பல நாள் கனவு.. தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிந்ததும் நக்ஷத்ரா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
சென்னை: விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்த நக்ஷத்ரா புது கார் வாங்கி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சீரியலில் வந்த கதையே வந்து கொண்டிருக்கிறது என்பது பலருடைய அதிருப்தியாக இருந்தது. ஆனாலும் இந்த சீரியல் டிஆர்பி யில் நல்ல இடத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

கடந்த மாதத்தோடு தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடிகை நக்ஷத்ராவும் அவருக்கு ஜோடியாக தீபக்கும் நடித்திருந்தனர். இந்த நிலையில் சீரியல் முடிவடைந்ததும் நக்ஷத்ரா தான் புதிய கார் ஒன்று வாங்கி இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
தனது ஆசைகளில் ஒன்றாக இருந்த காரை அவர் வாங்கியதும் அதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதோடு என்ன ஒரு அழகான கார்.. இந்த சொகுசு காரை சொந்தமாக்கி கொண்டதால் உருவாகும் உற்சாகத்திற்கு அளவே இல்லை. புதிய அனுபவத்திற்கான நேரம் என்று பதிவிட்டு இருக்கிறார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நக்ஷத்ரா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதிகமான ரசிகர்களை கவர்ந்த நக்ஷத்ரா இப்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, புலிவால், மிஸ்டர் லோக்கல், நம்பியார் போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நக்ஷத்ரா தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் இன்னும் கமிட்டாகவில்லை. இது குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மீண்டும் புது சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications