Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண் முன்பே உயிருக்கு போராடிய காதல் கணவன்.. எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத அவலம்! ப்ரோபோசரின் கண்ணீர் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் (Tamizha Tamizha) தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சமூகத்தில் பேசப்படாமல் உள்ள உண்மைகள் மேடையேறும். கடந்த வாரம் "வாழ்க்கைத் துணையை இழந்த பிறகு அதிகமாக கஷ்டப்படுவது கணவர்களா? மனைவிகளா?" என்ற தலைப்பில் நடந்த விவாதம் பலரையும் சிந்திக்க வைத்தது. ஆனால் அந்த அரங்கில் பேசிய பேராசிரியர் சுபாவின் வாழ்க்கை கதை, பார்வையாளர்களை மட்டும் அல்ல - அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரையும் மனம் உருகச் செய்தது.

(Tamizha Tamizha episode) ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் சுபாவிற்கு, தனது கிராமத்துக்கு அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது பள்ளிக்குச் செல்லும் வழியில் தனது சைக்கிளை ஒரு பேன்சி கடை முன் நிறுத்துவாராம். அந்த கடை அந்த ஊரில் பிரபலமானது. அங்கே இருந்தவர் தான் அருணாச்சலம். ஊரில் உள்ள அனைவரும் அவரை "அருணாச்சலம் அண்ணா" என்று அழைப்பார்களாம். அதேபோல சுபாவும் அண்ணா என்றே அழைத்துக் கொண்டிருந்தாராம்.

Zee Tamil Tamizha Tamizha Tamil Television

பிறந்தநாள் வாழ்த்து

பள்ளி முடிந்து கல்லூரி சேர்ந்த பிறகும் அதே பழக்கம் தொடர்ந்தது. ஒருநாள் அவரது டிரைவிங் லைசென்ஸில் இருந்த பிறந்தநாள் தேதியை பார்த்து சுபா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னாராம். நண்பர்கள் எல்லாருக்கும் பரிசு கொடுப்பது சுபாவின் பழக்கம். அதேபோல அருணாச்சலத்திற்கும் ஒரு சிறிய பரிசு கொடுத்தாராம்.

அந்த தருணத்தில் அருணாச்சலம் அழுதுவிட்டாராம். "என் வாழ்க்கையில் யாரும் எனக்கு பிறந்தநாள் கொண்டாடியதில்லை... பரிசு கொடுத்ததில்லை...என்று சொன்னாராம்" என்ற அந்த ஒரு சம்பவம் இருவருக்குமிடையேயான உறவை இன்னும் நெருக்கமாக்கியது.

அவர்களுடைய நட்பு சாதாரணமாக உருவானதல்ல. அரசியல், தலைவர்களின் வரலாறு, வெற்றி கதைகள் - இப்படிப்பட்ட விஷயங்கள்தான் அவர்களுடைய பேச்சு. "நாம இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நம்ம குழந்தைகள் இன்னும் அறிவாளிகளாக வளர்வார்கள்" என்று அருணாச்சலம் சொன்னபோது தான் அந்த நட்பு காதலாக மாறியது. ஆரம்பத்தில் சுபா அமைதியாக இருந்தாலும், பின்னர் அந்த காதலை ஏற்றுக் கொண்டாராம்.

திருமண பேச்சு

பிறகு சுபாவின் வீட்டில் திருமண பேச்சு வந்தபோது தான் இந்த காதல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் சுபாவின் குடும்பம் சம்மதிக்கவில்லை. காரணம் - அருணாச்சலம் பத்து வயது மூத்தவர், வேறு ஜாதி. அதனால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு கணவர் தான் உலகம் என்ற அளவுக்கு வாழ்ந்த சுபாவிற்கு ஒரு மகன் பிறந்தான். வாழ்க்கை முழுவதும் அமைதியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

ஒரு நாள் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் "விவாகரத்து" என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் சுபா கலந்து கொண்டிருந்தாராம். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது தொடர்ந்து போன் வந்து கொண்டே இருந்திருக்கிறது. என்ன நடந்தது என்று கேட்டபோது தான் கணவர் சென்றிருந்த பைக் விபத்து பற்றி தெரிந்தது. அவருடன் இருந்த நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அருணாச்சலத்திற்கு பெரிய காயம் எதுவும் இல்லாமல் வீட்டிற்கு வந்திருந்தாலும், நண்பனை இழந்த அதிர்ச்சி அவரை மனதளவில் உடைத்துவிட்டது.

ஜீ தமிழில் தமிழா தமிழா

அந்த இரவு விடியற்காலை மூன்று மணியளவில் திடீரென அருணாச்சலத்திற்கு மாரடைப்பு. என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் சுபா ஆம்புலன்ஸை அழைத்தார். அவசரத்தில் சுடிதார் டாப் மட்டும் அணிந்து, பேண்ட் மற்றும் ஷாலை கையில் எடுத்தபடியே ஓடினாராம். "என் கணவரை காப்பாத்துங்க" என்று ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம் கெஞ்சிக் கொண்டே சென்றாராம்.

ஹாஸ்பிடலுக்கு போனதும் சிகிச்சை ஆரம்பித்து இருந்திருக்கிறார்கள். ஆனால் அங்கே ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் இல்லை. வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றாலும் ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம். அந்த பயத்திலும் பதட்டத்திலும் இருந்த நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து "நீ பேண்ட் கூட போடாமல் எப்படி வந்திருக்க?" என்று திட்டினாராம்.

Zee Tamil Tamizha Tamizha Tamil Television

தலைகுனிய வைத்தது

"என் கணவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது நான் உடை பார்த்து வர முடியுமா?" - அந்த வேதனையை சொன்னபோது அரங்கமே அமைதியாகி விட்டது. தனது கண் முன்னே தனது உலகமே உடைந்து போனதை நினைத்து சுபா அழுதார். "ஒரு படித்த பெண்ணான எனக்கே இந்த நிலைமை. இதே இடத்தில் ஒரு படிக்காத பெண் இருந்தால் இந்த சமூகம் என்ன பேசும்?" என்ற அவரது கேள்வி அங்கே இருந்த அனைவரையும் தலை குனிய வைத்தது.

கணவர் தான் உலகம் என்று வாழ்ந்த ஒருத்திக்கு, அந்த உலகமே ஒரு இரவில் இல்லாமல் போனது. "இனி நான் எப்படி வாழப் போகிறேன் என்று கூட தெரியாமல் இருந்தேன்" என்று சுபா சொன்னபோது, அது ஒரு தனிப்பட்ட கதையாக இல்லை - ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கை நிஜமாக ஒலித்தது. அரங்கில் நடந்த ஒரு விவாதம் முடிந்திருக்கலாம். ஆனால் சுபா பகிர்ந்த அந்த வாழ்க்கை அனுபவம் - இன்னும் பலரின் மனதில் ஓர் அழியாத காயமாகவே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+