தமிழா தமிழா நிகழ்ச்சியில் அடுத்த பிரச்சனை.. அடுத்த வீட்டு பெண்களை கெட்ட வார்த்தையில் பேசலாமா..?
சென்னை: ஜீ தமிழில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வங்கியில் கடன் வாங்கி வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

அதில் வங்கி கடன் வசூலிப்பவர் ஒருவர் பேசிய வார்த்தைக்கு எதிராக ஆவுடையப்பன் கேட்ட கேள்வி பலரையும் கவர்ந்திருக்கிறது. அதற்காக பலரும் ஆவுடையப்பனை பாராட்டி வருகிறார்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி புது பொலிவோடு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் விலகிய பிறகு பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆவுடையப்பன் கலந்து கொண்ட முதல் எபிசோடில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜோதிடர்கள் கலந்து கொண்ட எபிசோடு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து பேசிய வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இப்போதும் பல ஜோதிடர்கள் தொடர்ச்சியாக நடிகர் மாரிமுத்து மீது காவல்துறையில் கம்பளைண்ட் கொடுக்கப்பட்டு அடுத்தடுத்து வீடியோக்களும் பேட்டிகளும் கொடுத்து மாரிமுத்து பற்றி பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வங்கிகளில் கடன் வாங்கி வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பல சுவாரசியமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் பேங்கில் லோன் கட்டாதவர்களிடம் பணத்தை வசூலிக்கும் வேலையை செய்து வந்திருக்கிறார். அவரோடு ஆவுடையப்பன் செய்த வாக்குவாத தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வகையில் வங்கியில் கடன் வாங்கும் போது நீங்கள் கடன் கட்டவில்லை என்றால் எப்படி எல்லாம் பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி உங்களிடம் சொன்னார்களா? என்று ஆவுடையப்பன் அங்கிருக்கும் ஒரு நபரிடம் கேள்வி கேட்க, அவர் சத்தியமா சொல்லல சார் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து அதே நபர் சார் எனக்கு ஏஜென்சியிலிருந்து ஒரு லேடி பேசுறாங்க. நீ ஆம்பளையா என்று கேக்குறாங்க என்ன சார் செய்வீங்க என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு எதிரணியில் இருக்கும் நபர், "வார்த்தைகள் வரத்தான் செய்யும். அப்படி கடுமையாக பேசினாலாவது நீங்க தர மாட்டீங்களே" என்று தான் என சொல்ல, அதற்கு ஆவுடையப்பன் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக்கி தான் வாங்குவேன் என்கிறது முறையல்ல என்று சொல்ல, அப்படியாவது மானம், சூடு, சொரணை வந்து அந்த பணத்தை கொடுத்துருவாங்கன்னு தான் பேசுறது என்று கேஷுவலாக சொல்கிறார்.
அதற்கு ஆவுடையப்பன்," சூடு இருக்கா, சொரணை இருக்கா? என்ன இது என்ன மாதிரி லாங்குவேஜ் சூடு இருக்கா சொரணை இருக்கா என்று டெஸ்ட் வைச்சிட்டு கடன் கொடுத்தீங்களா? அதுபோல கடன் தரவில்லை என்றால் வீட்டில் இருக்கும் பெண்களை கெட்ட வார்த்தைகள் திட்டுவது எவ்வளவு அபத்தம் தெரியுமா? கடன் கொடுக்கும் உங்களுக்கும் வீட்டில் ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வரும்.
இக்கட்டான சூழ்நிலையில் கடன் வாங்கி விடுவீர்கள். அப்போது இப்போ வந்த மாதிரி கொரோனா அப்படி என்று ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டது. உங்களால் திருப்பிக் கடனை கொடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் உங்களுக்கு கடன் கொடுத்தவர் உங்கள் மனைவியை கெட்ட வார்த்தையில் பேசினால் உங்களுக்கு சரி என்று தோணுமா? நாம லோன் கட்டல. அதனால கெட்ட வார்த்தையில் பேசிட்டு போகட்டும் என்று விடுவீங்களா? என்று அந்த நபரை பேசவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
கடன் கட்டவில்லை என்றால் சிவில் பிரச்சனை. ஆனால் நீங்க சொன்ன மாதிரி கெட்ட வார்த்தையில் பேசுறது கிரிமினல் பிரச்சனை. நீங்க கிரிமினல் கேசில் தண்டிக்கப்படும். ஆனால் அவங்க சிவில் சட்டத்தில் தான் தண்டிக்கப்படுவார்கள். இதில் எந்த பிரச்சனை பெருசு என்று கேட்கிறார். அங்கிருப்பவர்களும் கைதட்டி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications