தமிழா தமிழா மாற்றுத்திறனாளி மிரண்டாவிற்கு தேசிய விருது! காதல் மனைவியின் சபதம் வென்றது.. கண்கொள்ளாக் காட்சி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளை காதலித்த திருமணம் செய்து கலந்து கொண்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்த மிரண்டா என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு இப்போது தேசிய விருது கிடைத்திருக்கிறது.
பொதுவாக சிலரை பார்க்கும்போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று வியக்க வைக்க அளவிற்கு இருக்கும். அதே போலத்தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு காதல் தம்பதி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே வியக்க வைத்தனர். மாற்றுத்திறனாளி ஆணை காதலித்து, தன்னுடைய குடும்பத்தை எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பெண்ணை பலரும் பாராட்டி வந்தனர். இது போல முடிவை எல்லாம் யாரும் எளிமையாக எடுத்து விட முடியாது.

பொதுவாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை நார்மலாக இருக்கும் மக்களை போல எளிமையானது இல்லை. அவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட அடுத்தவர்களின் ஒரு துணையை தேட வேண்டிய நிலைமை இருக்கிறது. என்னதான் அவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்து முன்னேறி வந்தாலும் சில இடங்களில் அவர்களுக்கு அடுத்தவர்கள் துணை தேவைப்படுகிறது. ஆனாலும் தன்னுடைய காதல் கணவரின் வாழ்க்கை துணையாகவே நான் வருகிறேன் என்று ஒரு மனைவியை எடுத்த முடிவு அவரை அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது.
ஆனால் ஆரம்பத்தில் இதே மனைவியை பலர் வசைப்பாடி, ஏளனமாக அசிங்கப்படுத்தி இருந்தார்களாம். சரி அவர்களுடைய காதல் கதையை பற்றி பார்ப்போமா? அதாவது மிராண்டா என்ற நபருக்கு பிறவியிலேயே கண் பார்வை தெரியாதாம். பிறகு நாட்கள் செல்ல செல்ல அவருக்கு காதும் கேட்காமல் போயிருக்கிறது. ஒரு சிலருக்கு தான் இப்படி நடக்குமாம். சிலருக்கு காது கேட்காது, வாய் பேசாதது இருப்பார்கள். ஆனால் கண் தெரியாதவர்களுக்கு காது நன்றாகவே கேட்கும். காது மூலமாகத்தான் சுற்றி நடப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
தொடு உணர்வு மற்றும் கேட்கும் உணர்வை வைத்து அவர்கள் சுற்றி நடப்பதற்கு ரியாக் செய்வார்கள். ஆனால் இவருக்கு வேறுவிதமான பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியால் தொடு உணர்வு மூலமாகவே பட்டப்படிப்பை முடித்து ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்திருக்கிறார். அந்த காலேஜுக்கு மாணவியாக போனவர் தான் அவருடைய மனைவி.
பிறகு இருவருக்குள் ஏற்பட்ட புரிதலால் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் நார்மலாக இருப்பவர்களை போல பேச முடியாது. மிராண்டா போனில் பேசுவதற்கு அடுத்த நாள் இமெயிலில் அவருடைய மனைவி மெசேஜ் அனுப்புவாராம். அதை ஒரு சிறப்பு கருவியின் மூலமாக படித்து பார்த்து அதற்கு மாலையோ அல்லது அடுத்த நாளோ தான் மிராண்டா போனில் பேச முடியுமாம். இப்படித்தான் இவர்களுடைய காதல் வளர்ந்து இருக்கிறது.
பிறகு இவர்களுடைய காதலை வீட்டில் சொன்னதும் வழக்கம் போல பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையாம். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு வாடகைக்கு கூட வீடு கிடைக்காமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். கர்ப்பமாக இருந்த சமயத்தில் திடீரென்று ஒரு நாள் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாராம். அப்போது கூட இவருக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.
பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தான் காப்பாற்றி இருக்கிறார்கள் இப்படி இவர்களுடைய சவாலான வாழ்க்கையை நீண்டு கொண்டிருந்த நிலையில் தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசி இருந்தனர். இவர்களுடைய காதல் அனைவரையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் பல மாணவர்களின் படிப்புக்காக உதவி செய்வதற்காக மிரண்டாவிற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஒரு மனைவியின் துணை இன்றி இவரால் இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற முடியாது என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications