Tamizha Tamizha: இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது.. தமிழா தமிழாவை கண்ணீரில் மிதக்க வைத்த பெண்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடுமையான அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், "இப்படி ஒரு துயரம் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது" என்று வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த பெண் கூறியதாவது:
"நானும் என் கணவரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வீட்டுல சம்மதம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி தான் வாழ்க்கையை ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் எங்க வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பையனை முதல்ல அரசு பள்ளியில் படிக்க வச்சோம். பின்னாடி 'நம்ம பையன் நல்லா படிக்கணும்'ன்னு சொல்லி என் கணவர் தனியார் பள்ளியில் சேர்த்தார். அதுக்காக கடன் வாங்கி தான் அவனை படிக்க வச்சோம்.
அந்த நேரத்திலேயே என் கணவர் அடிக்கடி சொல்லுவாரு, 'எனக்கு ஏதாவது ஆகிட்டா உன்னால என்னை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் காப்பாத்த முடியாது, நான் அப்படியே செத்துடுவேன்'னு. அப்படித்தான் ஒரு நாள் திடீர்னு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. அதுக்கு முன்னாடி பத்து நாளா தொடர்ந்து குடிச்சிருந்தாரு. குடிச்சதால அவருக்கு உடம்பு ரொம்ப மோசமா இருந்தது.
கை விரித்த டாக்டர்ஸ்
நாங்க அவசரமா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனோம். டாக்டர்ஸ் வந்து, 'இவர் அதிகமா குடிச்சிருக்காரு. இந்த நேரத்தில மருந்து கொடுத்தாலும் வேலை செய்யாது'ன்னு சொல்லிட்டாங்க. நான் அவங்க கால்ல விழுந்து கெஞ்சினேன், 'எப்படியாவது என் புருஷனை காப்பாத்தி குடுங்க'ன்னு. அதற்க்கு அவங்க, 'பத்து நாளா குடிக்கும்போது நீங்க ஏன் தடுக்கவில்லை'ன்னு கேட்டாங்க. எங்களால பதிலே சொல்ல முடியல. குடிக்கிறவங்க மனசு இருந்தா தான் நிறுத்த முடியும். நாம சொன்னா அவங்க கேட்பாங்கன்னு இல்லையே.
தண்ணீருக்காக தவிப்பு
அவர் கடைசிநேரத்துல ரொம்ப தவிச்சார். 'தண்ணி மட்டும் கொடுங்க'ன்னு கேட்டார். டாக்டர்ஸ் தண்ணியும் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் அவர் கையெடுத்து கும்பிட்டு 'ஒரு துளி தண்ணி மட்டும் கொடு'ன்னு கெஞ்சினார். வேற வழி இல்லாம, என் பையனை தண்ணி வாங்கிட்டு வர சொன்னேன். அவன் வெளியே போன சில நிமிஷத்துலேயே, என் கணவர் என் முன்னாலேயே உயிர் விட்டார்.
ஒரு உயிரே போச்சு
அவர் உயிர் போறதுக்கு முன்பு, 'என்னால முடியல... உன் வாயில இருக்கிற உமிழ்நீரையாவது ஒரு முத்தத்தோடு கொடு'ன்னு கையேந்தி கேட்டார். அந்த நேரத்துல எனக்கும் அதுக்குக் கூட சக்தி இல்லாம போச்சு. நான் முத்தம் கொடுக்க போற நேரத்துலேயே, என் கண் முன்னால அவரோட உயிர் போயிடுச்சு.
இன்னிக்கு நானும் என் பிள்ளைகளும் தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். அவர் ஆசைப்பட்ட மாதிரி என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க கூட முடியல. இதுக்கெல்லாம் காரணம் அந்த குடி தான். அதனால எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன். நான் படுற கஷ்டம் உங்க வீட்ல இருக்குற பொண்ணுங்க யாருக்கும் வரக்கூடாது. தயவு செய்து குடியை விட்டுடுங்க. குடியால சந்தோஷம் வராது. நிம்மதி போகும். குடும்பம் சிதறும்."
இந்த பெண்ணின் கண்ணீர் கலந்த வார்த்தைகள், சமூக வலைத்தளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. பலரும், "குடி என்பது ஒருத்தனை மட்டும் அழிக்கல... அவன் பின்னாடி நிற்கும் ஒரு குடும்பத்தையே சிதைக்குது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மது அருந்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
குடிப்பது உங்கள் உடல்நலத்தை மட்டும் கெடுக்கவில்லை. உங்களை நம்பி இருக்குற மனைவி, குழந்தைகள், குடும்பம் முழுவதையும் அதோடு சேர்த்து சிதைக்கிறது. இன்று உங்களுக்கு 'ஒன்னும் ஆகாது'ன்னு தோணலாம். ஆனா நாளை ஒரு நாள், ஒரு துளி தண்ணிக்காக கூட கையேந்தி தவிக்கிற நிலை வந்துடக் கூடாது.
உங்களை விட, உங்களை நம்பி வாழும் மனிதர்களுக்காக குடியை விட்டுடுங்க. உங்க வாழ்க்கையும், உங்க குடும்பத்தின் எதிர்காலமும் உங்க கையில் தான் இருக்கு.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications