மாரிமுத்துவுக்கு இறப்பு முன்பே தெரியும்.. அந்த மாதிரி இறப்பு பாடல் கேட்டார்.. பாடல் ஆசிரியர் வருத்தம்
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்து அவர் இறப்பதற்கு முன்பே இறப்பு பாடல் வேண்டும் என்று பெண் பாடல் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டதாக அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அத்தோடு மாரிமுத்துவை தனக்கு எப்படி தெரியும் என்றும் அவர் சீரியலில் இருந்தது போன்று தான் நிஜத்தில் இருந்தாரா? என்பது போன்று பல தகவல்களை பெண் பாடல் ஆசிரியர் ஸ்வர்ண பிரியா பகிர்ந்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தன்மகள் மீது அதிகமான பாசத்தில் இருந்த மாரிமுத்து அப்பா இறந்ததற்கு மகள் பாடுவது போன்று வரிகள் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு கேட்டதாகவும் ஸ்வர்ண ப்ரியா கூறி இருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயம் ஆகியிருந்த மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் ஆக சின்னதிரையிலும் பெரிய அளவில் பிரபலமாகி கொண்டிருந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய இழப்பை தாங்க முடியாத ரசிகர்களும் பல பிரபலங்களும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பெண் பாடல் ஆசிரியர் ஸ்வர்ண பிரியா நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் ஆரம்பத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு வெப்சைட்டில் என்னுடைய கவிதைகளை நான் அப்லோடு செய்ததால் எனக்கு சில திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பாடல் எழுதுவது மட்டுமல்லாமல் டப்பிங்கும் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் ஒரு பாடகிக்காக வாய்ஸ் ஓவர் கொடுக்கப் போயிருந்தேன். அப்போதுதான் அங்கு மாரிமுத்து சாரை பார்த்தேன். அங்கே என்னுடைய வாய்ஸ் செமையா இருக்கு என்று யாரோ சொல்லி இருக்காங்க. அதை கேட்டு மாரிமுத்து சார் யாரது நான் அவங்கள பார்க்க வேண்டும் என்று என்னை வந்து பார்த்தார். பார்க்கும்போதே என்னை, "யாருமா இது..?" என்று கூப்பிட்டார். அது உடனே நான் பயந்துவிட்டேன்.
பிறகு உனக்கு எந்த ஊரு என்று கேட்டார். நான் சேலம் என்று சொன்னேன். அதற்கு அப்படியா, என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டார். நான் இப்பதான் கவிதை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன் டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். அப்படியா சரி வா உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று சொன்னார். நானும் சரி என்று வெளியில் நின்று பேசினோம்.
அப்போது நீ நல்லா எழுதுவியா? என்று கேட்டார். அதற்கு கண்டிப்பா உங்களுக்கு என்ன சூழ்நிலை சொல்றீங்களா? அதற்கு தகுந்த மாதிரி நான் எழுதி தருவேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நான் ஒரு சூழ்நிலையை சொல்கிறேன். அதற்கு நீ சரியா பாட்டு எழுதிட்டேன்னு வச்சுக்க, கண்டிப்பா நீ பாடலாசிரியராக வரதுக்கு வாய்ப்பு இருக்குன்னு ஒரு டைரக்டரா உனக்கு உத்திரவாதம் கொடுப்பேன் என்று சொன்னார்.
நானும் சரி அப்பா என்று சொன்னேன். எனக்கு அவரை பார்க்கும்போது அப்பா என்கிற மாதிரி தான் ஒரு பீல் ஆனது. அப்போ அவர்,"எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. தமிழ் சினிமாவில் அம்மாவோ, அப்பாவோ இறந்து போனால் ஒரு ஆண் அழுவது போன்று தான் பாடல் இருக்கிறது. அதுவே ஒரு பெண் பாடுவது போன்று வேண்டும். பல இடங்களில் பெண் அழுவது போன்று இருந்தாலும், அங்கே ஆணின் குரலில் தான் பாடல் வருகிறது. அதை நாம் மாற்ற வேண்டும்" என்று சொன்னார்.
நானும் அதற்கு சரி என்று சொன்னேன். தேனி, மதுரை பக்கத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு பிறகு தன்னுடைய உழைப்பால் மேலே வந்து ஒரு நபர் இறந்து போனால் அவருடைய மகள் எப்படி பாடுவாரோ அப்படி எனக்கு வேணும் என்று சொன்னார். நான் சரி எழுதிட்டு சொல்கிறேன் சார் என்று சொன்னேன். எனக்கு அவருடைய போன் நம்பர் தந்தார். நான் பத்து நிமிடத்தில் பாட்டை எழுதி அவரிடம் போன் செய்து சொன்னேன். அதைக் கேட்டு அவர் கண் கலங்கியபடி ரொம்ப அருமையா வந்திருக்குமா என்று சொன்னார்.
மாரிமுத்து அப்பா அவருடைய மனைவி எனக்கு அம்மா மாதிரி நான் எவ்வளவோ கஷ்டப்பட்டபோது எனக்கு துணையாக இருந்து என்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்னுடைய மனைவிதான். அவள் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் நான் இந்த அளவிற்கு வந்திருக்கிறேன் என்று அப்போதும் சொன்னார். அதுபோல என்னுடைய மகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுக்கும் நான் என்றால் அவ்வளவு பாசம் என்று சொல்லி இருந்தார் என்று பாடல் ஆசிரியர் ஸ்வர்ண பிரியா அந்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதுபோல தன்னுடைய பாடல் வரிகளை வைத்து விரைவில் ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கப்போவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவருடைய மரண செய்தி எனக்கு அதைவிட வேகமாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதை நம்ப முடியாமல் நான் அவருடைய வாட்ஸ் அப்புக்கு மெசேஜ் செய்து சார் நீங்கள் இல்லை என்று சொல்கிறார்களே என்னால் முடியல சார் என்று மெசேஜ் செய்தேன். அதற்கு மாரிமுத்து சாரின் மகள் தான் எனக்கு ரிப்ளை செய்தார். அவருக்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது என்று கலங்கிய படி அந்த பேட்டியில் ஸ்வர்ண பிரியா பேசியிருக்கிறார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications