புது பொலிவுடன் தமிழா தமிழா...டிரைவர் "ஷர்மிளா”வின் அதிரடி வாக்குவாதம்.. எதிர்ப்பக்கம் யார் தெரியுதா?
சென்னை: ஜீ தமிழில் இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சியை இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் அவர் விலகிய பிறகு அவருக்கு பதிலாக பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் முதல் எபிசோடில் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது VS போதுமானதாக இல்லை என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்படுகிறது.
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சில வருடங்களாகவே கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு தான் விலகப் போகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விலகி இருந்தார்.

அதற்குப் பிறகு சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. ஆவுடையப்பன் முதல் முறையாக ஜூலை 16ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோட்டை தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது அதற்கான ப்ரோமோ வெளிய வெளியாகி இருக்கிறது.
அதில் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது VS போதுமானதாக இல்லை என்று தலைப்பில் இரண்டு அணிகளாக விவாதிக்கப்படுகிறது. அதற்கு சிறப்பு விருந்தினராக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கலந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல போட்டியாளர்களாக பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் சீரியல் நடிகை ஆகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் இருக்கும் சாந்தி மாஸ்டர் கலந்து கொண்டிருக்கிறார். அவர் சுதந்திரம் என்பது என்ன நினைச்சுக்கிறாங்கன்னா ஆண்களுக்கு ஈக்குவலாக இருக்கணும் என்று கேர்ள்ஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்க..? ஸ்மோக் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்ல, அதற்கு எதிர் அணியில் இருந்து சுதந்திரம் கொடுத்ததனாலதான் இவங்க எல்லாம் ஆடுறாங்க, அதனால சுதந்திர வேண்டாம் என்கிறது சொல்யூஷன் இல்லை என்று ஒரு பெண் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து நடிகை ரேகா நாயர் சுதந்திரம் கிடைச்சிடுச்சு என்று சொன்னவுடனே பேப்பரை தூக்கி வீசுறீங்க, ஆடைகளை தூக்கி வீசுறீங்க, புருஷனை தூக்கி வீசுறீங்க என்று காரசாரமாக பேச, அதற்கு எதிரில் இருந்து ஒரு பெண் பெண்களை உடல் சார்ந்த நுகர்வு பொருளா தான் பாத்துட்டு இருக்காங்க என்று கத்தி பேச, அதற்கு சமீபத்தில் கோவையில் பிரபலமான பெண் டிரைவர் ஷர்மிளா எல்லாருக்கும் காது கேட்கும். நீங்க வந்து ரொம்ப ஹாஸா என்கிட்ட பேச வேண்டாம் என்று கூறுகிறார். இந்த பிரமோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.













Click it and Unblock the Notifications