அம்மி கொத்தி படிக்க வைத்த அம்மா.. ஆனால்! “தமிழா தமிழா”வில் மகன் செய்த செயல்.. கண்ணீரை வரவைத்த காட்சி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் மே 27 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் வறுமையிலும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்களும், படித்து சாதித்த குழந்தைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் அம்மி, உரல் போன்றவற்றை கொத்தும் வேலை செய்து தன்னை படிக்க வைத்த அம்மா பற்றி ஒருவர் பேசிய வார்த்தைகளை கேட்டு பலரும் கண் கலங்கி இருக்கின்றனர்.
பொதுவாக பெற்றோர்கள் தாங்கள் என்னதான் கஷ்டப்பட்டாலும் தங்களுடைய குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை நன்றாக படிக்க வைத்து விடவும் வேண்டும் என்று தங்களுடைய திறனையும் மீறி கடனை வாங்கி கூட பலர் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.

அதேபோல ஒரு சில பிள்ளைகள் தங்களுடைய தந்தை தாய் தங்களுக்காக படும் வேதனைகளை பார்த்து புரிந்து கொண்டு அவர்களுடைய வேதனையை துடைப்பதற்கு தங்களுடைய கவனத்தை படிப்பில் வைத்து சாதித்து இருக்கிறார்கள். அந்த வகையில் சாதித்தவர்கள் தான் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
வரும் மே 26 ஆம் தேதிக்கான எபிசோடில் வறுமையிலும் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்த பெற்றோர்களும் படித்து சாதித்த குழந்தைகளும் கலந்து கொள்கிறார்கள். அதில் பல பெற்றோர் நாங்கள் வீட்டு வேலை செய்தோம், இட்லி கடை வைத்தும், சாக்கடை அள்ளியும் எங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்தோம் என்று கண்கலங்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் இன்று அரசு வேலைகளிலும், தனியார் துறையில் மிகப்பெரிய பதவிகளிலும் கம்பீரமாக இருப்பதை பார்த்து தாங்கள் இப்போது சந்தோஷப்படுவதாக கண்கலங்கி பேசியிருந்தார்கள். அந்த வகையில் தற்போது வெளியான ஒரு ப்ரோமோவில் ஒரு நபர் பேசிய வார்த்தைகள் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
அதாவது அவர் பேசுகையில் என்னுடைய சின்ன வயசுல எங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப தூரம் நடந்து போய் அம்மி, உரல் போன்றவற்றை கொத்தும் வேலைகளை செய்வார்கள். அதாவது அந்த நேரத்தில் பல வீடுகளிலும் அம்மி உரல் போன்றவைகள் தான் இருக்கும் அதில் உளி வைத்து சுத்தியலை கொண்டு துளையிட்டு உரல் மற்றும் அம்மி போன்றவற்றை மீண்டும் புதியது போன்று செதுக்கி கொடுப்பார்கள்.
அந்த வேலையைத்தான் அந்த நபரின் அம்மாவும் அப்பாவும் செய்து கொண்டிருந்தார்களாம். பிறகு அப்பா திடீரென்று இறந்து போய்விட்டார். அதற்குப் பிறகு அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார். நான் அப்போதே நன்றாக படித்து நல்ல வேலைக்கு போனதும் என்னுடைய அம்மாவை உட்கார வைத்து சாப்பாடு போடணும் என்று நினைத்தேன்.
நான் நினைத்த மாதிரியே படித்து முடித்து கவர்மெண்ட் வேலைக்கும் போய் விட்டேன். ஆனால் இப்போது என்னுடைய அம்மாவுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. என்னுடைய அம்மா நான் படித்து முடித்த கொஞ்ச நாளிலேயே இறந்து போய்விட்டார். எதிர் தரப்பில் எல்லோரும் அவர்களுடைய அம்மா அப்பா தங்களுக்காக செய்த தியாகங்கள் குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய பெற்றோர் குறித்து பெருமைப்படுத்துகிறார்கள் என்னுடைய பெற்றோர் அந்தப் பக்கத்தில் இல்லை. ஆனால் அவர்களுடைய புகைப்படத்தை அங்கு ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தன்னுடைய அம்மா அப்பாவின் புகைப்படத்தை எதிர் தரப்பில் வைத்திருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications