குக் வித் கோமாளியில் பாதியில் வெளியேற்றப்பட்ட பிஜிலி ரமேஷ்.. ரஜினி சொன்ன வார்த்தையால் மனமாற்றம்
சென்னை: நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நிலை குறைவினால் காலமாகி இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் பிஜிலி ரமேஷின் பழைய பேட்டிகளும் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது ரஜினியுடைய வார்த்தை தான் என்று ஒரு பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
சமூக வலைதளத்தின் மூலம் பிரபலம் ஆகி பலருக்கும் பரீட்சையமான காமெடி நடிகராக நடிகர் பிஜிலி ரமேஷ் இருந்து வந்தார். நடிகர் ரஜினிகாந்தின் பாபா சிம்பலை காட்டியே இவர் பிரபலமாக மாறி இருந்தார். பட விழாக்களாக இருந்தாலும் சரி அல்லது திரைப்படங்களில் இவருடைய காட்சியாக இருந்தாலும் சரி இவர் பாபா முத்திரையை காட்டியே பேமஸ் ஆகி இருந்தார்.

அதே நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் நிகழ்ச்சிக்கு குடித்துவிட்டு வந்ததாகவும் அதனால் தான் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதே நேரத்தில் பிஜிலி ரமேஷ் காத்து வாக்குல இரண்டு காதல், கோலமாவு கோகிலா, நட்பை துணை, ஜாம்பி உட்பட பல படங்களில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சின்ன திரையில் அதிகமாக தலை கட்டாமல் இருந்த நிலையில் பிஜிலி ரமேஷுக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் வாய்ப்புகள் குறைந்த பிறகு இவர் அதிகமாக வெளியே தெரியாமல் இருந்தார்.
அந்த நேரத்தில் பிஜிலி ரமேஷ் கோடிக்கணக்கில் சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டார் அதனால் தான் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று வதந்திகள் பரவி வந்தது. அந்த நேரத்தில் அவர் ஒரு பேட்டியில் நான் இதுவரைக்கும் வாங்கிய அதிகபட்ச சம்பளமே 20,000 தான் என்று கூறியிருந்தார். அதோடு கோலமாவு கோகிலா படத்தின் ப்ரமோஷனுக்காக தான் 20,000 சம்பளம் தந்தாங்க மற்ற படங்களில் நடிப்பதற்கு வெறும் 5000 முதல் 7000 வரை தான் எனக்கு சம்பளம் கிடைத்து.
ஆனால் youtube சேனல்களில் சிலர் என்னை பற்றி தவறாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நான் கோடி கோடியாக சம்பாத்தியம் பெற்று இப்போது செட்டில் ஆகிவிட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் எனக்கு கேன்சர் ஏற்பட்டுவிட்டது அதனால் நான் படுத்த படுக்கையாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு கேன்சர் எல்லாம் இல்லை இவர்கள் இப்படி சொல்வதால் நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் அனுப்பப்பட்டதற்கு காரணம் குடித்துவிட்டு வந்ததாக கூறப்பட்டது, உண்மையில் ஆரம்பத்தில் நான் குடித்தேன் ஆனால் இப்போது குடி பழக்கத்தை விட்டு சந்தோஷமாக இருக்கிறேன். அதற்கு காரணம் ரஜினிகாந்த் தான் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயம் தான் என்னை அறவே குடியை வெறுக்க வைத்தது.
ரஜினிகாந்த் சொன்னதால் தான் நான் முழுமையாக குடியை விட்டு விட்டேன் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பிஜிலி ரமேஷ் பேசியிருந்தார். ஆனால் அளவுக்கு அதிகமாக ஆரம்பத்தில் மது குடித்ததன் விளைவாகவோ என்னவோ பிஜிலி ரமேஷுக்கு கல்லீரல் செயல்பாடு குறைந்து விட்டதாகவும் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன்பு பிஜிலி ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் எல்லோரும் கண்ணீரோடு ஒரு வீடியோவில் பேசி இருந்தனர்.
அப்போது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். ஆனாலும் பிஜிலி ரமேஷ் உயிரிழந்திருக்கிறார். இது பலரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. அவருடைய குடும்பத்தினர் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications