராகிணி தமிழை கட்டிப்பிடித்து அழுகிறார். பிறகு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இதை எல்லாம் பார்த்த அர்ஜுன் குடும்பத்தினர் இவ மீண்டும் அவ குடும்பத்தோட சேர்ந்துட்டாளே என்று பொறாமையில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகிணி அர்ஜுனுக்கு போன் போட்டு தனக்காக தன்னுடைய அண்ணன் மருத்துவமனை வாங்கி கொடுத்திருப்பதை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு ஹாஸ்பிடலுக்கு தேவையான எக்யூப்மென்ட் எல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு அர்ஜுன் குடும்பத்தினர் இவ்வளவு நாளா இல்லாம இப்ப என்ன உங்க அண்ணன் உன் மேல இவ்வளவு பாசம் காட்டுறாரு? எதுக்காக உனக்கு ஹாஸ்பிடல் எல்லாம் வாங்கி கொடுக்கிறாரு? நீ அங்க போக வேண்டாம் என்று சொல்ல அதற்கு ராகிணி நான் இப்போ வேற யார்கிட்டயும் வேலைக்கு போகல என்னுடைய ஹாஸ்பிடலுக்கு தானே போகிறேன் நான் இது பற்றி அர்ஜுனிடம் பேசுகிறேன் என்று நோஸ்கட் பண்ணி விட்டு போகிறார்.
பிறகு தமிழ் வீட்டில் எல்லோரும் ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்தது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கார்த்தி எனக்கு முதலில் ராகிணிக்கு மருத்துவமனை கொடுப்பது சம்மதம் கிடையாது. ஆனால் அவருடைய முகத்தில் அந்த சந்தோஷத்தை பார்த்ததும் எனக்கு அவளை குழந்தையா பார்த்த மாதிரி இருந்துச்சு என்று சொல்லிக் கொண்டு இருக்க கோதை என்னுடைய குழந்தைகள் எல்லோரும் ஒற்றுமையா இருக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications