பிரியங்காவை வெளியேற்ற தாமரையை டார்கெட் செய்த நிரூப்...கூலாக நோ ப்ராப்ளம் சொன்ன பிரியங்கா
சென்னை: நடப்பதைப் பார்க்கும்போது இனி பிரியங்கா மற்றும் நிரூப் இடையில் பெரிய சண்டை வெடிக்கப் போகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
டாஸ்க்கில் இருந்து வெளியேறினாலும் நோ ப்ராப்ளம் என்று கூலாக கூறிய பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பொம்மை டாஸ்க்கில் பொம்மையாக மாறிய போட்டியாளர்களை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருகின்றனர்.

புதுவிதமான டாஸ்க்
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் போட்டிருக்கும் மேக்கப்பை பார்த்து ரசிகர்கள் இது என்ன புது விதமாக இருக்கிறது என்று கலாய்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே நடக்கும் சண்டை கலவரங்கள் வேற லெவல் வைரலாகி வருகிறது. என்னதான் ஆச்சு நிரூப்புக்கு என்று ஒரு சில ரசிகர்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர். பிரியங்காவை டார்கெட் செய்து அவருடைய மதிப்பை குறைப்பதுதான் இவருடைய புது ஐடியாவா என்று பலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

மனம் மாறிய பிரியங்கா
ஏற்கனவே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தோடு இருக்கும் பிரியங்காவுக்கு, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறனர். இவருடைய ரசிகர்கள் பட்டாளம் ஆரம்பத்தில் இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் நடந்துகொண்டது ரசிகர்களை வெகுவாக கவர வைத்துவிட்டது. இந்த நிலையில் இவர் அபிஷேக் மற்றும் நிரூப்புடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று இவர்மீது ஒரு சிலர் குறை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் அபிஷேக்கின் வெளியேற்றம் இவருக்கு மனமாற்றத்தை கொடுத்துவிட்டது.

பிக் பாஸின் அறிவுரை
பிரியங்கா தற்போது தான் தன்னுடைய விளையாட்டை தன்னுடைய கேரக்டரில் விளையாட ஆரம்பித்து இருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் போது, இவரிடமே சும்மா சும்மா நிரூப் பிரச்சனையைத் தொடங்கி கொண்டிருக்கிறார் என்று பலர் நிரூப் மீது தங்களுடைய கோபத்தைக் காட்டி வருகின்றனர். இன்றைய முதல் ப்ரமோவில் பொம்மை பொம்மை டாஸ்கில் சக போட்டியாளர்கள் இந்த வீட்டில் யார் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுடைய பொம்மையை தூக்கிக்கொண்டு கூடாரத்துக்குள் ஓட வேண்டும். அப்படி கடைசியாக வரும் போட்டியாளர்கள் வைத்திருக்கும் பொம்மையில் இருக்கும் நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பிக்பாஸ் கூறியிருக்கிறது.

ரசிகர்களின் ஆதரவு
பிரியங்காவுக்கு ஆதரவாக தாமரை பிரியங்காவின் பொம்மையை தூக்கிக் கொண்டு ஓடி வரும்போது கூடாரத்தின் வாசலில் நின்று கொண்டு நிரூப், தாமரையை உள்ளே விடாமல் நிறுத்தி விட்டார். இதனால் இவர் கடைசியாக உள்ளே வந்ததாக பிரியங்கா இந்த பட்ஜெட்டில் டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று பிக்பாஸ் அறிவித்திருக்கிறது. முதல் ப்ரமோவை பார்த்ததும் நிரூப்புக்கு அதிகமான வெறுப்பான கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. என்னதான் இவர் பிரியங்காவை டார்கெட் செய்தாலும், பிரியங்காவுக்கு ஓட்டு போட நாங்க இருக்கிறோம் என்று ப்ரியங்காவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications